உலகம் சுருங்கி விட்டது . எத்தனை எத்தனை முன்னேற்றங்கள் . அறிவியல் வளர்ச்சி மனிதனை முன்னேற்ற பாதையில் செலுத்துகிறது . தகவல் பரிமாற்றங்கள் , தகவல் தொடர்பு , போக்குவரத்து , நாகரீக வளர்ச்சி , கலாச்சார முன்னேற்றங்கள் இப்படி மக்கள் முன்னேறி வருகிறார்கள் .
மக்கள்தொகை அதிகரிப்பது போல போக்குவரத்தும் பெருகி வருகின்றது . நாளுக்கு நாள் புதிய புதிய வாகனங்கள் வந்த வண்ணம் உள்ளன . அதுவும் ஒருத்தரிடம் டூவீலர் இருக்கிறதென்றால் அவர் காட்டுற பந்தாவைக் கேட்க வேணாம் . நம்ம ஆள் பாக்கிறதுக்காக வேண்டியே வேகமா போவாங்க .
இவ்வளவு வேகமா போகும் போது சாலை விதிகளை பின்பற்றுவார்களா என்றால் இல்லை . சாலை விதிகளை பின்பற்றாமல் இழப்புகளை நிறைய சந்திக்கிறோம் . நாம எதிர்பாராத இழப்புகளை சந்திக்கிறோம் . நோய் வந்து இறந்து போவதை விட சாலை விபத்துக்களால் ஏற்படும் மரணங்கள் நிறைய பெருகி வருகின்றது . என்ன செய்வது ...
நான் காலேஜ் படிக்கும் வரை டூவீலர் ஓட்டத் தெரியாது . சைக்கிள் தான் ஓட்டுவேன் . காலேஜ் படிக்கும் போது நண்பர்கள் கொண்டு வரும் டூவீலரை ஓட்ட பழகினேன் .
நான் டிவிஎஸ் கம்பெனியில் வேலைப்பார்க்கும் போது பெரும்பாலும் நிறைய தூரம் மோட்டார் சைக்கிளில் தான் பயணம் செய்வேன் . ஆனால் கவனமாக செல்வேன் . நிதானம் இழக்க மாட்டேன் . இரவில் பயணம் செய்யும் போது கவனமாக செல்வேன் .
நம்ம பஸ் ஓட்டுனர்களை பற்றி கேட்கவே வேண்டாம் . பிளைட் ஓட்டுவதை போல வேகமாக ஓட்டுவார்கள் . இரவு நேரத்தில் ஒரு ஹெட்லைட் மட்டும் தான் போட்டு வருவார்கள் . ஒரு தடவை தூத்துக்குடியில் இருந்து நெல்லை வந்து கொண்டிருந்தேன் . அப்போ இரவு நேரம் . எதிரே தூரத்தில் ஒரு பஸ் வந்து கொண்டிருந்தது . நான் அறியவில்லை . ஒரு ஹெட்லைட் மட்டும் தான் எரிந்தது . ஏதோ டுவீலர் தான் வந்து கொண்டிருக்கிறது என நான் நினைத்தேன் . அருகே வரும் போது தான் தெரிந்தது அது பஸ் என்று .
அந்த பஸ் என்னை உரசுவதுபோல சென்றதால் திடிரென பிரேக் அடித்தேன் . வண்டியை ஓரமாக ஒதுக்கினேன் . இதே நேரம் என்னால் பின்னால் ஏதாவது வாகனம் வந்திருந்தால் என் கதி என்னாயிருக்கும் ?.
அப்புறம் இன்னொரு சம்பவம்
நான் இன்னொரு நாள் டுவீலரில் நெல்லையிலிருந்து திருச்செந்தூர் போய்க்கொண்டிருந்தேன் . வழியில் ஸ்ரீவைகுண்டம் பாலத்துக்கு அருகில் வரும்போது எதிரில் ஒரு சைக்கிள் நபர் நான் வருவதைக் கவனிக்காமல் ரோட்டை கடந்தார் . அப்போது என் வண்டியில் மோதிவிட்டார் . நான் உடனே பிரேக் அடித்ததில் என் டுவீலர் சரிந்து என் பாதத்தில் பிரேக் லீவர் குத்தி மறுபக்கம் வந்தது . உடனே நான் மயங்கினேன் .
உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் என்னைத் தூக்கி சோடா தெளித்து மயக்கம் தெளிவித்தனர் . பக்கத்தில் வந்து கொண்டிருந்த ஆட்டோக்காரர் என்னை அவர் வண்டியில் ஏத்தி ஸ்ரீவைகுண்டம் ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தார் . என் வண்டியை பக்கத்தில் இருந்த வாகன காப்பகத்தில் சேர்த்தனர் . ஆட்டோக்காரரே ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்து டாக்டரிடம் காண்பித்து தையல் போட வைத்தார் . பின்னர் நான் ஓரளவு சுதாரித்துக் கொண்டேன் .
நான் அந்த ஆட்டோக்கார நண்பருக்கு என் நன்றிகளை தெரிவித்தேன் . அவரும் பரவாயில்லை தம்பி என்று சொன்னார் .
அதன்பின்னர் நான் அலுவலகத்து போன் செய்து விபரம் சொன்னேன் . அங்கே இருந்து நண்பர் ஒருவர் வந்தார் . பின் நான் செல்ல வேண்டிய ஊருக்கு என் வண்டியை எடுத்துக் கொண்டு சென்றார் . நான் ஊருக்கு மெதுவா மெதுவா பஸ்ஸில் ஏறி வந்தேன் . நான் இப்போதும் அவ்வழியா சென்றால் அந்த இடத்தை மறக்க மாட்டேன் .
அப்புறம் இன்னொரு சம்பவம்
எங்கள் ஷோரூம் இருந்த இடத்துக்கு 200 மீட்டர் தொலைவில் போலீஸ் ஸ்டேசன் உண்டு . போலீஸ் ஸ்டேசன் அருகில் செக்போஸ்ட் வைத்திருந்தார்கள் . வரும் வாகனங்கள் அந்த குறுகிய வழியாக மெதுவாக செல்ல வேண்டும் .
அந்த ஊரில் ஐடிஐ உண்டு . அதில் மோட்டார் மெக்கானிக் சொல்லிக் கொடுக்கும் சார் மிகவும் தங்கமானவர் . எல்லோரிடமும் அன்பா இருப்பார் . என்னிடமும் சார் சார் என்று அன்பா இருப்பார் .
ஒரு நாள் அவரும் அவருடைய மாணவர் ஒருவரும் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார் . செக்போஸ்ட் அருகே வரும் போது எதிரில் ஒரு பஸ் வந்து கொண்டிருந்தது . பின்னாலும் பஸ் வந்து கொண்டிருந்தது . பின்னால் வந்த பஸ் டிரைவரின் அவசர புத்தியால் செக்போஸ்டில் வைக்கப்பட்டிருந்த இரும்புத் தட்டியில் மோதி அருகில் வந்த ஐடிஐ சார் வண்டியில் மோதி விபத்துக்குள்ளானது . இதில் பஸ்ஸில் இருந்தவர்களுக்கு ஒன்றும் இல்லை .
ஐடிஐ சார் வண்டியில் பஸ் மோதியதால் அவரும் அவர் மாணவரும் பலத்த காயம் அடைந்தனர் . அருகில் உள்ள முதலுதவி மையத்தில் முதலுதவி செய்தனர் . உடனே நெல்லை பெரிய மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர் . மாணவனுக்கும் பலத்த அடி . சாருக்கு பலத்த அடி . அவருடைய காலை இழக்க வேண்டியதாயிற்று . எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது .
********************************************
சாலை பாதுகாப்பு வாரமான ஜனவரி முதல் வாரத்தில் இந்த இடுகையை பதிவிட நினைத்து இருந்தேன் . கால தாமதமாகி விட்டது .
சாலை விதிகளை கண்டிப்பா அனைவரும் மதிக்க வேண்டும். வண்டியை சரியா மிதிக்க வேண்டும்.
ReplyDeleteநல்லதொரு பதிவு
தேவையான இடுகை. நாம் மட்டுமே ஜாக்கிரதையாக இருப்பது போறாது எனினும் நாமும்.. இல்லாவிட்டால் ஆபத்து.
ReplyDeleteநல்ல பதிவு staarjan.
ReplyDeleteநல்ல பகிர்வு தல...
ReplyDeleteஎங்களூர்களுக்குத் தேவையான பதிவு.நான் அடிக்கடி சொல்வதுண்டு.
ReplyDeleteஇங்கெல்லாம் சாரதி அனுமதிப் பத்திரம் எடுத்து வாகனம் ஓட்டுவது பெரிய விஷயமல்ல.எங்கள் ஊரில் எடுத்து ஓடுவதுதான் பெருமை.
அதாவது அது ஒரு த்ரில்.அப்பாடி...!எங்கெங்கே இடம் இருக்கோ அங்கெல்லாம் வாகனம் விடலாம் ஓடலாம்.
சாலை விதிகளைப் போலவே வாகனம் ஓட்டும் போது தகுந்த காலனிகள் தலைகவசம் அணியனும், அன்னிக்கு ஷூ போட்டு ஓட்டி இருந்தால் உங்கள் காலில் காயம் ஏற்பட்டு இருக்காது
ReplyDeleteஓ.கே..,
ReplyDeleteஜனவரி முதல்வாரம் மட்டும் அல்ல எப்போ வேண்டுமானாலும் போடலாம்...
ReplyDeleteஉண்மை ஸ்டார்ஜன் சாலைவிபத்துக்கள் தவிர்க்கப் படவேண்டிய ஒன்று
ReplyDeleteஇப்பெல்லாம் நியூஸ்ல ஆக்சிடெண்ட் பத்தி சொல்லாத நாளே இல்லையென்ற அளவுக்கு சாலை விபத்துகள் அதிகரித்துவிட்டது. ஒருவர் சரியா இருந்தாலும் மற்றவர் சரியில்லையென்றால் இருவருக்கும் பாதிப்பு. அதனால் ஒவ்வொருவரும் சரியாக சாலை விதிகளை பின்பற்றியே ஆகவேண்டும்.
ReplyDeleteநல்ல பகிர்வு ஷேக்மைதீன்.
இந்தப் பதிவிற்கு நன்றி சேக்மைதீன். நல்ல கருத்துள்ள இடுகை.
ReplyDeleteவாங்க அக்பர்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
/// வானம்பாடிகள் said...
ReplyDeleteதேவையான இடுகை. நாம் மட்டுமே ஜாக்கிரதையாக இருப்பது போறாது எனினும் நாமும்.. இல்லாவிட்டால் ஆபத்து. ///
வாங்க வானம்பாடிகள் பாலா சார்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க பா.ரா சார்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க வசந்த்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
/// ஹேமா said...
ReplyDeleteஎங்களூர்களுக்குத் தேவையான பதிவு.நான் அடிக்கடி சொல்வதுண்டு.
இங்கெல்லாம் சாரதி அனுமதிப் பத்திரம் எடுத்து வாகனம் ஓட்டுவது பெரிய விஷயமல்ல.எங்கள் ஊரில் எடுத்து ஓடுவதுதான் பெருமை.
அதாவது அது ஒரு த்ரில்.அப்பாடி...!எங்கெங்கே இடம் இருக்கோ அங்கெல்லாம் வாகனம் விடலாம் ஓடலாம். ///
வாங்க ஹேமா
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .
/// கோவி.கண்ணன் said...
ReplyDeleteசாலை விதிகளைப் போலவே வாகனம் ஓட்டும் போது தகுந்த காலனிகள் தலைகவசம் அணியனும், அன்னிக்கு ஷூ போட்டு ஓட்டி இருந்தால் உங்கள் காலில் காயம் ஏற்பட்டு இருக்காது . ////
வாங்க கண்ணன் அண்ணே
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க டாக்டர்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
/// நாஞ்சில் பிரதாப் said...
ReplyDeleteஜனவரி முதல்வாரம் மட்டும் அல்ல எப்போ வேண்டுமானாலும் போடலாம்... ///
வாங்க பிரதாப்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
/// thenammailakshmanan said...
ReplyDeleteஉண்மை ஸ்டார்ஜன் சாலைவிபத்துக்கள் தவிர்க்கப் படவேண்டிய ஒன்று ///
வாங்க தேனம்மை அக்கா
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
/// S.A. நவாஸுதீன் said...
ReplyDeleteஇப்பெல்லாம் நியூஸ்ல ஆக்சிடெண்ட் பத்தி சொல்லாத நாளே இல்லையென்ற அளவுக்கு சாலை விபத்துகள் அதிகரித்துவிட்டது. ஒருவர் சரியா இருந்தாலும் மற்றவர் சரியில்லையென்றால் இருவருக்கும் பாதிப்பு. அதனால் ஒவ்வொருவரும் சரியாக சாலை விதிகளை பின்பற்றியே ஆகவேண்டும்.
நல்ல பகிர்வு ஷேக்மைதீன். ///
வாங்க நவாஸ்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
/// செ.சரவணக்குமார் said...
ReplyDeleteஇந்தப் பதிவிற்கு நன்றி சேக்மைதீன். நல்ல கருத்துள்ள இடுகை. ///
வாங்க சரவணக்குமார்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
நல்லதொரு பகிர்வு.அதோடு உங்களின் மலரும் நினைவுகளையும் எங்களோடு பகிர்ந்துக் கொண்டமைக்கு சந்தோசம்.
ReplyDeleteஒருமுறை கண்ணதாசன் வெளிநாடு சென்றிருந்தாராம். ஒரு விழாவில் கலந்துகொள்ள காரில் சென்றாராம். ஏற்கனவே காலதாமதம் ஆனாதல் ஓட்டுநர் வண்டியை விரைவாக செலுத்தினாராம்..
ReplyDeleteமெதுவாப் போப்பா என்றாறாம் கண்ணதாசன்..
ஓட்டுநர் ஐயா இப்பொதே நேரம் ஆகிவி்ட்டது என்றாராம்..
அதற்கு கண்ணதாசன் ...
“பத்து நிமிஷம் தாமதமாப் போகலாம் தப்பில்லை!
பத்துவருசம் முன்னாடியே போய் சேர்ந்திரக்கூடாது”
அதுக்குத்தான் சொல்றேன் மெதுவாப் போ என்று சொன்னாராம்..
அவசியமான பதிவு.
ReplyDeleteஅனுபவம்தான் சிலநேரத்தில் நல்லவிசயங்களையும் நமக்கு கற்றுக்கொடுக்கின்றன. இதுபோன்ற அனுபவங்களை பகிர்ந்துகொண்டதன் மூலம் சாலையில் பயணிப்பதில் கவனம் செலுத்தவேண்டும் என்ற எண்ணமும் உண்டாகிறது.
ReplyDeleteநன்றி...
அருமையான பதிவு .
ReplyDeleteமினி பஸ் காரங்க அட்டகாசம் தாங்க முடியவில்லை .school time இல் எதிர் எதிரே வந்த பஸ்ஸில் ஃபோட்டில் நின்று பயணம் செய்த 2மாணவர்களை நெரித்துக் கொண்ற சம்பவம் நாகர்கோவிலில் நடந்தது .அதாவது அந்த2 பஸ் டிரைவரும் friend இரண்டு பேரும் செந்தில் டைபில் கொஞ்சி இருகாங்க .பஸ் இரண்டும் ஒட்டியே போரமாதிரி வந்திருக்கு 2பஸ்ஸிலும் படிகட்டில் நின்ற பச்ங்க நாலு பேர் இரண்டுபேர்
நசிங்கி இறந்து விட்டார்கள் .
நாம் ரோடு வழியே நடந்து போகும் போது குறிப்பாக பெண்கள் என்றால்
மினி பஸ்காரங்க நம்மை ஒட்டி பொறமாதிரியே வ்ண்டியை கொண்டு போவார்கள் .பஸ் வருது என்று தெரிந்தாலே ஓரமாக ஒதிங்கி பகத்தில் படிக்கட்டோ ஏதோ ஒன்ர்றில் பாது காப்பாக நின்று பஸ் போன்பிறகு போவது தான் நல்லது.
கண்காணிக்கும் கேமரா இருக்கும் ஊர்களில் கூட கண், மண் தெரியாமல் ஓட்டுபவர்கள் உண்டு.
ReplyDeleteநல்லதொரு அனுபவ பாடங்கள். அனைவருக்கும் பயனுள்ள இடுகை.
அபுல் பசர் said...
ReplyDeleteநல்லதொரு பகிர்வு.அதோடு உங்களின் மலரும் நினைவுகளையும் எங்களோடு பகிர்ந்துக் கொண்டமைக்கு சந்தோசம்.
வாங்க அபுல் பசர் சார்
வருகைக்கும் க்ருத்துக்கும் மிக்க நன்றி
//// முனைவர்.இரா.குணசீலன் said...
ReplyDeleteஒருமுறை கண்ணதாசன் வெளிநாடு சென்றிருந்தாராம். ஒரு விழாவில் கலந்துகொள்ள காரில் சென்றாராம். ஏற்கனவே காலதாமதம் ஆனாதல் ஓட்டுநர் வண்டியை விரைவாக செலுத்தினாராம்..
மெதுவாப் போப்பா என்றாறாம் கண்ணதாசன்..
ஓட்டுநர் ஐயா இப்பொதே நேரம் ஆகிவி்ட்டது என்றாராம்..
அதற்கு கண்ணதாசன் ...
“பத்து நிமிஷம் தாமதமாப் போகலாம் தப்பில்லை!
பத்துவருசம் முன்னாடியே போய் சேர்ந்திரக்கூடாது”
அதுக்குத்தான் சொல்றேன் மெதுவாப் போ என்று சொன்னாராம்.. /////
வாங்க குணசீலன் சார்
கண்ணதாசன் பற்றிய கருத்துக்கள் மிக அருமை
எங்களோடு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி
வருகைக்கும் க்ருத்துக்கும் மிக்க நன்றி
// ராமலக்ஷ்மி said...
ReplyDeleteஅவசியமான பதிவு. ///
வாங்க ராமலட்சுமி மேடம்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
/// க.பாலாசி said...
ReplyDeleteஅனுபவம்தான் சிலநேரத்தில் நல்லவிசயங்களையும் நமக்கு கற்றுக்கொடுக்கின்றன. இதுபோன்ற அனுபவங்களை பகிர்ந்துகொண்டதன் மூலம் சாலையில் பயணிப்பதில் கவனம் செலுத்தவேண்டும் என்ற எண்ணமும் உண்டாகிறது.
நன்றி... ////
வாங்க க.பாலாசி
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
/// malar said...
ReplyDeleteஅருமையான பதிவு .
மினி பஸ் காரங்க அட்டகாசம் தாங்க முடியவில்லை .school time இல் எதிர் எதிரே வந்த பஸ்ஸில் ஃபோட்டில் நின்று பயணம் செய்த 2மாணவர்களை நெரித்துக் கொண்ற சம்பவம் நாகர்கோவிலில் நடந்தது .அதாவது அந்த2 பஸ் டிரைவரும் friend இரண்டு பேரும் செந்தில் டைபில் கொஞ்சி இருகாங்க .பஸ் இரண்டும் ஒட்டியே போரமாதிரி வந்திருக்கு 2பஸ்ஸிலும் படிகட்டில் நின்ற பச்ங்க நாலு பேர் இரண்டுபேர்
நசிங்கி இறந்து விட்டார்கள் .
நாம் ரோடு வழியே நடந்து போகும் போது குறிப்பாக பெண்கள் என்றால்
மினி பஸ்காரங்க நம்மை ஒட்டி பொறமாதிரியே வ்ண்டியை கொண்டு போவார்கள் .பஸ் வருது என்று தெரிந்தாலே ஓரமாக ஒதிங்கி பகத்தில் படிக்கட்டோ ஏதோ ஒன்ர்றில் பாது காப்பாக நின்று பஸ் போன்பிறகு போவது தான் நல்லது. ////
வாங்க மலர் மேடம்
நீங்கள் குறிப்பிட்ட சம்பவம் ரொம்ப வருந்ததக்கது .
கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி
வருகைக்கும் கருத்துக்கும் மிகக் நன்றி
/// வெ.இராதாகிருஷ்ணன் said...
ReplyDeleteகண்காணிக்கும் கேமரா இருக்கும் ஊர்களில் கூட கண், மண் தெரியாமல் ஓட்டுபவர்கள் உண்டு.
நல்லதொரு அனுபவ பாடங்கள். அனைவருக்கும் பயனுள்ள இடுகை. ///
வாங்க ராதாக்கிருஷ்ணன் சார்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
நல்ல பதிவு:)) வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாங்க பலா பட்டறை
ReplyDeleteவருகைக்கு நன்றி