அலைந்தேன் திரிந்தேன்
எதுஎதுக்கோ _ நீங்கள்
எதுவும் நினைப்பது போல
வேறொன்றும் இல்லை .
பாசம் கொட்டி வளர்த்து
வந்தேன் _ என் கஷ்டத்தை
நினைக்காமலே ...
கேட்டதெல்லாம் வாங்கிக்
கொடுத்தேன் _ ஆனால்
இப்போது அவள் கேட்பது
என் மருமகனாக மாப்பிள்ளையை .
பெயரும் மனசும் வெள்ளையாய்
இருந்து என்ன பயன் ?.
பொன் பொருளல்லவா
வேண்டும் எனக்கு ...
நான் உழைத்தெல்லாம்
சாப்பாட்டுக்கே பத்தல ..
உலகத்தில் ஆயிரம் இருக்கு..
அதை தேடி அலையாத
சோம்பேறியல்ல நான் .
மாப்பிள்ளை சந்தைக்கு
சென்றால் யானை விலை
குதிரை விலையாம் ..
நானும் விலை பேசுகிறேன்
மாப்பிள்ளையை என் செல்லத்துக்கு ...
வரலாற்றிலே பெண் சுயம்வரம்
நடத்தினாளாம் .. மாப்பிள்ளை
ஓடோடி வந்தனரே ...
நானும் சுயம்வரம் நடத்த
அந்த காலத்துக்கே போகணுமோ ?...
நானும் அணையைக் கட்டி
வழிமேல் விழி வைத்து
காத்திருக்கிறேன் ...
ஊருக்குள் வராத
ஆற்றை எண்ணி ...
வருமா என் தாகம் தீருமா ..
****************************************
மனதை கஷ்டப்படுத்தி விட்டது நண்பா.
ReplyDeleteஎன்னைக்குதான் இந்த வரதட்சணை என்ற பேய் ஒழியுமோ.
மாப்பிள்ளை சந்தைக்கு
ReplyDeleteசென்றால் யானை விலை
குதிரை விலையாம் ..
நானும் விலை பேசுகிறேன்
மாப்பிள்ளையை என் செல்லத்துக்கு ...
அழகான வார்த்தைகள்.
வரதட்சணை வாங்குவது முன்பு போல் தற்பொழுது இல்லை.குறைந்துகொண்டு வருகிறது.காரணம் தற்காலத்து இளைஞர்கள் சிந்திக்க தொடங்கிவிட்டார்கள். இது ஒரு நல்ல மாற்றமே.
//வழிமேல் விழி வைத்து
ReplyDeleteகாத்திருக்கிறேன் ...
ஊருக்குள் வராத
ஆற்றை எண்ணி ...
வருமா என் தாகம் தீருமா ..//
கிராமத்தில் பெண்களை பெற்றவர்களின் நிலைமை இது தான் .......
நல்ல படைப்பு ஷேக்மைதீன். கலங்கடித்துவிட்டீர்கள். இப்போது நிறைய மாற்றம் தெரிகிறது. வரதட்சணை நிச்சயம் ஒழியும்.
ReplyDeleteஅருமையான சிந்தனை. அழகான பதிவு. வாழ்த்துக்கள் ஷேக்.
ReplyDeleteநாம் சொல்லிக்கொண்டே இருப்போம்
ReplyDeleteநம் எண்ணங்களை எழுத்துக்கள் மூலம்
வெகுவிரைவில் விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்..
அருமையான வரிகள்
நல்ல சிந்தனை சேக்மைதீன். உங்கள் கவிதைகளில் காணமுடிகின்ற நல்ல கருத்துக்களுக்காக உங்களுக்கு ஒரு சல்யூட்.
ReplyDelete//நானும் அணையைக் கட்டி
ReplyDeleteவழிமேல் விழி வைத்து
காத்திருக்கிறேன் ...
ஊருக்குள் வராத
ஆற்றை எண்ணி ...
வருமா என் தாகம் தீருமா ..//
அழகான ஆழமான வரிகள்...
வாங்க
ReplyDeleteஅக்பர்
அபுல் பசர்
நாடோடி
S.A. நவாஸுதீன்
துபாய் ராஜா
அன்புடன் மலிக்கா
செ.சரவணக்குமார்
Sangkavi
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
This comment has been removed by the author.
ReplyDeleteவரதட்சணையை பத்தி அருமையான கவிதை
ReplyDeleteநல்லதொரு விழிப்புணர்வு கவிதை.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
ReplyDeleteகட்டபொம்மன்
வெ.இராதாகிருஷ்ணன்
ஸ்டார்ஜன்..நல்ல கவிதை.
ReplyDeleteஎடுத்துக்கொண்ட
விஷயத்திற்கே ஒரு சபாஷ்.
வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஹேமா
ReplyDeleteநல்ல படைப்பு.. அருமையான கருத்து.
ReplyDelete