Pages

Thursday, July 1, 2010

எல்லாம் நீ., பின்னால் நான்..

மனம் போனபோக்கில் நடந்துவந்து கொண்டிருந்தேன்.. இது நடந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. எப்படி இப்படியெல்லாம் ஆனது என்று இதுவரை எனக்கு தெரியவில்லை. நான் என்ன தப்பு செய்தேன்?.. இந்த மரமண்டைக்கு எதுவுமே புரியவில்லை. யாருக்காவது தெரிஞ்சா சொல்லக்கூடாதா..?..

என்பெற்றோருக்கு நான் ஒரே மகன். ஒருபிள்ளை என்பதற்காக எனக்கு நிறைய செல்லம் கொடுத்து வளர்த்தனர். நான் கேட்டதெல்லாம் போக கேட்காத‌தெல்லாம் வாங்கிக் கொடுத்தனர். பள்ளியில் படிக்கும்போது நாந்தான் முதலாவதாக இருக்கவேண்டும் என்று நினைப்பேன். எங்கப்பா அந்த பள்ளியின் நிர்வாகி. அதனால் எனக்கு பள்ளியிலும் செல்வாக்கு அதிகமானது.

சங்கர், முத்து, கோமதி, இந்த மூன்றுபேரும் மாறிமாறி முதல் மூன்று ராங்குகளுக்குள் வருவார்கள். என்னால் நாலாவதோ ஐந்தாவதோத்தான் வரமுடிந்தது. வெளியில் எங்கும் முதலாவதாக கேட்டதெல்லாம் கிடைக்கும்போது பள்ளிக்கூடத்தில் மட்டும் இல்லையென்றால் எப்படி இருக்கும்?.. கோபம் அதிகமானது. எப்படியாவது இவர்களை பழிவாங்க வேண்டும் என்ற வெறி மட்டும் மனதில் சினங்கொண்ட சிறுத்தைப்போல உறுமிக் கொண்டிருந்தது. எப்படியாவது முதல்ராங் வாங்கவேண்டுமென்ற வெறிதான் என்முன்னால் தெரிந்தது.

வீட்டிற்கு வந்ததும் உம்மென்று இருந்த என்னை, " என்னடா கார்த்திக், ஏன் உம்முன்னு இருக்கே.. என் செல்லம். பாரு சரியா சாப்பிடலபோல.. இந்தா சாப்பிடு" என்று சொல்லி அம்மா சாப்பாட்டை எனக்கு ஊட்டிவிட்டதும்தான் நான் கொஞ்சம் ஆசுவாசமானேன். இரவெல்லாம் ஒரே யோசனை பண்ணிபண்ணி தலைவலி அதிகமானது. அதிகநேரம் கண்முழித்ததால் என்னால் காலையில் சீக்கிரம் பள்ளிக்கு செல்லமுடியவில்லை. முதல்பாடவேளை கணக்கு. கணக்கு சார் சங்கரன்பிள்ளை ரொம்ப கண்டிப்பானவர். நான் லேட்டா வந்ததினால் ஒருபிடி பிடித்துவிட்டார். சிரித்த அனைவரையும் நான் முறைத்ததால் சிரிப்பதை நிறுத்திவிட்டனர். ஆனால் சங்கர், முத்து, கோமதி, மூவரும் கேலிசெய்தபடி சிரித்தது மேலும் வெறியை அதிகமாக்கியது.

இந்த மூவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்ததினால் என்னால் சுலபமாக பிரிக்கமுடியவில்லை. அதற்கான தருணத்தை எதிர்நோக்கி காத்திருந்தேன். அவர்களது பலவீனங்களை ஒவ்வொன்றாக சேகரிக்க ஆரம்பித்தேன்.

இப்படி தினமும் இரவில் யோசனை செய்ததால் பள்ளிக்கு லேட்டாக செல்வது வாடிக்கையானது. அதையாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சரி நாமும் அவர்களைப்போல படித்துதான் முதல்ராங் எடுக்க நினைக்கிறேன். மூவரும் முந்திக்கொள்கிறார்கள். முத்து ஒரு சரியான பயந்தாங்கொள்ளி. அதனால் அவனை எளிதில் மிரட்டி என்வழிக்கு கொண்டுவந்தேன். முத்துவுக்கு வேண்டியதெல்லாம் கொடுத்து சரிகட்டினேன்.

ச‌ங்கர் கொஞ்சம் முரண்டுபிடித்தான். அதனால் அவனை வழிக்கு கொண்டுவருவது கொஞ்சம் கஷ்டம்தான். இப்போது கோமதி முதல்ராங், சங்கர் இரண்டாவது, நான் மூணாவது இந்த நிலையிலே சென்று கொண்டிருந்தது. சில சமயம் சங்கர் முதல்ராங் எடுப்பான். ஒருதடவை அரையாண்டு தேர்வு நடந்துகொண்டிருக்கும்போது சங்கரின் டவுசர் பாக்கெட்டில் பிட்பேப்பரை வைத்து விட்டேன். அன்று தேர்வு அறைக்கு சங்கரன்பிள்ளை சார்தான் கண்காணிப்பாளர். அவர் ஒவ்வொருவராக சோதனை செய்யும்போது சங்கர் வசமாக மாட்டிக்கொண்டான்.

"ஏண்டா இதுதான் நீ முதல்ராங் எடுக்கிற லட்சணமா.. அதானே பார்த்தேன்., மூஞ்சியும் முகரையும் பாரு.. வெருவாக்கெட்ட மூதி.. இப்பவே உங்கப்பாவைக் கூட்டிட்டுவா. பரிட்ச்சை எழுதிகிழித்த லட்சணம்போதும்." என்றார். அவன் அழுதுஅரற்றுகிறான். "சார் சார், இந்த பேப்பர் எப்படி பாக்கெட்டுக்குள்ள வந்ததுன்னு தெரியாது?.. நான் ஒழுங்கா படிச்சித்தான் முதல்ராங் எடுத்தேன். பிட்டெல்லாம் அடிச்சது கிடையாது; நம்புங்க சார்" என்ற சங்கரை சார் நம்பவேஇல்லை. எல்லாப்பிள்ளைகளும் அவனை பாவமாக பார்க்க, நான் மனதுக்குள் கைகொட்டி சிரித்து மகிழ்ந்தேன்.

இந்த சம்பவத்துக்கு பின்னால் அவனால் சரியாக படிக்க முடியவில்லை. எல்லாத்தேர்வுகளிலும் குறைவான மார்க்தான் வாங்கினான். ஆனால் இந்த கோமதி இருக்காளே.. எம்மாடியோவ் பயங்கரமான ஆள்தான். ஆள் பார்க்கிறதுக்கு குட்டைச்சி; உர்ன்னு கமுக்கமா இருப்பாள். இப்போது எனக்கும் அவளுக்கும்தான் போட்டியே..

அவளை எல்லாவழிகளும் தோற்கடிக்க முயற்சித்தால் அதுஎனக்கே பாதகமாக முடியும்போது வருத்தமாக இருந்தது. என்ன செய்து தோற்கடிக்க என்று தினமும் யோசித்தேன். ம்ஹும்.. முடியல.. ஆனால் நான் விடவில்லை; தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருந்தேன். அப்போது அவள் மௌனமாக இருப்பது எனக்குள் என்னவோ செய்தது.

இப்படியாக எட்டாம்வகுப்பும் படித்து முடித்தாகிவிட்டது. அவள் பள்ளி மாற்றலாகிபோனாலும் அவள் எந்தபள்ளியில் சேர்கிறாளோ அதில் நானும் சேர்ந்தேன். சும்மா விட்டுடமுடியுமா?.. என்ன..

கல்லூரியிலும் தொடர்ந்தேன். அவளை பார்க்கும்போதெல்லாம் என்னவோ ஆகிறது. என்ன காரணம் என்று தெரியவில்லை. அவளை ஒருநாள் பார்க்கவில்லை என்றால் என்னால் இருக்கமுடியவில்லை. கூடவே இருக்கணும் என்று தோன்றுகிறது.

ஒருநாள், என்னையறியாமல் அவளிடம் 'நான் உன்னை காதலிக்கிறேன்' என்று சொல்லிவிட்டேன். அவளிடமிருந்து பலத்த எதிர்ப்பு வரும் என்று எதிர்பார்த்த நிலையில் அவள் மௌனமாக இருந்தது எனக்கு மேலும் காதல் அதிகரித்துவிட்டது. அதன்பின்னர் என்னுள் நிறைய மாற்றங்கள். முன்பிருந்த பொறாமை, ப‌ழிவாங்கும் எண்ணம் முற்றிலும் மறைந்து விட்டது.

நானும் அவளும் நன்றாக படித்து நல்லமதிப்பெண்கள் பெற்றோம். என்வாழ்க்கையில் அவள் மனைவியானால் எப்படி இருக்கும்?.. கனவு காண ஆரம்பித்தேன். அந்த கனவை நனவாக்கினர் என்பெற்றோர். ஆம் இப்போது அவளை நான் திருமணம் செய்யப்போகிறேன். எவ்வளவு சந்தோசமாயிருக்கிறது தெரியுமா... தலைகால் புரியவில்லை. ரொம்ப சந்தோசம்.. இருக்காதா பின்ன, சின்னவயதில் என்னோட போட்டிபோட்டவள் இப்போது என்மனைவியாக.. அசத்திட மாட்டேன் அசத்தி.. இனிமேல் அவள் எனக்கு சொந்தம், என்சொத்து, எனக்கு உரிமையானவள்.. நினைக்க நினைக்க.. என்னால் வார்த்தைகளில் சொல்லமுடியவில்லை.

ஜூன் 20ம்தேதி கல்யாணம். மணமேடையில் என் அருகில் கோமதி. நான் மகிழ்ச்சியுடன் தாலிக்கட்டியதை அவள் ஏற்றுக்கொண்டாள்.

கல்யாண வைபோகமெல்லாம் முடிந்து முதலிரவு. நண்பர்களுடன் அரட்டை அடித்துவிட்டு சாந்திமுகூர்த்தம் குறித்த நேரத்தில் எனது அறைக்கு சென்றேன். கதவை திறந்து உள்ளே நுழைந்தவன் திக்கித்து நின்றேன். அப்போது அங்கே... அங்க... அங்... என்கோமதி.., கோமதி.. கோமதி.. என்று கதறிவிட்டேன். என்னுடைய அழுகை சத்தம் கேட்டு அனைவரும் ஓடிவந்து பார்த்தால் கோமதி விட்டத்தில் தொங்கிக் கொண்டிருந்தாள்.

அய்யோ இப்பநான் என்ன செய்வேன்?.. அப்போது அங்கே ஒரு பேப்பர் காற்றில் பறந்துவந்து என் முகத்தில் அறைந்தது. என்னவென்று அரக்கபரக்க படித்தேன்.

அன்புள்ள என் இன்னாள் கணவரும் முன்னால் வகுப்புத்தோழனுமான கார்த்திக்கு கோமதியின் மடல்,

என்னை கல்யாணம் செய்ததால் உங்களுக்கு இப்போது சந்தோசமா இருக்குமே.. இந்த சந்தோசம் நீடிக்கலாமா.. நீடிக்ககூடாதே.. ஏன்னா நம் இரண்டுபேருக்குமுள்ள போட்டி என்னாகிறது?.. என்னை என்ன உன்னமாதிரின்னு நினைச்சியா.. ஆமா உனக்கென்ன மரியாதை?.. நண்பன் என்றவார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா உனக்கு?. எப்போது நீ பள்ளியில் சேர்ந்தியோ அப்பவே எங்கள் மூவருக்கும் உள்ள நட்பை உடைத்துவிட்டாய்.

முத்துவும் சங்கரையும் போல நானும் உன்வலையில் விழுந்து ஏமாறுவேன் என்ற நினைப்பை உடைத்தெரிந்தேன் பார்த்தியா.. இப்போது நான் சாகிறதுக்கு வருத்தப்படவில்லை; மாறாக சந்தோசம்தான். உன் ஒவ்வொரு நடவடிக்கையையும் உனக்கு தெரியாமல் கண்காணிக்க ஆரம்பித்தேன். சங்கரை நீ மாட்டிவிட்டதும் எப்படி அழுதேன் தெரியுமா?.. நீ என்னை பழிவாங்க தொடர்ந்தாயே அப்பவே உன்னை பழிவாங்க முடிவு செய்துவிட்டேன்.

ஆனால் நீ காதல்வலையில் சிக்கினாய். அப்போதும் உன்மேல் எனக்கு வெறுப்புதான். நான் எதிர்பாராதவேளையில் உன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி என்னை வலுக்கட்டாயமாக மனைவியாக திருமணம் செய்தது எனக்குள் பேரிடி. எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை. உன்னோடு வாழும் இந்தவாழ்க்கையையும் போட்டியாக்க விரும்பவில்லை. இப்போது நாந்தான் ஜெயித்தேன் பார்த்தாயா.. உன்னால் என்னை ஜெயிக்கவேமுடியாது..

இப்படிக்கு

கோமதி.

படித்ததும் ஓவென கதறினேன்.....

இப்போதும் அவளைத்தேடித்தான் செல்கிறேன். யாராவது பார்த்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்...

,

Post Comment

18 comments:

  1. நல்ல பதிவு நண்பரே . உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. யம்மாடி பயங்கர டெரர்ரால்ல இருக்கு. திகில் படம் பார்த்த மாதிரி.

    அவளை பார்த்த கண்டிப்பா சொல்றோம் ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  3. சில நேரம் இப்படியும் நடந்திருக்கிறது. நல்லாருக்கு.

    ReplyDelete
  4. இது முட்டாள்தனம்,இதற்காக கல்யாணம் வரை போயிருக்க வேண்டாம்..

    அண்ணே கதையில் ஒரு உயிரோட்டம் வைத்து எழுதுங்கள்..இது சினிமாத்தனம்...

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. நல்லாயிருக்குங்க ஸ்டார்ஜன்...

    ReplyDelete
  7. மர்மநாவல் மாதிரி இருக்கிறது ..சும்மா கற்பனை தானே.நல்லாக் வந்திருக்கு சார் பாராடுக்கள்.

    ReplyDelete
  8. க‌தை ந்ல்லா இருக்கு ஸ்டார்ஜ‌ன்....

    ReplyDelete
  9. ஒரு நாவல் படித்தது போன்று இருந்தது.
    அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள் சேக்.

    ReplyDelete
  10. நல்லா இருக்கு ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  11. கதையில் இன்னும் சுவாரசியத்தை கூட்டி இருக்கலாம். மற்றபடி கதை நல்லாருக்கு.

    ReplyDelete
  12. குருவே.... கூல் டௌன்! ஏதோ ஜாலி கதைனு படிக்க ஆரம்பிச்சா...... அம்மாடி!

    ReplyDelete
  13. பாராட்டுக்கள் ஸ்டார்ஜன்.கதையில் உயிரோட்டம் போதாது.அழகாக்கலாம்.

    ReplyDelete
  14. நல்லாருக்கு சார் , ஆனா பழிவாங்க தற்கொலை செய்துகொள்வது கொஞ்சம் ரியாளிடிக்கா இல்லை

    ReplyDelete
  15. ஸ்டார்ஜன்,

    கதை நல்லாயிருக்கு. முடிவில் சாக வைத்திருக்க வேண்டாம். பொறாமையோடு படித்த கதை சோகத்தில் முடிந்தது வருத்தமே.

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்