பதிவர் ஹேமா தன் வலைப்பக்கத்தில் ( உப்புமடச் சந்தி ) ஒரு கதை சொல்லி இருந்தார் . நல்ல அருமையான அழகான கதை . அதை படித்ததும் எனக்கு சிறு வயதில் படித்த கதை ஞாபகத்தில் வந்தது . அந்த கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் .
இதோ அந்த கதை :
*******************************************************
ஒரு ஊரில் ஒரு பெரிய செல்வந்தர் ஒருவர் இருந்தான் . நல்ல சொத்து செல்வாக்கு இருந்தும் என்ன பயன் . அவன் ஒரு கஞ்சன் , பேராசைக்காரன் . அடுத்தவங்களுக்கு உதவியே செய்ய மாட்டான் . இப்படி அவன் வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது .
பக்கத்து ஊரில் ஒரு வியாபாரி ஒருவன் இருந்தான் . அவன் சிறுசிறு பொருள்களை சந்தையில் விற்று பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தான் . அவன் பக்கா ஏமாற்றுக்காரன் .அடுத்தவனை எப்படியெல்லாம் ஏமாற்றி சம்பாதிக்ககூடிய வித்தைகள் தெரிந்தவன் . ஆனா அவனை யாரும் சுலபமா ஏமாத்திட முடியாது .
வியாபாரி ஒரு கிளி வளர்த்து வந்தான் . அதுக்கு தினமும் பேச பயிற்சி கொடுத்து வந்தான் . ஆனால் ஒரே ஒரு வார்த்தை மட்டும் பேச கத்துக் கொடுத்தான் . அது என்னன்னா , அதிலென்ன சந்தேகம் என்ற வார்த்தையை மட்டும் தான் என்று அந்த கிளிக்கு பேசத்தெரியும் .
ஒரு நாள் இரவோடு இரவாக சந்தைக்கு சென்று அங்கே தான் கொண்டு வந்திருந்த பணம் நகை பொன் வைரம் பொருள்களை எல்லாம் தரையில் புதைத்து வைத்தான் . மறு நாள் காலை , சந்தையில் அந்த கிளியை விற்றுக் கொண்டிருந்தான் .
எல்லோரும் பாருங்க இது அதிசய கிளி ; இது புதையல் இருக்கிற இடத்தை நமக்கு சொல்லும் அதிசய கிளி . இப்போ பாருங்க , ஏ அதிசயகிளியே ! இங்கே புதையல் இருக்கா என்று கிளியிடம் கேட்டான் . உடனே கிளியும் அவன் சொல்லிக் கொடுத்தது போல அதிலென்ன சந்தேகம் என்று சொல்லியது .
உடனே அந்த இடத்தை தோண்டினான் . அங்கே அவன் ஏற்கனவே புதைத்து வைத்திருந்த இடத்தில் இருந்து பணம் நகை இருந்தது . இதை பார்த்த மக்கள் அவன் சொன்னதை உண்மை என்று நம்பினர் . அவனும் புதைத்து வைத்த இடங்களை சுட்டிக்காட்டி ஏ கிளியே இந்த இடத்தில் புதையல் உள்ளதா என கேட்க கிளியும் அதிலென்ன சந்தேகம் என்று சொல்லியது . மக்கள் ஆச்சர்யத்தில் திளைத்தனர் . அந்த கிளியை ஏலத்தில் எடுக்க போட்டாபோட்டி போட்டனர் .
இதை பார்த்த செல்வந்தரும் ஏலத்தில் கலந்து கொண்டு 10000 பொன் கொடுத்து ஏலத்தில் அந்த கிளியை வாங்கினான் . செல்வந்தருக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை . இனி நாந்தான் உலகில் பெரிய பணக்காரன் என்று கிளி முன்னிலையில் சொன்னான் . உடனே கிளி அதிலென்ன சந்தேகம் என்று சொன்னதும் கிளிக்கு முத்தம் கொடுத்தான் செல்வந்தர் .
உடனே செல்வந்தர் அவன் வீட்டில் தரையை , அந்த கிளியிடம் காண்பித்து என் அதிசய கிளியே !! இந்த இடத்தில் புதையல் இருக்கிறதா ? என்று கேட்டான் . கிளி உடனே அதிலென்ன சந்தேகம் என்று சொல்லியது . அந்த இடத்தை தோண்டினான் . அந்த இடத்தில் ஒன்றும் கிடைக்க வில்லை . அப்புரம் , வேறொரு இடத்தை காண்பித்து இந்த இடத்தில் புதையல் உண்டா என்று கேட்டான் . கிளியும் அதிலென்ன சந்தேகம் என்று சொல்லியது . அந்த இடத்திலும் ஒன்றும் கிடைக்க வில்லை . இப்படி செல்வந்தர் தன் வீட்டில் எல்ல இடத்திலும் தோண்டினான் .
இப்படி தன் வீட்டை இடித்து தரைமட்டமாக்கினான் . புதையல் கிடைத்தபாடில்லை . கிளியும் வழக்கம் போலவே , அதிலென்ன சந்தேகம் என்ற வார்த்தையை தவிர வேறொன்றும் சொல்ல வில்லை .
ஆஹா இந்தகிளிக்கு அதிலென்ன சந்தேகம் என்ற வார்த்தை மட்டும் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கு என்பதை உணர்ந்தான் . அந்த வியாபாரி என்னை நல்லா ஏமாத்தி விட்டான் . பேராசைப்பட்டு இருந்த சொத்தை எல்லாம் இழந்தேனே !! என்னைப்போல இந்த உலகில் அடிமுட்டாள் யாரும் இல்லை என்று கதறி அழுதான் .
உடனே கிளி அதிலென்ன சந்தேகம் என்றது .
கிளி சொன்னதை கேட்டு இடிந்து போனான் செல்வந்தர் .
********************************************************
ஹா ஹா ஹா
ReplyDeleteசூப்பர் கதைமா.
ReplyDeleteஎன்ன செய்ய இப்படியும் சில பேர்.
வருகைக்கு மிக்க நன்றி அண்ணாமலையான்
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி அக்பர்
ReplyDeleteகதை நல்லாருக்கு
ReplyDeleteஉண்மையை உணர்த்திய கதை. நன்றாக இருந்தது.
ReplyDeleteநல்ல கதை ஸ்டார்ஜன்.
ReplyDeleteஇந்தக் கதையை சொன்னவர் ஸ்டார்ஜனா .....அதிலென்ன சந்தேகம் ...hahahaha
ReplyDeleteவாங்க கட்டபொம்மன் , வருகைக்கு நன்றி
ReplyDeleteவாங்க ராதாக்கிருஷ்ணன் சார் , வருகைக்கு நன்றி
ReplyDeleteவாங்க சரவணக்குமார் , வருகைக்கு நன்றி
ReplyDeleteவாங்க தேனம்மை அக்கா , வருகைக்கு நன்றி
ReplyDeleteகதை சொன்ன விதம் அழகு.
ReplyDeleteநீதி கதைகள் இன்னும் நிறைய தேவைப் படுகிறது.
பேராசை கொண்டவர்களுக்கு
இந்த கதை ஒரு படிப் பிணை.
வாங்க அபுல் பசர் சார்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
அருமை.அருமை.
ReplyDeleteவாங்க துபாய் ராஜா
ReplyDeleteவருகைக்கு நன்றி
நல்ல பகிர்வு.
ReplyDeleteவாங்க ராமலட்சுமி மேடம் வருகைக்கு நன்றி
ReplyDelete