சண்டை இது ஒரு இருக்கிறதுலயே மனித அழிவுக்கு பயங்கரமான ஆயுதமாக உள்ளது . சண்டைன்னா சட்டை கிழியத்தானே செய்யும் என்கிற மாதிரி ஒருத்தர் ஒருத்தர் சண்டை போட்டுக்கிறாங்க . சண்டை தான் ஒரு பிரச்சனைக்கு தீர்வா , சொல்லுங்க பார்ப்போம் .
சண்டை எப்படி வருதுன்னா , ஒருத்தர் வச்சிருக்கிற பொருளை அபகரிக்க நினைக்கும் போது தான் வருகிறது . நம்மிடம் இல்லாது அடுத்தவன்ட்ட இருக்கும் போது ஏற்படுகிற பொறாமை தான் இம்புட்டுக்கும் காரணம் . அது பொருள் மட்டுமல்ல வேற எதுவாகவும் இருக்கலாம் .
அவன் நல்லாருக்கான் , நாம நல்லா இல்லையடா என்கிற ஆதங்கம் , வேதனை , பொறாமை இதெல்லாம் நம்ம புத்தியில ஏறும் போது புத்தி தடுமாறி அழிவுப் பாதை நோக்கி செல்கிறோம் . இது எல்லாத் துறைகளும் பொருந்தும் .
ஆசை அளவோடு இருந்தா பரவாயில்லை , ஆனா பேராசையாகும் போது பேரழிவை சந்திக்க வேண்டி இருக்கிறது .
உலகத்துல எத்தனை எத்தனையோ சண்டையெல்லாம் நடந்திருக்கு .
அந்த காலத்தை எடுத்துகிட்டோமுன்னா ராஜாக்கள் எல்லாம் எப்படி ராஜாவா ஆனாங்க . இதெல்லாம் எப்படி ?. பொன் , பொருள் , மண்ணாசை , மாதுமோகம் சேர்ந்து தான் .
மன்னர் தன் குடிமக்களுக்கு நல்லது பண்ணுதாங்களோ இல்லையோ நாட்டை பிடிப்பததில் ரொம்ப தீவிரமா இருந்தாங்க . அதுக்கப்பறம் அதிக வரியை மக்கள் மேல திணிக்க வேண்டியது .
அந்த காலத்துல , ஒரு ராஜா தன் பக்கத்து நாட்டை பிடிக்கணுன்னா பக்கத்து நாட்டுல உள்ள கால்நடைச் செல்வங்களான ஆடு , மாடு , கோழி இதெல்லாம் பிடிச்சிட்டு வருவாங்களாம் . காணாமல் போன கால்நடைகளுக்கு சொந்தமான பக்கத்து நாட்டுக்காரங்க இந்த ராஜாட்ட போய் பேசிட்டு அழைச்சிட்டு வருவாங்க .
கொஞ்ச நாட்கள் கழித்து பக்கத்து நாட்டு செல்வங்களை எல்லாம் கொள்ளையடிக்க ஆள் அனுப்புவார் இந்த ராஜா . அதுக்கப்பறம் இரண்டு நாட்டு ராஜாக்களும் கலந்து பேசுவதற்கு வட்ட மேஜை மாநாடு போடுவாங்க .
அந்த உடன்படிக்கை சரியா வரலைன்னா தூதர் மூலமா நான் போர்த் தொடுக்க ஓலை அனுப்புவார் .
சிறிது நாட்கள் கழித்து இந்த ராஜா பக்கத்து நாட்டின் எல்லையை நெருங்குவார் . பின்னர் அங்கிருந்து முன்னேறி கோட்டை மதிலை நெருங்குவார் . பின்னர் இறுதிகட்ட போர் நடக்கும் . எந்த ராஜா ஜெயிக்கிறாரோ அவர் நாட்டை கைப்பற்றுவார் .
இப்படித்தான் ஒரு மன்னர் நாடுகளை பிடிக்கிறது .
இந்திய வரலாற்றில் ஏகப்பட்ட போர்கள் நடந்துள்ளன . அதை பற்றி நீங்களும் அறிந்து கொள்வதற்காக இங்கே தந்துள்ளேன் .
************************************************
1. ஹைடாஸ்பஸ் (ஜீலம்) போர் கி.மு.326
கிரேக்க மன்னன் அலெக்சாண்டருக்கும் இந்திய மன்னர் போரஸ் என்கிற புருஷோத்தமனுக்கும் இடையே ஜீலம் நதிக்கரையில் கி.மு.326ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் அலெக்சாண்டர் வெற்றி பெற்றார்.
2. செலியூகசுக்கு எதிராக போர்
செலியூகஸ் நிகேட்டருக்கும், சந்திரகுப்த மௌரியருக்கும் இடையே நடைபெற்றது. சந்திரகுப்த மௌரியர் வெற்றி பெற்றார்.
3. கலிங்கப்போர் கி.மு.261
அசோகர் கலிங்க நாட்டின்மீது கி.மு.261-ஆம் ஆண்டு படையெடுத்தார். இதனால் கலிங்கப்போர் நடைபெற்றது. இந்தப் போரில் பல்லாயிரக்கணக் கானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த கோரக் காட்சியை கண்டு மனம் வருந்திய அசோகர் இனி போர் செய்வதில்லை என சூளுரைத்தார்.
4. முதல் அரேபியர் படையெடுப்பு கி.பி.711-713
முகம்மது பின் காசிம், படையெடுத்து சிந்து, மூல்டான் பகுதிகளைக் கைப்பற்றினார்.
5. தானேசர் போர் கி.பி. 1014
முகமது கஜினி தானேசர் மன்னர் அனந்த பாலை தோற்கடித்தார். பல செல்வங்களை கொள்ளை அடித்ததுடன், நூற்றுக்கணக்கான மக்களை அடிமைகளாகப் பிடித்துச் சென்றார்.
6. மூல்டான் மீது படையெடுப்பு கி.பி.1175
முகமது கோரி மூல்டான்மீது படையெடுத்து மூல்டான் கோட்டையை கைப்பற்றினார்.
7. முதலாவது தரேயின் போர் கி.பி.1191
அஜ்மீர் மன்னராகிய பிரித்விராஜ் சௌஹா னுக்கும் முகமது கோரிக்கும் இடையே முதலாவது தரேயின் போர் கி.பி.1191ஆம் ஆண்டு நடைபெற்றது. பிரித்விராஜ் சௌஹான் முகமது கோரியை தோற்கடித்தார்.
8. இரண்டாம் தரேயின் போர் கி.பி.1192
முகமது கோரி பிரித்விராஜ் சௌஹானைத் தோற்கடித்தார். டெல்லி, கனோஜ் நகரங்களை கைப்பற்றினார்.
9. செங்கிஸ்கான் படையெடுப்பு
செங்கிஸ்கான் என்ற மங்கோலியர் படையெடுத்தார்.
10. தைமூர் படையெடுப்பு
தைமூர் இந்தியாவின்மீது படையெடுத்து டெல்லியை சூறையாடினார்.
11. முதலாம் பானிபட் போர் கி.பி.1526
பாபருக்கும், இப்ராகிம் லோடிக்கும் இடையே நடைபெற்ற இப்போரில், லோடி தோற்கடிக்கப்பட்டு முகலாய அரசு நிறுவப்பட்டது.
12. கன்வா போர் கி.பி.1527
பாபர் மேவார் மன்னர் ராணா சாங்காவைத் தோற்கடித்தார்.
13. இரண்டாம் பானிபட் போர் கி.பி.1556
அக்பர் ஹெமு என்ற இந்து மன்னரை தோற்கடித்தார். இதன் மூலம் மொகலாயர் ஆட்சி மீண்டும் நிறுவப்பட்டது.
14. தலைக்கோட்டை போர் கி.பி.1565
விஜயநகர மன்னராகிய ராமராயருக்கும் தக்காண சுல்தானுக்கும் இடையே தலைக்கோட்டை போர் நடைபெற்றது. விஜயநகரப் படை தோல்வியுற்றது.
15. ஹல்திகாட் போர் கி.பி.1576
மேவார் மன்னராகிய ராணா பிரதாப்பை மான்சிஸ், ஆசிப்கான் ஆகியவர்களின் தலை மையிலான முகலாயர் படை தோற்கடித்தது.
16. நாதிர்ஷாவின் படையெடுப்பு கி.பி.1739
ஈரான் மன்னர் நாதிர்ஷா இந்தியாவின் மீது படையெடுத்தார். இதில் முகலாய மன்னர் முகமத் ஷாவின் படைகளை தோற்கடித்தார். டெல்லி மக்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.
17. முதல் கர்நாடகப் போர் கி.பி.1746-1748
முதல் கர்நாடகப் போர் ஆங்கிலேயருக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே நடைபெற்றது. இதில் பிரெஞ்சு படைகள் தோற்கடிக்கப்பட்டு சென்னை ஆங்கிலேயர் வசம் வந்தது.
18. இரண்டாம் கர்நாடகப் போர் கி.பி.1749-54
ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே நடைபெற்றது. பிரெஞ்சு செல்வாக்கு குறைந் தது. முகமது அலி கர்நாடக நவாப் ஆனார்.
19. மூன்றாம் கர்நாடகப் போர் கி.பி.1756-63
வந்தவாசியில் பிரெஞ்சுப்படைகள் தோற்கடிக் கப்பட்டன.
20. பிளாசிப் போர் கி.பி. 1757
ராபர்ட் கிளைவின் தலைமையிலான ஆங்கிலப் படைக்கும், வங்காள நவாப் சிராஜூத் தௌலா வுக்கும் நடைபெற்றது. இதில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர். வங்காளத்தில் பிரிட்டிஷ் ஆதிக்கம் நிலை நாட்டப்பட்டது.
21. வந்தவாசி போர் கி.பி.1760
பிரெஞ்சு கம்பெனியின் கவர்னராகிய தௌண்ட் வாலியை பிரிட்டிஷ் படைகளின் தளபதியான சர் அயர்கூட் வந்தவாசி என்ற இடத்தில் தோற்கடித்தார்.
22. மூன்றாம் பானிபட் போர் கி.பி.1761
மராட்டிய படைகளுக்கும் ஆப்கானிஸ்தான் மன்னர் அகமதுஷா அப்தாலிக்கும் இடையே பானிபட் என்ற இடத்தில் போர் நடைபெற்றது. மராட்டிய படைகள் தோல்வியடைந்தது. சதாசிவராவ் கொல்லப்பட்டார்.
23. பக்சார் போர் கி.பி.1764
சர் தாமஸ் மன்றோவின் தலைமையிலான ஆங்கிலேயர் படைக்கும் அயோத்தியின் நவாப் மீர் காசிமுக்கும் இடையே பக்சர் போர் நடைபெற் றது. மீர்காசி போரில் தோல்வியுற்றார். வங்காளத் தில் கம்பெனி ஆட்சி உறுதி செய்யப்பட்டது.
24. முதல் ஆங்கிலோ- மைசூர் போர் கி.பி.1767-69
ஹைதர் அலி மதராஸ் கோட்டையை கைப்பற்றி னார். சென்னை உடன்படிக்கை கையெழுத்தானது.
25. இரண்டாவது ஆங்கிலோ மைசூர் போர் கி.பி.1780-84
ஹைதர் அலி, வாரன் ஹேஸ்டிங்ஸ்சால் தோற்கடிக்கப்பட்டார்.
26. மூன்றாவது ஆங்கிலோ மைசூர் போர் கி.பி.1790-92
பிரிட்டிஷ் மற்றும் மைசூர் மன்னர் திப்புசுல்தான் இடையே ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை.
27. நான்காவது மைசூர் போர் கி.பி.1799
ஆர்தர் வெல்லெஸ்லியின் தலைமையில் பிரிட்டிஷ் படையினர் திப்பு சுல்தானை எதிர்த்து போரிட்டனர். இதில் திப்பு சுல்தான் கொல்லப் பட்டார்.
28. மூன்றாவது ஆங்கிலோ மராத்திய போர் கி.பி.1817-18
மராத்தியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே நடைபெற்ற பல்வேறு போர்களில் பேஷ்வா பாஜிராவ் அப்பா சாகப் போஸ்லே, ஸோல்கர் ஆகிய மராத்திய மன்னர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.
29. இரண்டாவது ஆங்கிலோ மராத்தியப் போர் கி.பி.1803-1819
ஆங்கிலேயர் சிந்தியா, பாண்ட்ஸ்லிக்கு இடையே நடைபெற்ற போரில் ஆங்கிலேயர் வென்றனர்.
30. மூன்றாவது ஆங்கிலோ மராத்தியப் போர் கி.பி.1817-1819
ஆங்கிலேயர் பேஷ்வாக்கள், பாண்ட்ஸ்லி, ஹோல்கர் போன்றோருக்கு நடைபெற்றது. இதில் ஹோல்கர் தோற்கடிக்கப்பட்டார்.
31. முதல் சீக்கியப் போர் கி.பி.1845-46:
ஆங்கிலேய ராணுவம் பஞ்சாபில் சீக்கிய ராணுவத்தை மஸுரி, பெரோஸ்ஷா மற்றும் அப்ரவானில் நடந்த போர்களில் தோற்கடித்தது.
32. இரண்டாவது சீக்கியப் போர் கி.பி.1848-49
ஆங்கிலேயருக்கும், சீக்கியர்களுக்கு மிடையே நடைபெற்ற போரில் சீக்கியர்கள் தோற்கடிக்கப்பட் டனர். பஞ்சாப் கிழக்கு இந்தியக் கம்பெனியால் கைப்பற்றப்பட்டது.
33. முதல் இந்திய சுதந்திரப்போர் கி.பி.1857
ஆங்கிலேயர்களால் "சிப்பாய் கலகம்' என அழைக்கப்பட்ட முதல் இந்திய சுதந்திரப் போர் ஆங்கிலேயர்களை எதிர்த்து மன்னர்களும் இந்திய சிப்பாய்களும் போரிட்டனர். இது உத்திரப் பிரதேச மாநிலத்தில் மீரட் என்ற ஊரில் முதன் முதலாக ஆங்கில ஆட்சியை எதிர்த்து இந்தியர்கள் போர்க்கொடி உயர்த்தினார்கள்.
நன்றி: நக்கீரன்.இன்
***********************************************
நன்றி.. எங்கிருந்து இவ்வளவு தகவலை சேர்த்தீங்க பாஸ்..?
ReplyDeleteஅனைத்தும் புதிய தகவல்...
ReplyDeleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....
அருமையாக தொகுத்தளிக்கப்பட்ட போர் பற்றிய தகவல்கள்.
ReplyDeleteஆசை மட்டுமில்லை, பெருமைக்காக கூட போர் புரிந்த மன்னர்கள் இவ்வுலகில் உண்டு.
பிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...
ReplyDeleteஎங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
www.radaan.tv
http://radaan.tv/Creative/DisplayCreativeCorner.aspx
அ,ஆ,இ,ஈ..,
ReplyDeleteவரலாற்று சம்பவங்களை கேட்டாலே உடம்பு ஒரு மாதிரியா சிலிர்க்குது.
ReplyDeleteதொகுப்பு நல்லாயிருக்கு.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....
ReplyDeleteநீங்க இதுக்கு முன்னாடி வரலாறு வாத்தியாரா இருந்தீங்களாங்க? நிறைய தகவல்கள் கொடுத்தீருக்கீங்க.
ReplyDeleteவிட்டுப்போன தகவல்கள்
கி.பி.2009 ல் போலீகாரர்களுக்கும் சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்களுக்கும் நடந்த சண்டையில் உ.நீ. வழக்கறிஞர்கள் நையப்புடைக்கப்பட்டனர்.
கி.பி.1960 / லிருந்து அதிமுக = திமுக சண்டை... எப்ப முடியும்னு தெரியாது... இந்த மாதிரி முக்கிய தகவல்களை விட்டுட்டீங்களே
ஒவ்வொரு சண்டைக்கும் ஒவ்வொரு பதிவு போடுங்கண்ணே
ReplyDeleteஹை....எனக்கு பிடிச்ச வரலாறு...
ReplyDeleteநன்றி அண்ணே....
/// கலையரசன் said...
ReplyDeleteநன்றி.. எங்கிருந்து இவ்வளவு தகவலை சேர்த்தீங்க பாஸ்..? ///
வாங்க கலையரசன்
எல்லாமே ஒரு தேடல் தான் .
// Sangkavi said...
ReplyDeleteஅனைத்தும் புதிய தகவல்...
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.... ///
வாங்க சங்கவி ,
வருகைக்கு நன்றி
உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் .
//// வெ.இராதாகிருஷ்ணன் said...
ReplyDeleteஅருமையாக தொகுத்தளிக்கப்பட்ட போர் பற்றிய தகவல்கள்.
ஆசை மட்டுமில்லை, பெருமைக்காக கூட போர் புரிந்த மன்னர்கள் இவ்வுலகில் உண்டு. ////
சரியா சொன்னீங்க வெ.ராதாக்கிருஷ்ணன் சார் .
/// RADAAN said...
ReplyDeleteபிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...
எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
www.radaan.tv ///
வாங்க ராதிகா மேடம்
உங்கள் வரவு நல்வரவு
அப்படியே செஞ்சிருவோம் .
/// SUREஷ் (பழனியிலிருந்து) said...
ReplyDeleteஅ,ஆ,இ,ஈ.., ///
சரி சார் .
நாளைக்கு மறக்காம படிச்சிட்டு வந்திடுதேன் . அடிக்க கூடாது என்ன !!!.
/// அக்பர் said...
ReplyDeleteவரலாற்று சம்பவங்களை கேட்டாலே உடம்பு ஒரு மாதிரியா சிலிர்க்குது.
தொகுப்பு நல்லாயிருக்கு. ///
வருகைக்கு நன்றி அக்பர் .
/// T.V.Radhakrishnan said...
ReplyDeleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.... ///
வருகைக்கு நன்றி டிவிஆர் சார்
உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் .
/// நாஞ்சில் பிரதாப் said...
ReplyDeleteநீங்க இதுக்கு முன்னாடி வரலாறு வாத்தியாரா இருந்தீங்களாங்க? நிறைய தகவல்கள் கொடுத்தீருக்கீங்க.
விட்டுப்போன தகவல்கள்
கி.பி.2009 ல் போலீகாரர்களுக்கும் சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்களுக்கும் நடந்த சண்டையில் உ.நீ. வழக்கறிஞர்கள் நையப்புடைக்கப்பட்டனர்.
கி.பி.1960 / லிருந்து அதிமுக = திமுக சண்டை... எப்ப முடியும்னு தெரியாது... இந்த மாதிரி முக்கிய தகவல்களை விட்டுட்டீங்களே ////
நான் உங்க வீட்டுப்பிள்ளை ( வாத்தியார் ) .
விட்டு போனதை ஞாபகப்படுத்தியதுக்கு நன்றி பிரதாப் .
/// சங்கர் said...
ReplyDeleteஒவ்வொரு சண்டைக்கும் ஒவ்வொரு பதிவு போடுங்கண்ணே ///
சரி போட்டுருவோம் .
// ஜெட்லி said...
ReplyDeleteஹை....எனக்கு பிடிச்ச வரலாறு...
நன்றி அண்ணே.... ///
வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே !!
வரலாறு எனக்கும் மிக விருப்பமான பாடமே. மிக அருமையாக செய்திகளைத் தொகுத்தளித்ததற்கு நன்றி சேக் மைதீன்.
ReplyDeleteரொம்ப மெனெக்கட்டு தகவல் திரட்டியதற்கு ஒரு சல்யூட் தல
ReplyDeleteநல்ல தகவல் தொகுப்பு
வாங்க சரவணக்குமார்
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி
வாங்க அபு அஃப்ஸர்
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி
நண்பா,
ReplyDeleteஎதேனும் ஒன்றை எடுத்துக்கொண்டு உங்களின் பார்வையில் அலசுங்களேன்...
நல்லாருக்கு.
பிரபாகர்.
ஏதாவது பி ஹெச்டி பண்றீங்களா ஸ்டார்ஜன்
ReplyDeleteதகவல்கள் அருமை
வரலாறு ரொம்ப முக்கியம்னு சொன்னது இதானா. நிறைய தெரியாத தகவல்கள் ஸ்டார்ஜன். பகிர்வுக்கு நன்றி. ரொம்ப மெனக்கிட்டிருப்பது தெரிகிறது. வாழ்த்துக்கள்/பாராட்டுக்கள்.
ReplyDelete/// பிரபாகர் said...
ReplyDeleteநண்பா,
எதேனும் ஒன்றை எடுத்துக்கொண்டு உங்களின் பார்வையில் அலசுங்களேன்...
நல்லாருக்கு.
பிரபாகர். ///
வாங்க பிரபாகர் நண்பா
வருகைக்கு மிக்க நன்றி
/// thenammailakshmanan said...
ReplyDeleteஏதாவது பி ஹெச்டி பண்றீங்களா ஸ்டார்ஜன்
தகவல்கள் அருமை ////
அப்படியெல்லாம் ஒன்னுமில்லை தேனம்மை அக்கா
/// S.A. நவாஸுதீன் said...
ReplyDeleteவரலாறு ரொம்ப முக்கியம்னு சொன்னது இதானா. நிறைய தெரியாத தகவல்கள் ஸ்டார்ஜன். பகிர்வுக்கு நன்றி. ரொம்ப மெனக்கிட்டிருப்பது தெரிகிறது. வாழ்த்துக்கள்/பாராட்டுக்கள். ////
வாங்க நவாஸ்
வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி
அண்ணே..
ReplyDeleteபடிச்சிட்டேன்..! எக்ஸாமெல்லாம் வைக்க மாட்டீங்களே..?
/// உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ReplyDeleteஅண்ணே..
படிச்சிட்டேன்..! எக்ஸாமெல்லாம் வைக்க மாட்டீங்களே..? ///
என்ன வாத்தியாரே நலமா ...
என்னை அண்ணன் என்று சொல்லிய அண்ணனுக்கு அண்ணன் உண்மைத்தமிழன் வாழ்க ...
வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி .
நல்லதொரு பகிர்வு, இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅப்போபோ பள்ளியில படிச்சிருந்தாலும், சில புது விடயங்களும் தெரிஞ்சுக்கிட்டேன், நல்ல தொகுப்பு.
ReplyDelete/// Jaleela said...
ReplyDeleteநல்லதொரு பகிர்வு, இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் ///
வாங்க ஜலீலா
வருகைக்கு நன்றி
இனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் .
/// SUFFIX said...
ReplyDeleteஅப்போபோ பள்ளியில படிச்சிருந்தாலும், சில புது விடயங்களும் தெரிஞ்சுக்கிட்டேன், நல்ல தொகுப்பு. ///
வாங்க ஷபிக்ஸ்
வருகைக்கு நன்றி
Excellent article Starjan.
ReplyDeleteCongrats. Keep it up.
சூப்பர் தொடர்ச்சியை படிக்க ஆவலாக உள்ளேன்...!
ReplyDeleteஅதாங்க பதிவுலக சண்டை வரலாறு :-)
(நாங்க வரலாறு பாடத்தில் கொஞ்சம் வீக்)
/// முரளிகண்ணன் said...
ReplyDeleteExcellent article Starjan.
Congrats. Keep it up. ////
Thank you very much Muralikannan
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete/// சிங்கக்குட்டி said...
ReplyDeleteசூப்பர் தொடர்ச்சியை படிக்க ஆவலாக உள்ளேன்...!
அதாங்க பதிவுலக சண்டை வரலாறு :-)
(நாங்க வரலாறு பாடத்தில் கொஞ்சம் வீக்) ///
வாங்க சிங்ககுட்டி
நல்லா படிங்க , பாஸ் பண்ணலாம்
வருகைக்கு மிக்க நன்றி
அனைத்தும் புதிய தகவல்.
ReplyDeleteநல்லதொரு தேடல்.
இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்..
/// ஹேமா said...
ReplyDeleteஅனைத்தும் புதிய தகவல்.
நல்லதொரு தேடல்.
இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்.. ///
வாங்க ஹேமா
இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்
வருகைக்கு மிக்க நன்றி