Pages

Sunday, January 24, 2010

ஆயிரத்தில் நான் ஒருவன் - 100 வது பதிவு


அன்பு மிக்க வலைப்பதிவு நண்பர்களே ,

நான் இன்று எனது 100 வது இடுகையை பதிவிடுகிறேன் . சென்ற வருடம் ஏப்ரல் 19ம் தேதி முதல் இடுகையை இட்ட நான் இன்று ஆயிரத்தில் நான் ஒருவன் இடுகையின் மூலம் 100 வது பதிவிடுகிறேன் . உங்களின் கருத்துக்களினாலும் , பாராட்டுக்களினாலும் , வாழ்த்துக்களினாலும் தொடர்ந்து தந்து கொண்டிருக்கும் ஆதரவுகளினாலும் தான் என்னால் 100 இடுகைகளை எழுத முடிந்திருக்கிறது .

என்னுடைய எழுத்தை அங்கீகரித்து என்னையும் உங்களில் ஒருவனாக்கிய உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரிய வில்லை .

எனக்கு இதுவரை 57 பேர் பாலோயர்ஸ் ஆகி உள்ளனர் .

கவிதை எழுத தெரியாதே !
பெண்ணே உன்னை
பார்க்கும் வரையிலே !
நாள்தோறும் உன் முகம்
தேடி வந்தேன் என் முகம்
மறக்கும் வரை !!

இதுதான் காதலோ !! உன்னில்
என்னைத் தொலைத்தேனே ...


***********************************

அப்புறம் குட்டியாய் குட்டி விமர்சனம்

நான் நேற்று தான் குட்டித் திரைப்படம் பார்த்தேன் . ஹீரோ முதன்முதலில் ஒரு இடத்தில் ஹீரோயினை பார்க்கிறார் . காதல் வருகிறது . ஹீரோயினும் எம்பி பையனும் காதலிக்கிறார்கள் . அந்த நேரத்தில் ஹீரோ தன் காதலை சொல்கிறார். ஹீரோவும் எம்பி பையனும் போட்டிப் போடுகிறார்கள் . யார் காதல் ஜெயிக்கிறது என்பதை படம் பாக்காதவங்க படம் பார்த்து தெரிஞ்சிக்கோங்க .....

சரியில்ல்லாத கதையும் காட்சிகள் மனதில் ஒட்டாத திரைக்கதையும் ஒரு படத்தை தோல்வியடைய செய்கிறது என்பதற்கு இந்த குட்டி படம் சாட்சி .

படம் ஆரம்பம் முதலே குழப்பங்கள் . தனுஷ் என்ற அருமையான நடிகரை வீணடித்தடிருக்கிறார்கள் . காட்சிகள் , திரைக்கதை ரொம்ப சொதப்பல் .
ஒரே ஆறுதல் தனுஷ் .

ஸ்ரேயா சும்மா வந்து போகிறார் . கதையில் தான் குழப்பம் என்றால் இவர் முகத்திலும் ஏகப்பட்ட குழப்பங்கள் . எதையோ இழந்தது போல ...

இந்த படத்தை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை .

குட்டி _ கடைக்குட்டி .

***************************************


ஒரே ஒரு தத்துவம்

நாளை நலமாக இருக்க , உங்களை இன்றே நலமாக்கிக் கொள்ளுங்கள் ...


****************************************

ஆயிரத்தில் ஒருவன் என்று தலைப்பு வைத்து விட்டு ஒன்றுமே சொல்ல வில்லையே என்று நீங்க கேட்பது என‌க்கு புரிகிறது .

ஆயிரத்தில் ஒருவன் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை . படம் பார்த்து விட்டு விமர்சன்ம் எழுதிகிறேன் . என்ன சரியா ,,,


******************************************


நான் ஆறாம் வகுப்போ ஏழாம் வகுப்போ படிக்கும் போதென்று நினைக்கிறேன் . டீச்ச‌ர் ஒரு புத்தகம் வாங்கனும் என்று எல்லோரிடமும் சொல்லி இருந்தார் . அந்த புத்தகத்தை பள்ளி நிர்வாகம் வெளியிடும் . அது பாட புத்தகம் அல்ல . இந்த பொறுப்பு என் வகுப்புத் தோழியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது .

அந்த தோழி என்னிடம் வந்து புத்தகத்தை வாங்கிக்கோ என்றாள் . நான் முடியாது என்று மறுத்து விட்டேன் . மறுபடியும் மறுபடியும் வற்புறுத்தினாள் . நான் முடியவே முடியாது என்று மறுத்து விட்டேன் . அவள் கையை தட்டி விட்டேன் . அப்போது அவளின் வளையல் உடைந்து லேசா ரத்தம் வந்தது .

எனக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது . அதை பார்த்த நான் என்ன நீ நாந்தான் வேண்டாமுன்னு சொல்றேனே , சே இப்படி ஆயிருச்சே என்று வருத்தப்பட்டேன் .

அவளுக்கு அழுகை வந்திருச்சி . நான் சாரி சொன்னேன் . தெரியாம இப்படி பண்ணிட்டேன் . சரி நான் புக் வாங்கிக்கிறேன் . உடனே அவள் , பரவாயில்லை சேக் , நான் டீச்ச்ரிடம் சொல்ல மாட்டேன் என்றாள் .

அப்புறம் சில மாதங்கள் கழித்து அந்த பொறுப்பு என்னிடம் வந்தது .


*************************************


நான் எழுதிய பதிவுகளுக்கெல்லாம் பாராட்டி ஆலோசனைகள் தந்து வாழ்த்திய அனைத்து வலைப்பதிவு நண்பர்களுக்கும் நண்பிகளுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிதனை தெரிவித்து கொள்கிறேன் .

நான் எழுதிய 100 பதிவுகளில் எந்த இடுகை உங்களுக்கு பிடித்த இடுகை
கொஞ்சம் சொல்லுங்களேன் .

உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக ...

உங்கள் ஸ்டார்ஜன் .

Post Comment

47 comments:

  1. வாழ்த்துக்கள் நண்பா!

    குட்டியை நானும் இன்றுதான் பார்த்தேன்!

    இன்னும் நிறைய எழுத இதயப்பூர்வமாய் வாழ்த்துகிறேன்...

    பிரபாகர்.

    ReplyDelete
  2. 100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  3. 100 பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பரே...

    ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம் போடுறதா இருந்தா தயவுசெய்து பார்க்காதீங்க தல...இனிமே தாங்காது...

    ReplyDelete
  4. 100 பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பரே..

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் அண்ணே.....
    குட்டி - சேம் ப்ளட் !!

    ReplyDelete
  6. 100 வது பதிவிற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    தொடரட்டும் தங்களின் எழுத்துப் பணி.

    ReplyDelete
  7. 100 வது இடுகை 1000 மாக விரைவில் மாற வாழ்த்துகள் ஸ்டார்ஜன்.

    உங்கள் இடுகையில் நிறைய பிடிக்கும் குறிப்பிட்டு எதை சொல்ல?

    சொல்லு நீயே ...
    அதிலென்ன சந்தேகம் ?...
    ஊரு விட்டு ஊரு வந்து ...
    காதல் ரோஜாவே ... ( இதுவும் ஒரு காதல் கதை )
    சாலை விதிகளை மீறாதீங்க ...

    இதெல்லாம் பிடித்த பதிவுகள்.

    ReplyDelete
  8. அன்பின் ஸ்டார்ஜன்

    இனிய நல்வாழ்த்துகள் சதமடித்ததற்கு

    பிடித்த இடுகை - படித்துப் பிறகு சொல்கிறேன்

    குட்டியாய் குட்டி விமர்சனம் - அதை விட குட்டியாய் ஆ.ஒ விமர்சனம் - ஒரு தத்துவம் - மழலைக்கால நினைவுகள் - நல்ல இடுகை

    ReplyDelete
  9. நூறு, ஆயிரம், லட்சம், கோடி பதிவுகள் எழுதிட இனிய மனம் கனிந்த வாழ்த்துக்கள்.

    கலவை அருமை. இனிமை.

    நீங்க எழுதிய பதிவு எல்லாமே, எல்லோருக்கும் பிடிக்கும் ஷேக்.

    நான் முன்பே சொன்ன மாதிரி உங்களின் ஒரு பதிவை ஒட்டி நான் ஒரு பயணப்பதிவு எழுதப்போறேன். அது என்னான்னு சொல்லுங்க பார்ப்போம். :))

    ReplyDelete
  10. 100 பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பரே...

    ReplyDelete
  11. 100 வது இடுகைக்கு வாழ்த்துக்கள் சேக் மைதீன். தொடர்ந்து கலக்குங்கா நண்பா.

    ReplyDelete
  12. அதென்ன 50 ம்(அக்பர்) நூறும் ஒரே நாளில்??
    இருவருக்குமே மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. வருகை தந்து வாழ்த்திய அனைவருக்கும் என் நன்றி

    பிரபாகர்

    gulf-tamilan

    நாஞ்சில் பிரதாப்

    ச.செந்தில்வேலன்

    ஜெட்லி

    அபுல் பசர்

    அக்பர்

    cheena (சீனா) அய்யா

    துபாய் ராஜா @ தெரியலியே நீங்களே சொல்லிடுங்க

    Sangkavi

    செ.சரவணக்குமார்

    ReplyDelete
  14. எல்லாமே கலந்து தந்திருக்கீங்க

    நல்ல பதிவு ,

    உங்க பதிவில் முதல்முறை கவிதை எனக்கு பிடித்தது .

    வாழ்த்துக்கள் 100 லட்சம் ஆக வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள்.. தொடர்ந்து சாதனை பல படைக்க.......

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள் நண்பரே...எழுதி கலக்குங்க..

    ReplyDelete
  17. ஷேக் தொடர்ந்து சிறப்பான இடுகைகள் வெளிவர மனமார்ந்த வாழ்த்துகள்

    ReplyDelete
  18. அன்பின் ஸ்டார்ஜன், நூறாவது இடுகைக்கு வாழ்த்துகள். தொடர்ந்து மேலும் சிகரம் தொடவும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  19. வருகை தந்து வாழ்த்திய அனைவருக்கும் என் நன்றி

    கட்டபொம்மன்

    அண்ணாமலையான்

    நாடோடி

    பிரியமுடன்...வசந்த்

    ஷங்கி

    ReplyDelete
  20. 100 வது பதிவு போல என்றும் உங்கள் எழுத்து சிறக்க என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. நூறுக்கு வாழ்த்துக்கள் staarjan!

    //நான் எழுதிய 100 பதிவுகளில் எந்த இடுகை உங்களுக்கு பிடித்த இடுகை
    கொஞ்சம் சொல்லுங்களேன்// .

    நூறு இடுகைகள் எழுதிய உங்கள் விரலும்,நல்லாருக்கீங்களா சார்?என தொடங்குகிற உங்கள் குரலும் ரொம்ப பிடிச்சிருக்கு staarjan.

    ReplyDelete
  22. இனிய வாழ்த்துகள்.

    பொறுப்பு பற்றி அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  23. //நாளை நலமாக இருக்க , உங்களை இன்றே நலமாக்கிக் கொள்ளுங்கள் ...//

    :)

    100க்கு வாழ்த்துகள். இன்னும் நிறைய '0' க்கள் சேர வாழ்த்துகள்

    ReplyDelete
  24. வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்!!

    எனக்குப் பிடிச்சப் பதிவு இனிமே நீங்க எழுதப்​போற பதிவுதான்!

    இருந்தும்.. நினைவிலிருந்து 1: உங்களின் 50வது பதிவு - நட்சத்திர நாயகன்னு நினைக்கிறேன்!

    தொடருங்கள்!

    ReplyDelete
  25. 00 அந்தஸ்து பெற்றதற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  26. நூறாவது பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடருங்கள்!

    ReplyDelete
  27. //நான் எழுதிய 100 பதிவுகளில் எந்த இடுகை உங்களுக்கு பிடித்த இடுகை
    கொஞ்சம் சொல்லுங்களேன்// .

    நீங்க ‘எழுதி’ ஸ்கான் பண்ணி போடுங்க அத பிடிச்சதா சொல்றோம்..:)) நீங்க டைப்பிய பதிவுகள் பற்றி உங்க சதமே சொல்லுது..:))

    வாழ்த்துக்கள் நண்பரே..:))

    ReplyDelete
  28. சதத்துக்கு இனிய பாராட்டுகள்.

    இன்னும் சத்தான ஆயிரத்தை எதிர்பார்க்கிறோம்!

    எழுதுங்க எழுதுங்க எழுதிக்கிட்டே இருங்க!

    ReplyDelete
  29. வாழ்த்துக்கள்.

    உங்கள் கைக்கு வந்த புத்தகம் விற்கும் பொறுப்பை எப்படி செயல்படுத்தினீர்கள்? வாட்ச் உடைஞ்சுதா?

    :-)

    ReplyDelete
  30. 100 பதிவு, 1000 மாறி, 10000 வளர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  31. ஆகா, 100-க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ஷேக்மைதீன். ரொம்ப சந்தோசம். தொடர்ந்து எழுதிகிட்டே இருங்க.

    எங்களுக்கு ஸ்டார்ஜன் ரொம்ப பிடிக்கும். அதனால் அவர் எழுதிய எல்லாமே ரொம்ப பிடிக்கும்.

    ReplyDelete
  32. வருகை தந்து வாழ்த்திய அனைவருக்கும் என் நன்றி

    Raja

    பா.ராஜாராம்

    வெ.இராதாகிருஷ்ணன்

    கோவி.கண்ணன்

    ஜெகநாதன்

    SUREஷ் (பழனியிலிருந்து)

    ராமலக்ஷ்மி

    பலா பட்டறை

    துளசி கோபால்

    ஹுஸைனம்மா

    ..:: Mãstän ::..

    S.A. நவாஸுதீன்

    ReplyDelete
  33. ஃபாலோவர்களை விட பதிவுகள் இரண்டு மடங்கா

    நல்லா நல்லதா பிரயோஜனமா நிறைய எழுத மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  34. வாழ்த்துக்கள்
    நண்பரே
    100வது பதிவுக்கு...

    தொடரட்டும் உங்களின் சீரிய பயணம் ...

    ReplyDelete
  35. /// அபுஅஃப்ஸர் said...

    ஃபாலோவர்களை விட பதிவுகள் இரண்டு மடங்கா

    நல்லா நல்லதா பிரயோஜனமா நிறைய எழுத மனமார்ந்த வாழ்த்துக்கள் . ////

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அபு அஃப்ஸர் .

    ReplyDelete
  36. /// நண்டு=நொரண்டு said...

    வாழ்த்துக்கள்
    நண்பரே
    100வது பதிவுக்கு...

    தொடரட்டும் உங்களின் சீரிய பயணம் ... ///

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்டு=நொரண்டு

    ReplyDelete
  37. 100 பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பரே...

    ReplyDelete
  38. 100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  39. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    நீச்சல்காரன்

    நசரேயன்

    ReplyDelete
  40. நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.மேன்மேலும் நிறைய எழுதுங்கள்.குட்டி படம் போனீங்களா? ஐயோ பாவம்.

    ReplyDelete
  41. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    முனைவர்.இரா.குணசீலன்

    அநன்யா மஹாதேவன்

    ReplyDelete
  42. சதத்துக்கு வாழ்த்துக்கள் 'ஸ்டார்', இன்னும் பல சாதிக்க வாழ்த்துக்கள். இடுகை இன்ட்ரெஸ்டிங்க்ப்பா..

    ReplyDelete
  43. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    SUFFIX

    ReplyDelete
  44. 100 பதிவுகளைத் தொட்டு இப்ப நீங்களும் ஆயிரத்தில் ஒருவனாகி விட்டீர்கள் நம் பதிவுலகில்.

    வாழ்த்துகள். :-)

    ReplyDelete
  45. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ரோஸ்விக்

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்