Pages

Saturday, January 16, 2010

என்னுயிர் நீ தானே ...

முத்தமிழே முழுமையாய்
என் மனதிலே எப்போ ?..


கவிதை எழுதினேன்
தப்பும் தவறுமாய்
அர்த்தமே இல்லாமல் ..
கேட்டால் காதலுக்காக !!!


பேசினேன் உன்னிடம்
ஏதேதோ கொச்சையாய்
நீயும் பதிலுக்கு பேசினாய்
அர்த்தமே இல்லாமல் !!


வீண் விவாதங்கள் எல்லாம்
உன்னாலே செய்தேன் ..
உனக்கு விருப்பமானதுக்கு !!!.
என்னில் ஆயிரத்தெட்டு
குறைகளை வைத்துக்கொண்டு
கேட்டால் முற்போக்குவாதியாம் ...


முத்தமிழே முழுமையாய்
என் மனதில் எப்போ ? ..



தாகத்துக்கு தண்ணீர் கேட்டேன்
தராமல் சென்றாய் என்னை
பார்த்துக் கொண்டே
என் உயிர் போகும்வரை !!
நீயா பேசுகிறாய்
மனித நேயத்தை பத்தி ? ..



ஆன்றோரும் சான்றோரும்
என்னிடம் கேட்டால்
என்ன சொல்வேன் ..
இதை பத்தி !!
விழி மூடி யோசிக்கிறேன் ..!!! .



முத்தமிழே முழுமையாய்
என் மனதில் எப்போ ? ...

Post Comment

12 comments:

  1. கவிதை ரொம்ப காட்டமா இருக்கு.

    பல பேரை தாக்கியிருக்கீங்க.

    ReplyDelete
  2. நல்லா இருக்கு ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  3. //தாகத்துக்கு தண்ணீர் கேட்டேன்
    தராமல் சென்றாய் என்னை
    பார்த்துக் கொண்டே
    என் உயிர் போகும்வரை !!
    நீயா பேசுகிறாய்
    மனித நேயத்தை பத்தி ? ..//

    எதார்த்தமான இந்த வரிகள் மிக அருமை சேக்மைதீன்.

    ReplyDelete
  4. //பேசினேன் உன்னிடம்
    ஏதேதோ கொச்சையாய்
    நீயும் பதிலுக்கு பேசினாய்
    அர்த்தமே இல்லாமல் !!//

    அட அதுவே இவ்வளவு நல்லா இருக்கே ஸ்டார்ஜன்

    ReplyDelete
  5. அழகான,அருமையான் கவிதை.
    தொடரட்டும் உங்கள் கவிதை ஆக்கம்.

    ReplyDelete
  6. 2 நாட்கள் இணையத் தொடர்பு இல்லாததால் பதில் சொல்ல இயலவில்லை என்பதை வருத்ததுடன் கேட்டுக் கொள்கிறேன் .

    ReplyDelete
  7. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பர்களே !!

    அக்பர்

    வானம்பாடிகள் பாலா சார்

    நவாஸ்தீன்

    சரவணக்குமார்

    வசந்த்

    அபு அஃப்ஸர்

    தேனம்மை அக்கா

    அபுல் பசர் சார்

    ReplyDelete
  8. உங்கள் கவிதைகளின் தரம் கூடி வருகிறது ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  9. வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஹேமா

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்