Pages

Saturday, May 29, 2010

அவன்

அந்த தெருவில் எல்லா வீடுகளும் உறங்கிக்கொண்டிருந்தன. எங்கும் ஒரே நிசப்தம். அந்த வீட்டை இருகண்கள் நோட்டமிட்டன. சுற்றிலும் ஆட்கள் வருகிறார்களா என்று கண்கள் தேடின. மெல்ல அந்த வீட்டின் அருகில் கால்கள் முன்னேறின. அவன் அந்தவீட்டின் கேட்டை தன் திறமையைக் கொண்டு சத்தமில்லாமல் திறந்தான்.

ஊ..ஊ..ஊஊவ்..ஊவ்..ஊவ் என நாயின் ஊளைச்சத்தத்தால் கலக்கமுற்றாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் மெதுவாக முன்னேறினான். திடீரென அந்தவீட்டு நாய் முழித்து சிலிர்த்துக்கொண்டு குரைப்பதற்கு தயாரானது. உடனே அவனுடைய மின்னல்வேக புத்தியினால் கையில் வைத்திருந்த பிஸ்கெட் பாக்கெட்டை நாயின் முன்னால் வீசினான். அதைப்பார்த்ததும் அவன்பின்னால் வாலாட்டிக்கொண்டே வந்ததை தடவிவிட்டுக் கொண்டு மேலும் முன்னேறினான்.

ஷூவின் சத்தம் கேட்காதவண்ணம் அவனுடைய நடை இருந்தது. ஒரு கம்பீரமான நடை. கண்களில் கண்ணாடியும் தலையில் தொப்பியும் வாயில் சிகரெட்டும் அச்சுஅசல் ஒரு சினிமாஹீரோ போல காட்டிக்கொண்டிருந்தது அவனுடைய தோற்றம். உங்களுக்கு இஷ்டமான ஹீரோக்களை நினைத்துக் கொள்ளுங்கள்.

மாடிப்படிகளில் விறுவிறுவென ஏறி ஒவ்வொரு அறையாக பார்த்துக் கொண்டே வந்தான். அவளின் பெட்ரூமுக்கு அவன் கால்கள் முன்னேறின. தட்டினான் பதில் இல்லாததால் அடுத்த அறையை அவன் கண்கள் தேடி விரைந்தன.

படித்துகொண்டிருந்த அவளுக்கு திக்திக்திக் என்றானது. வேகமான இதயத்துடிப்பால் அவளுக்கு அந்த ஏசி அறையிலும் வேர்த்துக் கொட்டியது. சத்தமில்லாமல் மெல்ல அடுத்த அறைக்கு சென்று கதவை தட்டினாள்.

என்னம்மா இந்த நேரத்தில்.. என்றபடி அவளுடைய மாமனாரும் மாமியும் மலங்க மலங்க கண்ணை கசக்கியபடி கேட்டனர். அத்தை, மாமா நம்மவீட்டுக்கு திருடன் வந்திருக்கான். எங்கம்மா அவன்.. அடுத்த ரூமில் இருக்கிறான் என்று அவள் சொன்னதும் ஒரு கட்டையை எடுத்துக் கொண்டு, மாமா அந்த அறையை நோக்கி முன்னேறினார்.

மெல்ல அறையை திறந்து அவருடைய கண்கள் அவனைத் தேடின. பின்னால் பார்த்தபடியே வந்த அவருக்கு வேகமாக எதன் மேலோ மோதியதுபோல அதிர்ந்து ஏறிட்டார். அடப்பாவி நீயா?!..

நைட் நேரத்துல திகில்நாவல் படிக்காதேன்னா கேட்கிறீயாடி நீ.. என்று அவளை அவன் கடிந்து கொண்டான்.

ஏன்ம்பா நீ நேரத்தோடு வரலாமே.. என்றபடி அவர்கள் சென்றார்கள்.


,

Post Comment

34 comments:

  1. நல்லா கிளப்பறீங்க பீதிய ..

    நடை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நல்லாயிருக்குங்க ஸ்டார்ஜன்...அசத்துங்க

    ReplyDelete
  3. நல்லவேளை உருட்டுக்கட்டையால நாலு விழுறதுக்கு முன்,தெரிஞ்சுச்சு. இல்லைன்னா!! :-)))

    நல்லாருக்கு கதை.

    ReplyDelete
  4. ஆஹா.............. நல்லாவே கிளப்பிட்டீங்க பீதிய

    ReplyDelete
  5. கதை முடிவில் நகைசுவை நன்றாக உள்ளது.

    ReplyDelete
  6. அந்த திகில் க‌தை ந‌ல்லா இருக்கும் போல‌ இருக்கு ஸ்டார்ஜ‌ன்.. புக்கு பேரை சொல்லுங்க‌..

    ReplyDelete
  7. ஸ்டீபன் நீங்க என்ன சொல்றீங்க புரியலியே..

    ReplyDelete
  8. //அந்த திகில் க‌தை ந‌ல்லா இருக்கும் போல‌ இருக்கு ஸ்டார்ஜ‌ன்.. புக்கு பேரை சொல்லுங்க‌..//

    ஸ்டீபன் என்ன இருந்தாலும் குருவை நீங்க இப்படி கலாயக்கப்படாது... பாருங்க அவருக்கு புரியல... புரியற மாதிரி கலாயக்கனும்...

    குரு இந்த கதையை எங்கருந்து சுட்டீங்கன்னு ஸ்டீபன் கேட்கறாரு??? :))

    நல்லவேளை லேபிள்ல சிறுகதைன்னு போட்டிருந்தீங்க.... நானும் வேற என்னவோன்னு நினைச்சேன் ...:))

    ReplyDelete
  9. நல்லாயிருக்கு ஸ்டார்ஜன்.

    ஸ்டீபன் கேட்டது அந்தப் பொண்ணு படிக்கிற புத்தகத்தோட பேர்னு நெனைக்கிறேன்.

    ReplyDelete
  10. திகில் கதையா !!!!கலக்குங்க!!!!

    ReplyDelete
  11. திக் திக் திக் என்று ஆரம்பித்து முடிவு இப்படி இருக்கும்னு நினைக்கலை,ஸ்டார்ஜன் .

    ReplyDelete
  12. பயப்பிட வைக்காதீங்க ஸ்டார்ஜன் !

    ReplyDelete
  13. விறுவிறுப்பாக இருந்தது......தொடர்ந்து படித்தால்... முடிந்துவிட்டது!! சூப்பர்

    ReplyDelete
  14. நல்ல சுவாரஸ்யமான திகில் கதை. LK சொன்னது போல் நடை ரசிக்கும் படியாக இருக்கிறது.

    ReplyDelete
  15. திகில் கதைநன்றாக வந்துள்ளது முடிவு ..ஆச்சரியம்.

    ReplyDelete
  16. கலக்கிட்டீங்க ...

    ReplyDelete
  17. its nice starjan , nalla viruviruppa pochu ., thidarkathai thavathu intha mathiri try panunga .,,

    ReplyDelete
  18. வாங்க எல்கே @ நன்றி வருகைக்கும் பாராட்டுக்கும்..

    ReplyDelete
  19. வாங்க அஹமது இர்ஷாத் @ நன்றி வருகைக்கும் பாராட்டுக்கும்..

    ReplyDelete
  20. வாங்க அமைதிசாரல் அக்கா @ அய்யயோ அடிவிழுந்திச்சின்னா தாங்குவானா அவன். பாவம் அவன்.. காப்பாத்திட்டேன் அடிவிழாமல்.

    நன்றி அக்கா வருகைக்கும் பாராட்டுக்கும்.

    ReplyDelete
  21. வாங்க அத்திரி @ நன்றி வருகைக்கும் பாராட்டுக்கும்.

    ReplyDelete
  22. வாங்க ஸாதிகா அக்கா @ அப்ப்டியா மிக்க மகிழ்ச்சி.. அதுதான் எனக்குவேணும். வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி அக்கா..

    ReplyDelete
  23. ஸ்டீபன் @ ஓஹோ நீங்க அந்த பொண்ணு படிக்கிறபுக் பேரக்கேட்டீங்களா.. நான் வேற என்னவோ நினைச்சிட்டேன். அது ராஜேஷ்குமார் எழுதுன ஒரு நாவல்.

    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

    ReplyDelete
  24. சிஷ்யா @ வாழ்க வளமுடன்.. வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  25. சரவணகுமார் @ நன்றி பாராட்டுக்கும் வருகைக்கும். ஸ்டீபன் சொன்னதை தெளிவுபடுத்தியதுக்கு நன்றி.

    ReplyDelete
  26. ஜெய்லானி @ நன்றி பாராட்டுக்கும் வாழ்த்துக்கும்.

    ReplyDelete
  27. அப்படியே ஒரு கிரைம் கதையா மாத்திருக்கலாம்.

    ReplyDelete
  28. ஆசியாக்கா @ ரொம்ப நன்றி அக்கா பாராட்டுக்கு..

    ஹேமா @ நன்றி பாராட்டுக்கு..

    ReplyDelete
  29. வாங்க கௌசல்யா @ நன்றி முதல் வருகைக்கும் பாராட்டுக்கும்.

    ReplyDelete
  30. அக்பர் @ நன்றி வருகைக்கும் பாராட்டுக்கும்.

    ReplyDelete
  31. நிலாமதி @ நன்றி வருகைக்கும் பாராட்டுக்கும்

    ReplyDelete
  32. செந்தில் @ நன்றி வருகைக்கும் பாராட்டுக்கும்.

    ReplyDelete
  33. ரோகிணி @ நன்றி வருகைக்கும் பாராட்டுக்கும். தொடர்கதை எழுத முயற்சிக்கிறேன். நன்றி ஊக்குவிப்புக்கு.

    ReplyDelete
  34. ஹூசைனம்மா @ நன்றி வருகைக்கும் பாராட்டுக்கும். கிரைம் கதை எழுத முயற்சிக்கிறேன். நன்றி ஊக்குவிப்புக்கு.

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்