என்ன !! ஊம் .. ஊம்முன்னு கதை கேட்க ஆரம்பிச்சிட்டீங்களா ... சே !!! சே !! . ராஜாக்கதையெல்லாம் பழசு .. அப்படியே ராஜா இருந்தாலும் 9 பொண்டாட்டியெல்லாம் நடக்கிற கதையா ? . அதுவும் இந்த காலத்துல .. இப்படியெல்லாம் கதை சொல்லி உங்களை பயமுறுத்த மாட்டேன் .
சில ஊருக்கு நாம் போகும் போது அந்த ஊர் நமக்கு பிடித்திருக்கும் . என்ன காரணம் !! நமக்கே தெரியாது . அந்த ஊர் மக்கள் பழகுற விதம் , ஊரின் அழகு , கண்ணுக்கு விருந்தளிக்கும் காட்சிகள் , இப்படி நமக்கு தெரியாமலே அந்த ஊர் நமக்கு பிடித்து போக நிறைய காரணம் இருக்கலாம் .
ஆனா அந்த ஊர்களின் பெயர்கள் ரொம்ப வித்தியாசமா இருக்கும் . சில ஊர்கள் வரலாற்று பின்னணி இருக்கும் . சில பெயரைக் கேட்டாலே சிரிப்பு வரும் .
அப்படி எனக்கு பிடித்த சில ஊர்களை இப்போது பார்க்கலாம் .
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஊர்களும் , அதனை சுற்றியுள்ள ஊர்களையும் பார்க்கலாம் .
மொதல்ல நம்மூர்ல இருந்து ஆரம்பிக்கலாமா ...
1 . திருநெல்வேலி
இது வற்றாத ஜீவ நதி தாமிரபரணி பாயும் நகரமாகும் . இங்கே அல்வா ரொம்ப பேமஸ் . இந்த மாவட்டத்தில் சுற்றுலாத் தளங்கள் நிறைய உண்டு .
நம்ம யாரும் களவாடிவிட கூடாதுங்கிறதுக்காக நெல்லுக்கெல்லாம் வேலி போட்டிருக்காங்க .
2 . தூத்துக்குடி
இது முத்துகுளிக்கும் தொழிலுக்கு பெயர்போனது . இது ஒரு துறைமுக நகரமாகும் .
இங்கே தூத்து வேலை செஞ்சாத்தான் குடிக்கிறதுக்கு கூழ் தருவாங்க போலிருக்கே !!
3 . நாகர்கோவில்
இந்த மாவட்டத்தில் நிறைய சுற்றுலாத் தளங்கள் உள்ளன . இங்கே பேச்சு வழக்கில் மலையாள வாடை அடிக்கும் . ஏன்னா கேரளா அருகில் உள்ளது .
அது என்ன !! இங்கே இருப்பவங்க நாஞ்சில்ன்னு ஒரு அடைமொழியெல்லாம் வைச்சிருக்காங்களே !!
4 . சாத்தான்குளம்
இது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது .
இங்கே நிறைய சாத்தான்கள் இருக்குமோ ... தெரியலியே ...
5 . பேய்க்குளம்
இது சாத்தான்குளத்துக்கு அருகில் உள்ளது .
இங்கே நிறைய பேய் இருக்குமோ ...
6 . உடன்குடி
இதுவும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது . திருச்செந்தூருக்கு அருகில் உள்ளது . கருப்பட்டிக்கு பெயர் போனது .
இங்கே இருப்பவங்க உடனே குடிச்சிருவாங்க போல .. அவ்வளவு சுறுசுறுப்பா ...
7 . முடிவைத்தானேந்தல்
இது தூத்துக்குடிக்கு அருகில் உள்ள சிற்றூர் . நெல்லை டு தூத்துக்குடி சாலையில் உள்ளது .
இங்கே இருக்கிறவங்களுக்க தான் முடி வைச்சிருக்காங்களாம் .
8 . குறுக்குச்சாலை
இது தூத்துக்குடிக்கு அருகில் உள்ள சிற்றூர் .
இங்கே இருக்கிற ரோடெல்லாம் குறுக்காக இருக்குமோன்னு நீங்க கேட்கிறது எனக்கு தெரியுது . ஆனா நான் பார்த்தவரைக்கும் அப்படி தெரியலியே ..
9 . தலையால் நடந்தான் குளம்
இது கயத்தார் ( கட்டபொம்மன் தூக்கிலிட்ட ஊர் ; நெல்லை டு மதுரை சாலையில் ) அருகில் உள்ள சிற்றூர் .
இங்கே இருக்கிறவங்க நேரா நடப்பாங்கன்னா பாத்துக்கோங்களேன் .
10 . பாம்புக்கோவில் சந்தை
இது நெல்லை மாவட்டத்தில் உள்ள சங்கரன் கோவில் அருகில் உள்ள சிற்றூர் .
இங்கே பாம்புக்கெல்லாம் சந்தை வைச்சிருப்பாங்களோ ...
11 . அழகிய பாண்டிய புரம்
இது நெல்லைக்கு அருகில் உள்ள ஊர் .
இங்கே இருக்கிறவங்க அழகானவங்களாம் ...
12 . கடையம்
இது நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசத்துக்கு அருகில் உள்ளது .
இங்கே அப்படி என்னத்ததான் கடைவாங்களோ ...
13 . ரவணசமுத்திரம்
இது கடையத்துக்கு அருகில் உள்ளது .
இங்கே நீங்க நினைக்கிற மாதிரி ராவணனெல்லாம் கிடையாது .
14 . பத்தமடை
இது நெல்லைக்கு அருகில் உள்ளது . இது படுக்கும் பாய்க்கு பெயர் போனது .
இங்கே எத்தனை மடை இருக்கோ தெரியலியே ...
15 . கல்லூர்
இது நெல்லைக்கு அருகில் உள்ள சிற்றூர் .
இந்த ஊரெல்லாம் கல்லா இருக்குமோ ....
*********************************************
எல்லா ஊருக்கும் உங்க கமெண்ட் நல்லா இருக்கு!!!.நிஜமா அப்படி இருக்குமெஅ
ReplyDeleteதிருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு பகுதியான அம்பை, சேரன் மகாதேவி, தென்காசி, பகுதியை மறந்த அண்ணன் ஸ்டார்ஜானை வன்மையாக கண்டிக்கிறேன்
ReplyDelete:-))
ReplyDelete//உடன்குடி
ReplyDeleteஇதுவும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது . திருச்செந்தூருக்கு அருகில் உள்ளது . கருப்பட்டிக்கு பெயர் போனது .
இங்கே இருப்பவங்க உடனே குடிச்சிருவாங்க போல .. அவ்வளவு சுறுசுறுப்பா ...
//
எங்க பக்கத்துக்கு ஊரு இது......
:))
நிறைய ஊர்களின் பெயர் வித்தியாசமாத்தான் இருக்கு.
ReplyDeleteஉடன்குடி கருப்பட்டிக்கு மட்டுமல்ல மிச்சருக்கும், ஓலைப்பெட்டியில வச்சு வெள்ளைக்கலரில் ஜிலேபி மாதிரி குடுப்பாங்களே (அதுக்கு பேரு சோத்து முட்டாயோ, ஞாபகமில்லை) ஃபேமஸ் தான்.
திருநெல்வேலியையும் அதை சுற்றியுள்ள ஊர்களைப்பற்றியும் அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.
ReplyDeleteவாங்க கல்ப் தமிழன்
ReplyDeleteசும்மா ஒரு காமெடி தான்
நல்ல கமெண்ட் சேக். ஆமா இந்தப் பதிவுக்கு ஏன் ராமராஜன் படத்தப் போட்டுருக்கீங்க நண்பா?
ReplyDeleteவாங்க அத்திரி
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வருகைக்கு நன்றி டிவிஆர் சார்
ReplyDeleteவாங்க ஜெட்லி
ReplyDelete// எங்க பக்கத்துக்கு ஊரு இது......
:)) //
எந்த ஊரு உங்க ஊரு ?..
வாங்க நவாஸ் ,
ReplyDeleteஉடன்குடி சோத்து முட்டாய் சாப்பிட்டிருக்கேன் . ரொம்ப நல்லாருக்கும்
வாங்க அக்பர் வருகைக்கு நன்றி
ReplyDeleteவாங்க சரவணக்குமார் ,
ReplyDeleteராமராஜன் திருச்செந்தூர் எம்பி தேர்தல்ல்ல ஜெயிச்சவர் . அதனால் தான் அவர் படம் போட்டேன் .
அய்யய்யோ பேய் குளம், சாத்தான் குளம்!! பயங்கர டெர்ர்ர்ராவுல இருக்கு!!
ReplyDeleteவாங்க ஷபிஃக்ஸ் ,
ReplyDeleteஆசிப் அண்ணாச்சி ஊரு அது , அப்படியெல்லாம் சொல்லப்படாது .
வருகைக்கு நன்றி
வித்தியாசமான் சிந்தனை
ReplyDeleteமுடிவைத்தானேந்தல்
தலையால் நடந்தான் குளம்
பாம்புக்கோவில் சந்தை
எல்லாம் புதுசாக்கீது
வாங்க அபு அஃப்ஸர் வருகைக்கு நன்றி
ReplyDeleteஎங்க ஊரை விட்டுடீங்க
ReplyDelete//அத்திரி said...
ReplyDeleteதிருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு பகுதியான அம்பை, சேரன் மகாதேவி, தென்காசி, பகுதியை மறந்த அண்ணன் ஸ்டார்ஜானை வன்மையாக கண்டிக்கிறேன்//
ஹாஹாஹா இதுக்கு என்ன சொல்லப் போறீங்க ஸ்டார்ஜன்
அதென்ன மலையாள வாடை.. சாக்கடை வாடை மாதிரி... அதை கொஞசம் டீசன்டா சொல்லலாம்ல...எங்கள் ஊரை இழிவுபடுத்திய உங்களை வன்மையாக கண்டிக்கிறோம்..
ReplyDeleteநாஞ்சில்னு போட்டுகிட்டா தப்பா ?சைச்கிள் கேப்புல கலாய்சிட்டிங்ளே தல...
திருநெல்வேலி அல்வாவுக்கு பேமஸோ இல்லையோ திருநெல்வேலி மக்கள் அல்வா கொடுக்கறதுல பேமஸ்.... ஹீஹீஹீ இது எப்படி இருக்கு...பழிக்கு பழிவாங்கிருவோம்ல....
வாங்க நசரேயன்
ReplyDeleteஉங்க ஊர் புளியங்குடியா ...
வாங்க தேனம்மை அக்கா
ReplyDeleteஉங்களுக்கு சொன்னமாதிரி தான்
வருகைக்கு நன்றின்னு சொல்லனும்
வாங்க பிரதாப்
ReplyDeleteகலாய்க்கிறது தானே நம்ம கை வந்த கலை
என்ன சரியா ...
எல்லா ஊரையும் சொன்ன நீங்கள் எங்க ஊரை (குலசேகர பட்டணம்) சொல்ல மறந்த சோகம் என்ன.ஆங்கிலேயர் காலத்தில் எங்க ஊர்தான் துறைமுகமாக விளங்கியது.
ReplyDeleteநட்புடன்
அபுல்பசர்
/// அபுல் பசர் said...
ReplyDeleteஎல்லா ஊரையும் சொன்ன நீங்கள் எங்க ஊரை (குலசேகர பட்டணம்) சொல்ல மறந்த சோகம் என்ன.ஆங்கிலேயர் காலத்தில் எங்க ஊர்தான் துறைமுகமாக விளங்கியது.
நட்புடன்
அபுல்பசர் ///
வாங்க அபுல் பசர் சார் ,
கவலைப்படாதீங்க , எல்லாம் நம்ம ஊரு தானே ..
மறந்ததுக்கு மன்னிக்கவும் .
ஊர்மேலழகியான் அப்பிடிகூட ஒரு ஊரு இருக்குங்கோ நெல்லைக்கு பக்கதிலேஏஏ....
ReplyDeleteவருகைக்கு நன்றி வசந்த்
ReplyDeleteநானும் கேள்விப்பட்டிருக்கிறேன் அந்த ஊரை ..
மிக்க நன்றி
இதையெல்லாம் எப்படி விட்டேன்?
ReplyDeleteவருகைக்கு நன்றி தல..
ReplyDelete