கோசம் போடவில்லை
கோட்டைக்கும் போகவில்லை
தெருக்கோடிக்கும் வரவில்லை
ஆயினும் கோடிகளில் புரள
வைத்தனரே என்னை !!
கேட்டால் கைம்பெண்ணாம் நான் !!!
நீ ஆசையாய் இட்ட
வளையலும் நொறுங்கியது
பூவும் வாடியது
பொட்டும் அழிந்தது
என் கண்ணீராலே !!
கலைமகள் வாசம் செய்த
வீணையும் சோக கீதமானதே!!
நீ என்னை விட்டு போனதிலே !!!
கூண்டுக்கிளியாய் இருந்த என்னை
வானம்பாடியாய் திரிய வைத்தாயே !
கல்யாணம் என்ற பந்தத்தாலே
ஆயிரமாயிரம் பந்தங்களை
கண்டேனே உன்னாலே !
இப்போ ஒரு பந்தமும்
இல்லாமல் தனியாய்
தவிக்க வைத்தாயே !!
ஆயினும் ஒரு
சிறிய சந்தோசமே
நீ தந்த உயிருக்காக
என்னை நானே
அர்ப்பணிக்கிறேன் !!.
பெண்ணாய் இருப்பதினால்
தொல்லைகள் பலவும்
சந்தித்தேனே ! நீ
இருந்தால் இதெல்லாம்
தூசியடா எனக்கு !!
உழைக்காத வண்டுகள்
இருக்கும் இங்கே தான் !
நானும் தேனியாய்
வெளியில் காலடி வைத்தேனே !
ஓடி ஒளிகின்றனரே
என்னை கண்டு !!
நானோ வெற்றியெனும்
பாதையை நோக்கி முன்னேற
நீங்களோ தோல்வி எனும்
அகல பாதாளத்திலே !!!
கேட்டால் விதவையாம் நான் !!!
நிம்மதியாய் வேலை செய்ய
விடவில்லையே என்னை !!
உதவி செய்கிறேன் சாக்கில்
உபத்திரம் செய்யாதடா !
முக மலர்ச்சியைக் கொண்ட நீ
உள்ளமெல்லாம் நஞ்சடா
உன் உள்ளம் !!!
மனைவி இறந்தால் உடனே
புது மாப்பிள்ளையாம் அவன் !!
என்னவன் மறைந்தால்
ஆகக்கூடாதோ
புது பெண்ணாய் நான் !!!
நான் போகிறேன் ...!
என்னவன் போன
இடத்துக்கு அல்ல ...
விடியலைத் தேடி ...
//ஆயினும் ஒரு
ReplyDeleteசிறிய சந்தோசமே
நீ தந்த உயிருக்காக
என்னை நானே
அர்ப்பணிக்கிறேன் !!.//
அதனால்தானே வாழ்வதே.
//பெண்ணாய் இருப்பதினால்
தொல்லைகள் பலவும்
சந்தித்தேனே ! நீ
இருந்தால் இதெல்லாம்
தூசியடா எனக்கு !!
//
உண்மை உண்மை.
//உதவி செய்கிறேன் சாக்கில்
உபத்திரம் செய்யாதடா !//
கேட்காமல் செய்யும் உதவி என்றும் உபத்திரம் தான்.
//மனைவி இறந்தால் உடனே
புது மாப்பிள்ளையாம் அவன் !!
என்னவன் மறைந்தால்
ஆகக்கூடாதோ
புது பெண்ணாய் நான் !!!//
அதானே.
நல்லா வந்திருக்கு கவிதை.
////நான் போகிறேன் ...!
ReplyDeleteஎன்னவன் போன
இடத்துக்கு அல்ல ...
விடியலைத் தேடி ...////
நல்லா இருக்கு ஸ்டார்ஜன். சும்மா ”நச்”சுன்னு முடிச்சிட்டீங்க.
//மனைவி இறந்தால் உடனே
ReplyDeleteபுது மாப்பிள்ளையாம் அவன் !!
என்னவன் மறைந்தால்
ஆகக்கூடாதோ
புது பெண்ணாய் நான் !!!//
ஏன் ஆகக்கூடாது...
வரிகள் ஒவ்வொன்றும் கலக்கல்...
நிதர்சன வரிகள்
ReplyDeleteஒரு விதவையின் புலம்பல்
//மனைவி இறந்தால் உடனே
புது மாப்பிள்ளையாம் அவன் !!
என்னவன் மறைந்தால்
ஆகக்கூடாதோ
புது பெண்ணாய் நான் !!!
/
நிச்சயமா, இந்த சமுதாயம் இதற்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பது முக்கியம்
வாங்க அக்பர் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி
ReplyDelete/// S.A. நவாஸுதீன் said...
ReplyDelete////நான் போகிறேன் ...!
என்னவன் போன
இடத்துக்கு அல்ல ...
விடியலைத் தேடி ...////
நல்லா இருக்கு ஸ்டார்ஜன். சும்மா ”நச்”சுன்னு முடிச்சிட்டீங்க. ///
வாங்க நவாஸ்
வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி
//// Sangkavi said...
ReplyDelete//மனைவி இறந்தால் உடனே
புது மாப்பிள்ளையாம் அவன் !!
என்னவன் மறைந்தால்
ஆகக்கூடாதோ
புது பெண்ணாய் நான் !!!//
ஏன் ஆகக்கூடாது...
வரிகள் ஒவ்வொன்றும் கலக்கல்... ///
வாங்க சங்வி
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
/// அபுஅஃப்ஸர் said...
ReplyDeleteநிதர்சன வரிகள்
ஒரு விதவையின் புலம்பல்
//மனைவி இறந்தால் உடனே
புது மாப்பிள்ளையாம் அவன் !!
என்னவன் மறைந்தால்
ஆகக்கூடாதோ
புது பெண்ணாய் நான் !!!
/
நிச்சயமா, இந்த சமுதாயம் இதற்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பது முக்கியம் . ////
வாங்க அபு அஃப்ஸர்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
நல்ல வரிகள்..................
ReplyDeleteஇது கவிதை மாதமா உங்களுக்கு??
நல்ல வரிகள் நண்பரே... கலக்குங்க..
ReplyDeleteவாங்க அத்திரி
ReplyDeleteஅப்படியெல்லாம் ஒன்றும் இல்லை
வருகைக்கு நன்றி
வாங்க ஜாக்கி சேகர்
ReplyDeleteவருகைக்கு நன்றி
//மனைவி இறந்தால் உடனே
ReplyDeleteபுது மாப்பிள்ளையாம் அவன் !!
என்னவன் மறைந்தால்
ஆகக்கூடாதோ
புது பெண்ணாய் நான் !!!//
கவிதையின் இந்த வரிகள் மிக அருமை சேக்மைதீன்.
/// செ.சரவணக்குமார் said...
ReplyDelete//மனைவி இறந்தால் உடனே
புது மாப்பிள்ளையாம் அவன் !!
என்னவன் மறைந்தால்
ஆகக்கூடாதோ
புது பெண்ணாய் நான் !!!//
கவிதையின் இந்த வரிகள் மிக அருமை சேக்மைதீன். ///
வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி சரவணக்குமார்
// ஆயினும் கோடிகளில் புரள
ReplyDeleteவைத்தனரே என்னை !!
கேட்டால் கைம்பெண்ணாம் நான் !!! ///
வெள்ளைத் துணிதான் உடுத்தனும் என்ற சம்பிரதாயத்தை எப்போத்தான் மாத்தப் போறாங்களோ ...
நல்ல சமூக சிந்தனை ..
/// மனைவி இறந்தால் உடனே
புது மாப்பிள்ளையாம் அவன் !!
என்னவன் மறைந்தால்
ஆகக்கூடாதோ
புது பெண்ணாய் நான் !!! ///
சீர்திருத்தம் வரவேண்டும் , கைம்பெண் வாழ்விலே ...
/// நான் போகிறேன் ...!
என்னவன் போன
இடத்துக்கு அல்ல ...
விடியலைத் தேடி ... ///
நல்ல டச்சிங்
அருமையான கருத்துக்கள் உள்ள கவிதை
நல்லாருக்கு ..
கவிதை மிகவும் அருமை ..
ReplyDeleteநல்ல வரிகள்
வருகைக்கு நன்றி கட்டபொம்மன்
ReplyDeleteவருகைக்கு நன்றி ராஜா
ReplyDeleteவிழிப்புணர்வைத் தூண்டும் வரிகள் ஸ்டார்ஜன், நல்லா எழுதியிருக்கீங்க.
ReplyDeleteவாங்க SUFFIX வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி
ReplyDeleteஅருமையான கவிதை....ஒவ்வொரு வரிகளுமே......
ReplyDeleteவாங்க malar
ReplyDeleteவருகைக்கு நன்றி