Pages

Thursday, January 28, 2010

ஆயிரத்தில் ஒருவன் - அப்பாவும் நானும் ...

அப்பாடி ஒரு வழியா நானும் ஆயிரத்தில் ஒருவன் படத்தை பார்த்தாச்சு . ஆயிரத்தில் ஒருவன் படம் வந்தாலும் வந்தது . ஏகப்பட்ட விமர்சனங்கள் . நானும் விமர்சனம் எழுத களத்தில் இறங்கியாச்சு . நான் ஆயிரத்தில் ஒருவன் படத்தை நேற்று தான் பார்த்தேன் .


கதை தொடங்குவது சுமார் 45 வருடஙகளுக்கு முன்னால் ...



புரட்சித் தலைவர் ஒரு டாக்டர் . தன்னிடம் வேலை செய்யும் வேலையாள்களை அடிமைப் போல பாவிக்கும் மனோகரின் ஆட்களுக்கு வைத்தியம் பார்க்க நம்ம தலைவர் செல்வார் . அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கும் தலைவர் பொங்கி எழுகிறார் . இதனால் ஆத்திரமடையும் மனோகர் தலைவரை அடிமைகள் தீவுக்கு அடிமையாக அனுப்பி விடுகிறார் . இந்த தீவு ராமதாஸுக்கு ( பாமக ராமதாஸ் இல்லை ) சொந்தமானது . அங்கே சென்றதும் அங்குள்ள அநியாயங்களை கண்டு தோழர்களுக்கு ஆறுதல் சொல்கிறார் .

ஒரு கட்டத்தில் புரட்சித்தலைவி தலைவரை காதலிக்க , இருவரும் காதலர்களாக ஆகிறார்கள் . அங்கே கொள்ளை அடிக்க வரும் நம்பியார் ராமதாசுக்கு இடைஞ்சலாக இருக்கிறார் . இதனால் ராமதாஸ் தலைவரிடம் நம்பியாரை விரட்டினால் விடுதலை என்று நயவஞ்சகமாக பேசியதால் தலைவரும் நம்பியாரை விரட்டுகிறார். பின்னர் உண்மையறிந்து தன் தோழர்களுடன் நம்பியாரின் கப்பலில் தப்பி விடுகிறார் தலைவர் .



நம்பியாரின் பிளாக்மெயிலால் கொள்ளைக்காரனாகிறார் தலைவர் . நம்ம தலைவர் நீதி நேர்மையின் காரணமாக கொள்ளைக் கூட்டத்தினரிடமிருந்து தான் கொள்ளை அடிக்கிறார் . ஜெவையும் கப்பலையும் இக்கட்டிலிருந்து காப்பாற்றுகிறார். . ஜெவின் மேல் ஒரு கண் வைத்திருக்கும் நம்பியாரை திருத்த முயற்சிக்கிறார். எதற்கும் மசியாத நம்பியாருக்கு பகையாளி ஆகிறார் . மனோகரும் இவருக்கு தொல்லை கொடுக்க , கடைசியில் , தலைவர் ஜெவை கரம்பிடித்தாரா ? . நம்பியார் , மனோகர் கூட்டங்களை அடக்கினாரா ? . தலைவர் கடைசியில் என்ன ஆனார் . என்பதை படம் பாக்காதவங்க படம் பார்த்து தெரிஞ்சிக்கோங்க .


புரட்சித் தலைவர் , தலைவி நடித்த இந்த படம் 1965ல் வெளியானது . இயக்கம் பிஆர் பந்துலு . அருமையாக இயக்கி உள்ளார் .

இதில் எம்ஜிஆர் , ஜெயலலிதா நாகேஷ் நம்பியார் மனோகர் ராமதாஸ் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்துக்கு இசை எம் எஸ் விஸ்வனாதன் _ ராமமூர்த்தி .

இந்த படம் ரபேல் சபாடினி எழுதிய ( CAPTAIN BLOOD ) என்ற புகழ் பெற்ற நாவலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் . இந்த நாவல் அந்தக் காலத்தில் மேற்கிந்திய தீவுகளில் இருந்த ஒரு பிரபலமான கொள்ளைக்காரனான சர் ஹென்றி மார்கனின் வாழ்வை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. ஹென்றி மார்கன் பின்னாளில் மேற்கிந்திய தீவுகளின் கவர்னராக ஆனாராம் .

அருமையான ஆர்ட் டைரக்ஷ்ன். காட்சிகள் ரொம்ப அருமையாக மிகவும் ரிச்சாக எடுக்கப்பட்டிருக்கின்றன. கப்பல் காட்சிகள் நம்மை இன்னும் அசத்துகின்றன. பந்துலு பணத்தை தண்ணீ ராகத்தான் செலவழித்திருக்கிறார்.
திரைக்கதை ரொம்ப சூப்பர் .

இந்த படத்தில் எம்ஜியாரும் நம்பியாரும் போடும் கத்திச் சண்டை ரொம்ப நல்லாருக்கும் . காட்சி ரொம்ப பிரமாதம் .

தலைவர் , தலைவி நம்பியார் மனோகர் , நாகேஷ் ராமதாஸ் நடித்திருப்பதை பற்றி கேட்கவா வேண்டும் . நடிப்புன்னா நடிப்பு . நாகேஷ் காமெடியில் கலக்கியிருப்பார் .

பாடல்கள் ரொம்ப அருமை . இப்பவும் கேட்க கேட்க சக்கை போடுகிறதே ! . அவ்வளவு இனிமை .

கண்ணதாசனும் வாலியும் போட்டிப்போட்டு அருமையான பாடல்களை எழுதியிருக்காங்க . கண்ணதாசன் அதோ அந்த பறவை , நாணமோ பாடல்களை எழுதி உள்ளார் . வாலி , பருவம் எனது பாடல் , ஆடாமல் ஆடுகிறேன், ஏன் என்ற கேள்வி , ஓடும் மேகங்களே , உன்னை நான் சந்தித்தேன் போன்ற பாட்டுகளில் அசத்தி இருக்கிறார்.


மொத்ததில் இந்த படம் சிறந்த பொழுதுபோக்கு சித்திரம் . இப்போது பார்த்தாலும் திகட்டாதது .

ஆயிரத்தில் ஒருவன் _ அசத்தலான வீரர்களில் ஒருவன் .



*************************************


இனி 2010 ஜனவரி 27 இரவு 10 மணி ...


ரீமா சென் ஒரு சிறந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர் . அவர் 800 வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த சோழர்களை பத்தி அகழ்வாராய்ச்சி செய்ய இந்திய அரசு அனுமதி வழங்குகிறது . அவருக்கு உதவியாக ஆண்ட்ரியா , எஸ்பி அழகம்பெருமாள் போலீஸ் துணையோடு தேடிச் செல்கிறார் . கூடவே , கார்த்தி தலைமையில் பணியாளர்களும் செல்கின்றனர் .

அக்கால சோழர்கள் பாண்டியர்களுடனான மோதலில் பலர் கொல்லப்படுகின்றனர் . அதில் தப்பிய சோழர்கள் பாண்டியர்களின் குலத்தெய்வ சிலையுடன் தப்பித்து செல்கின்றனர் . போகும்போது யாரும் தம்மை பின்தொடர்ந்து வராமலிருக்க பல பயங்கரமான ஆபத்துககளை உருவாக்கி வைத்து விட்டு தப்பித்து சென்று விடுகின்றனர் .



செல்லும் வழியெல்லாம் பயங்கரமான ஆபத்துக்களைக் கண்டு தோழர்கள் இறக்கின்றனர் . இதனால் பயப்படும் கார்த்தி , ரீமாசென்னின் கண்டிப்பால் உடன் செல்கிறார் .



இந்த ஆபத்துக்களை எல்லாம் ரீமாசென் குழுவினர் கடந்து வரும்போது பல சோதனைகளை சந்திக்கின்றனர் . பார்க்க பாவமாக இருக்கிறது .

கடைசியில் சோழர்கள் வாழ்ந்த இடத்துக்கு வரும் போது இன்னும் சோழர்கள் உயிரோடு இருக்கின்றனர் . அந்த சோழர்களின் அரசன் பார்த்திபன் . பார்த்திபன் அந்த மக்களை ஆண்டு வருகிறார்.

ரீமாசென்னும் சிலரும் அக்கால பாண்டிய மன்னர் பரம்பரையில் வந்தவர்கள் என்று பின்னர் தான் தெரிய வருகிறது . ரீமாசென் பார்த்திபனை மயக்கி ராணியாகி பழி வாங்க நினைக்கிறார் . ரீமாசென் பழி வாங்கினாரா .. இல்லையா , பார்த்திபன் என்ன ஆனார் என்பதை படம் பாக்காதவங்க படம் பார்த்து தெரிஞ்சிக்கோங்க .

இந்த படத்தை இயக்கிய செல்வராகவனுக்கு பாராட்டுக்கள் . என்ன அருமையாக எடுத்திருக்கிறார் .

இந்திய சினிமாவில் ஒரு புதிய கதைக்களம் . ஹாலிவுட் தரத்துக்கு படத்தை எடுத்திருக்கிறார் . படத்தில் எத்தனை எத்தனை திருப்பங்கள் . அசத்தி இருக்கிறார் . 3 வருட உழைப்பு ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது .

ஆனால் படம் இவ்வளவு நீளம் தேவையில்லை . படம் பார்த்து முடிக்கும் போது ஒருவித அயர்ச்சி தள்ளாட வைக்கிறது .

ரீமாசென் , பார்த்திபன் கார்த்தி , ஆண்ட்ரியா பாத்திரத்துக்கேற்ப நடித்துள்ளனர் .

இசை ஜீவி பிரகாஷ் . ஒரளவே பிரகாஷிக்கிறார் . இன்னும் நிறைய முயற்சிகள் தேவை .

படத்தில் சிலசில ஓட்டைகள் இருந்தாலும் படம் பார்க்கலாம் .


ஆயிரத்தில் ஒருவன் _ தள்ளாடும் வீரர்களில் ஒருவன் .


**********************************

Post Comment

24 comments:

  1. //இசை ஜீவி பிரகாஷ் . ஒரளவே பிரகாஷிக்கிறார் //

    எனக்கு தெரிந்து இந்த படத்தில் தான் பாடல்களிலும் பிண்ணனி இசையிலும் கலக்குகிறார்

    ReplyDelete
  2. இரண்டும் பார்த்தாகிவிட்டதா !

    அவ்வ்வ்வ்வ் !

    ReplyDelete
  3. //ஹென்றி மார்கன் பின்னாளில் மேற்கிந்திய தீவுகளின் கவர்னராக ஆனாராம் .//

    :))

    ReplyDelete
  4. //மொத்ததில் இந்த படம் சிறந்த பொழுதுபோக்கு சித்திரம் . இப்போது பார்த்தாலும் திகட்டாதது .
    //


    yes boss

    ReplyDelete
  5. பழசும் புதுசும் கலந்து காக்டெயில் ஆக்கி இருக்கீங்க....வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. முதலாவது படம் ஆச்சர்யம்

    இரண்டாவது அயர்ச்சி.

    விமர்சனம் அருமை.

    கார்த்தி யின் ஆயிரத்தில் ஒருவனில் முதல் பாதி பிடித்திருந்தது.

    ReplyDelete
  7. வாங்க அத்திரி

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  8. வாங்க கண்ணன் அண்ணே !!

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  9. இரண்டாயிரத்தில் இருவர் - வித்தியாசமா இரண்டையும் சொல்லியிருக்கீங்க. ஹா ஹா ஹா. நடக்கட்டும் நடக்கட்டும். நான் புதிய படம் ஊருக்கு போயிதான் பார்க்கனும்னு இருக்கேன்.

    ReplyDelete
  10. வாங்க டாக்டர் , வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  11. வாங்க ஸ்டீபன் ராஜ் , வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  12. வாங்க அக்பர் , வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  13. வாங்க நவாஸ் ,

    ஊருக்கு செல்ல வாழ்த்துக்கள் .

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  14. அட்றா சக்கை...அட்றா சக்கை... முதல் ஆயிரத்தில் ஒருவனை அடிச்சுக்க யாராலும்முடியாது...
    புரட்சித்தலைவர் நாமம் ஒங்குக...

    ReplyDelete
  15. வாங்க டிவிஆர் சார்

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  16. /// நாஞ்சில் பிரதாப் said...

    அட்றா சக்கை...அட்றா சக்கை... முதல் ஆயிரத்தில் ஒருவனை அடிச்சுக்க யாராலும்முடியாது...
    புரட்சித்தலைவர் நாமம் ஒங்குக... ///

    வாங்க நாஞ்சிலு

    நல்லா சொன்னீங்க ..

    நானும் ஒரு தடவை சொல்றேன் .

    புரட்சித்தலைவர் நாமம் ஒங்குக...

    ReplyDelete
  17. இரண்டு படங்களையும் ஒப்பிட்டு அழகான விமர்சனம் எழுதி இருக்கிறீர்கள்.

    நீங்கள் புதிய ஆயிரத்தில் ஒருவன் பார்த்துவிட்டீர்கள். நான் இன்னும் பார்கவில்லை.
    இங்கு இன்னும் CD கிடைக்க வில்லை.

    பார்த்துவிட்டு பதில் சொல்கிறேன்.

    ReplyDelete
  18. முதல் விமர்சனம் பிடிச்சிருக்கு.

    :-))

    ReplyDelete
  19. வாங்க

    அபுல் பசர்

    பா.ராஜாராம்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  20. இப்படியும் எழுதலாமோ

    ReplyDelete
  21. ஹ ஹ ஹ....

    அசத்தலான வீரர்களில் ஒருவன்... அசத்தல் :-)

    மணிமாரா மதம்கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?

    சினம் கொண்ட சிங்கத்திடம் தோத்து ஓடும்!.

    ஒவ்வொரு கட்சியும் மறக்க முடியாதது :-)

    ReplyDelete
  22. :) கலக்கிட்டீங்க போங்க.

    ReplyDelete
  23. வாங்க

    நசரேயன்
    சிங்கக்குட்டி
    வெ.இராதாகிருஷ்ணன்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்