Pages

Sunday, May 9, 2010

அன்னை ஓர் ஆலயம்

அம்மா அம்மா என்றபடியே வீட்டினுள் நுழைந்தேன். அம்மாவ காணோமே.. எங்க போயிட்டாங்கன்னு தெரியலியே, சரியாவே எங்கிட்ட போன்ல பேசலியே.. என்னாச்சி தெரியலியே... கௌரி கௌரி ஏய் கௌரி... இவளையும் காணோம் எங்கபோயிட்டா சே என்று புலம்பியபடியே வீட்டில் குட்டிபோட்ட பூனைபோல குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தேன் எரிச்சலுடன்.

ஏ ராஜா அம்மாவையும் பாட்டியையும் எங்கடா காணோம் என்றேன் என் மகனிடம். அப்பா, அம்மா அடுத்த தெருவுல இருக்கிற என் பிரண்டு மகேஷ் வீட்டுக்கு போயிருக்காங்க அம்மா.. பாட்டி எங்கபோனாங்கன்னு தெரியலப்பா.., நான் போய் அம்மாவ கூட்டிட்டு வரட்டாப்பா என்றான். சரிடா அப்பா வந்திருக்கேன்னு சீக்கிரம் கூட்டிட்டுவா என்ன என்று ராஜாவை அனுப்பி வைத்தேன். இதோ என் பையன் வந்திட்டான் அக்கா.. நா போயிட்டுவாரேன். என்று சொல்லிக்கொண்டிருந்தாள் கௌரி. அம்மா, அப்பா வந்திருக்காங்க வா போகலாம்.., என்று அவசரப்படுத்தினான் ராஜா.சரி கௌரி பாத்து பத்திரமா நடந்துக்கோ என்று சொல்லி வழியனுப்பினாள் மகேஷ் அம்மா. சரிக்கா நா வாரேன் என்று கிளம்பினாள் கௌரி. உங்கப்பா வந்து நேரமாச்சாடா., இல்லம்மா இப்பதான் ஒரு 5 நிமிசத்துக்கு முன்னாடி வந்தார் என்று சொன்னான் ராஜா.

ஏ கௌரி எங்கப்போனே.. என்று கேட்டேன் என் மனைவியிடம். இல்லீங்க மார்க்கெட் போகும்போது மகேஷ் அம்மா வீட்டுக்கு கூப்பிட்டாங்க அதான் சமையல முடிச்சிட்டு போயிட்டு வந்தேன் என்று சொன்னாள் கௌரி. சரி அதுகிடக்கட்டும், அம்மாவை எங்கே? என்று கேட்டேன். ஓ உங்கம்மாவா எங்கபோனாங்கன்னு தெரியல.. 2 நாளா ஆளக்காணோம் என்று அசால்டாக சொன்ன கௌரியை பளார் என்று கன்னத்தில் அறைந்தேன். என்னடி சொல்லுறே அம்மாவ காணோமா... எங்கப்போனாங்க சொல்லுடி சொல்லுடி மறுபடியும் கன்னத்தில் பளார் என்று அறைந்தேன். அம்மாவ விட்டுட்டு அசால்ட்டா சொல்லுறே.. என்ன நெஞ்சழுத்தம் உனக்கு, ராஸ்கல் என்று கோபத்தின் உச்சியில் நான்.

சே என்ன இவள்.. பொறுப்பில்லாதவள்., ஒருவேளை அக்கா வீட்டுல அம்மா தங்கிட்டாங்களோ..அப்படின்னாலும் எங்கிட்ட போன்ல சொல்லிருப்பாங்களே.. 10 நாள் ஆபிஸ் வேலையா பெங்களுரு போயிருந்த சமயத்துல இப்படி ஆயிருச்சே.. இப்ப என்ன செய்ய., என்று மனவேதனையுடன் கட்டிலில் படுத்துக்கொண்டு நினைவுகளை பின்னோக்கி அசைப்போட்டு கொண்டிருந்தேன்.

அம்மா அம்மா எங்கம்மா இருக்கே.. என்று சொல்லியபடியே வீட்டினுள் நுழைந்தேன். டேய்! என்ன எப்பப்பார்த்தாலும் அம்மா அம்மா தானா., நான் ஒருத்தன் இங்க குத்துக்கல்லாட்ட உக்கார்ந்திருக்கேன் கண்ணுக்கு தெரியலியா என்று அப்பா அருணாச்சலம் கேட்டார். அதானே நல்லாச்சொன்னீங்கப்பா எப்பப்பார்த்தாலும் இவனுக்கு அம்மா அம்மாதானா., நாமெல்லாம் இல்லியா என்று அக்கா செல்வி அங்கலாய்த்தாள். அடஅடஅடா., எப்ப்பார்த்தாலும் அவனை வம்புகிழுக்காம அப்பாவுக்கு மகளுக்கும் தூக்கமே வராதுபோல.., என்று ச்மையல்கட்டுல இருந்து அம்மா பர்வதம் வந்தாள்.

அம்மா எனக்கு வேலை கிடைச்சிருக்கும்மா ஆசிர்வாதம் பண்ணுங்கம்மா., எக்ஸ்போர்ட் கம்பெனியில எக்ஸ்கியூடிவ் அசிஸ்டண்ட் மேனேஜர் வேலை. மாதம் பத்தாயிர ரூபாய் சம்பளம்., பின்னாடி டபுளா இன்கிரிமென்ட் ஆகும்ன்னு சொல்லிருக்காங்க. என்றேன் மகிழ்ச்சி பொங்க. அப்பா அம்மா அக்கா எல்லோருக்கும் மிகுந்த சந்தோசம். பாத்தியா செல்வி நம்மிடம் சொல்லாம நேரா அம்மாட்ட சொல்றான்.,ம் ம் நடக்கட்டும் என்றார் அப்பா. அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா., எல்லாம் உங்க நண்பர் ரெக்கமென்ட்ல தான். இந்தவேலை கிடைக்க நீங்கதான் காரணம் உங்களுக்குதான் முதல்ல தேங்க்ஸ் சொல்லணுப்பா என்றேன். நீ நல்லாருந்தாலே எங்களுக்கெல்லாம் சந்தோசந்தான் என்று எல்லோரும் என்னை வாழ்த்தினர்.

சில மாதங்களுக்கு பின்னர் அப்பாவுக்கு உடம்பு சரியில்லாம படுத்தபடுக்கையாயிட்டார். முன்னேமாதிரி அவரால் எங்கும் செல்லமுடியவில்லை. அம்மாதான் அப்பாவ நல்லா கவனிச்சிக்கிட்டாங்க. அடுத்த மாதத்தில் அப்பா காலமானார். அப்பாவின் மறைவு எங்களுக்கு பெரிய இழப்பாக இருந்தது. இருந்தும் அம்மாதான் சமாளித்து குடும்பத்த நடத்துனாங்க. அக்காவுக்கு மாப்பிள்ளை பார்த்தோம். ஒரு சில மாதங்களில் கும்பகோணத்துல இருந்து நல்லவரன் அமைஞ்சது. அக்காவுக்கும் சம்மதம்; அப்புறம் ஆறு மாதத்துல கல்யாணம் நடத்தவேண்டி இருந்தது; பணம் பற்றாக்குறை, அங்கஇங்கேன்னு கடனஉடன வாங்கி கல்யாணம் நடத்தினோம். அத்திம்பேர் ரொம்ப தங்கமானவர். எங்கக்காவ நல்லா வச்சிக்குவாருன்னு எனக்கு நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை இன்றுவரை பொய்க்கவில்லை.

டேய் குரு! முன்னமாதிரி நான் இல்லைடா என்னால முடியல., வயசாக்கிட்டே போகுதுடா உனக்கு ஒரு கல்யாணத்த பண்ணி வச்சிட்டேன்னா எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும்டா என்று அம்மா சொன்னார்கள்.
என்னம்மா இப்பதான் அக்காவுக்கு கல்யாணம் செய்து வச்சிருக்கோம்; அந்த கடனே இன்னும் முடியல., அதுக்குள்ள எனக்கா! இரண்டு மூணு வருசம் கழியட்டும் அப்புறம் பார்ப்போம் என்றேன் அம்மாவிடம்.

அதெல்லாம் முடியாது., உனக்கு பொண்ணுபார்க்கத்தான் போறேன்., வீட்டுக்கு விளக்கேத்த மகாலட்சுமி கூட்டிட்டுவாரேன் பாரு; ஆமா சொல்லிப்புட்டேன் என்ற அம்மாவிடம் மறுப்பு சொல்லமுடியவில்லை.
அம்மா பெண்தேட ஆரம்பிச்சாங்க; திருச்சிக்கு சுத்துவட்டாரத்துல பார்த்தாங்க., சரியா அமையவே இல்லை. அம்மாவும் சளைக்கலை., கடைசியில நாகப்பட்டினத்துல அமைந்தது. என்ன செய்ய தஞ்சாவூருக்கும் நாகப்பட்டினத்துக்கும் கொஞ்சம் தொலைவுதான்.

பேரு கௌரி., நல்ல சொத்துபத்து., பெண் லட்சணமா இருக்காடா., நம்ம குடும்பத்துக்கு ஏத்தவளா இருப்பாடா., நாளைக்கே பொண்ணுபார்க்கபோறோம் ரெடியாயிரு என்ற அம்மாவின் வார்த்தைய என்னால் தட்ட முடியல. அடுத்த 2 மாதத்துல கல்யாணம் ஆயிருச்சி. கௌரி அழகாக இருந்தாள். என்னை மிகவும் கவர்ந்துவிட்டாள்.

அவளிடம் இப்போது சிலமாதங்களாக நிறைய மாற்றங்களை காண்கின்றேன். என்னவென்று கேட்டால் ஒன்றும் அவள் சொல்வதில்லை; நானும் அப்படியே விட்டுவிட்டேன். என்னாங்க கல்யாணம் ஆகி ஆறு வருசமாயிருச்சி., ஒரு கார்வாங்கலாம், புதுவீடு வாங்கணும் என்று இப்படி சிலவற்றை சொல்லிக்கொண்டிருந்தாள். நானும் காதில்வாங்கியும் வாங்காமலும் இருந்தேன். அப்பப்ப சத்தம் போடுவேன்; ஆனால் அடித்ததில்லை. ஆனால் இன்று அம்மாவை காணவில்லை. அந்த கோபத்தில் அடித்துவிட்டேன். இப்போது கௌரி என்ன செய்கிறாளோ., சே.. என்ன செய்கிறாள் என்று பார்ப்போம்; கட்டிலிலிருந்து எழுந்து சமையலறைக்கு சென்றேன்.

அங்கே ராஜா அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தான். அம்மா! சண்டையா போட்டா வீட்டவிட்டு போயிரலாமோ., நான் உன்னை அப்படியெல்லாம் செய்யவிட‌மாட்டேன் என்ற மகனை அணைத்த கௌரியின் கண்களிலிருந்து தாரைதாரையாக நீர் கோர்த்திருந்தது. என்னங்க என்னை மன்னிச்சிருங்க., நாந்தான் அத்தைய சண்டபோட்டு வீட்டை விட்டு வெளிய அனுப்பிட்டேன். அத்தையின் நல்லமனசை புரிஞ்சிக்காம மத்தவங்க பேச்சை கேட்டு புத்தி தடுமாறிட்டேன். என்னை மன்னிச்சிருங்க என்ற கௌரியை நெஞ்சில் அணைத்து ஆறுதல் சொன்னேன்.

சரிவா அக்காவுக்கு போன் பண்ணிகேப்போம். அக்கா அம்மா அங்கே வந்திருக்காங்களா என்று கேட்டேன். என்னடா குரு! அம்மா இங்கே வரலையே.. என்னாச்சி சொல்லுடா அம்மாவ எங்கே என்றாள் செல்வி அக்கா மறுமுனையில். கௌரி சண்டை போட்டதால் அம்மா கோவிச்சிக்கிட்டுபோயிட்டாங்க. காணோம் அம்மாவை என்று வருத்தத்துடன் சொன்னேன் அக்காவிடம்.


தஞ்சாவூரில் நிறைய இடங்களில் தேடினேன். அம்மாவை காணவில்லை. பசிக்குது என்ற ராஜாவுக்கு பிரட் வாங்க கடையில் நுழையும்போது எதிரே உள்ள அனாதை ஆசிரம வாசலில் அம்மா நின்று கொண்டிருந்தாள்.

அம்மா கண்ணீருடன் வரவேற்றாள். அம்மா எங்கம்மா போனே என்னவிட்டுட்டு உன்னைய எங்கெல்லாம் தேடினேன் என்றேன் கண்களில் கண்ணீருடன். ஹைய்யா பாட்டி என்ற ராஜா, அம்மாவைக் கட்டிக்கொண்டான். கௌரியும் அம்மாவிடம் மன்னிப்பு கேட்டாள்.

**********************************


அனைவருக்கும் என் இனிய அன்னையர்தின வாழ்த்துக்கள்.

உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

,

Post Comment

39 comments:

  1. அன்னையர் தினத்தில் நல்ல பதிவு,

    ReplyDelete
  2. நல்ல முயற்சி சேக்மைதீன். இன்னும் நிறைய புனைவுகளை எழுதுங்கள்.

    ReplyDelete
  3. நெகிழ வைக்கும் கதை. அருமை.

    ReplyDelete
  4. ம்.....செண்டிமெண்ட் நல்லா இருக்கு ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  5. க‌தை ந‌ல்லாயிருக்கு ஸ்டார்ஜ‌ன்..

    ReplyDelete
  6. அருமையான இடுகை..

    ReplyDelete
  7. அன்னையர் தினத்தில் அருமையான கதை.

    ReplyDelete
  8. அன்னையர் தினத்தில் நல்ல பதிவு ஷேக்,


    நேரம்கிடைக்கும்போது பார்க்கவும்
    http://fmalikka.blogspot.com/2010/05/10.html

    ReplyDelete
  9. நிறைய எழுதுங்கள் நண்பா

    வாழ்த்துக்களுடன்

    விஜய்

    ReplyDelete
  10. வாங்க செந்தில்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  11. வாங்க சரவணகுமார்

    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

    ReplyDelete
  12. வாங்க ஜெய்லானி

    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

    ReplyDelete
  13. வாங்க சித்ரா

    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

    ReplyDelete
  14. வாங்க சைவகொத்துப்பரோட்டா

    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

    ReplyDelete
  15. வாங்க ஸ்டீபன்

    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

    ReplyDelete
  16. வாங்க இர்ஷாத்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  17. வாங்க அக்பர்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  18. வாங்க டிவிஆர் சார்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  19. வாங்க மலிக்கா

    உங்கள் பதிவு பார்த்தேன்., மிக அருமை அருமை. நல்ல விளக்கங்கள்.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  20. வாங்க நண்பா விஜய்

    உங்கள் ஆதரவுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  21. வாங்க மைதிலி மேடம்

    வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  22. அருமையான கதை., நல்லாருக்கு ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  23. அன்னையர் தினத்தையொட்டி நெகிழ்வான பதிவு ஸ்டார்ஜன்.
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  24. அன்னையர் தினத்துக்கேற்ற பொருத்தமான அருமையான இடுகை

    ReplyDelete
  25. நல்ல கதை நண்பரே , உங்கள் புகழ் மேநேம்ளும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. வாங்க மின்மினி @ நன்றி பாராட்டுக்கு..

    வாங்க ஹேமா @ நன்றி பாராட்டுக்கு..

    ReplyDelete
  27. வாங்க ஸாதிகா அக்கா @ நன்றி பாராட்டுக்கும் வருகைக்கும்

    ReplyDelete
  28. வாங்க சசிக்குமார் @ நன்றி பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும்..

    ReplyDelete
  29. வாங்க ஸ்ரீராம். @ நன்றி பாராட்டுக்கு..

    ReplyDelete
  30. அருமையான பதிவு நண்பா.
    அன்னையர் தினத்தில் மகுடமாய்.
    நல்ல எழுத்து நடை. இன்னும் எழுதுங்கள்.

    ReplyDelete
  31. அன்னை ஓர் ஆலயம் தான், ரொமப் அருமையான பதிவு

    ReplyDelete
  32. வாங்க குமார் @ நன்றி வருகைக்கும் தொடர்ந்து தந்துவரும் ஆதரவும் என்னால் மறக்கமுடியாது. நன்றி நன்றி

    ReplyDelete
  33. வாங்க ஜலீலா @ நன்றி நன்றி கருத்துகளுக்கும் தொடர்ஆதரவுக்கும்..

    ReplyDelete
  34. அன்னையர் தினத்தில் அருமையான கதை

    ReplyDelete
  35. வாங்க ஜெஸ்வந்தி @ நன்றி நன்றி கருத்துகளுக்கும் தொடர்ஆதரவுக்கும்..

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்