Pages

Wednesday, January 6, 2010

காதல் வந்ததும் ...


நதியின் ஆழம் தெரிந்த எனக்கு

நீந்த எனக்கு பயம் !

மலையின் உயரம் தெரிந்த எனக்கு

மலையேற எனக்கு பயம் !

நிலவு எட்டிப் பிடிக்கும் உயரத்தில்

இருந்தாலும் அருகே செல்ல பயம் !

ரயில்ப்பூச்சி கடிக்காது என்று தெரிந்தாலும்

அதன் அருகே செல்ல பயம் !

வேகமாக ஓடியும் வெற்றி

இலக்கை அடைய பயம் !

பெண்ணே பெண்ணே !!

உன்னை கண்ட நாள் முதல்

இதெல்லாம் எனக்கு எளிதானதே !

இது தான் காதலின் ஆழமோ!

நீ வரும் வழியெங்கும்

பூக்களாய் பூத்திருக்க தோன்றுதே !!


***********************************************

Post Comment

29 comments:

  1. காதல் வந்தாச்சு.
    இனி பயம் விட்டுப் போய்
    எல்லாமே சுகம்தான் ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  2. இந்த பொண்ணுங்களே இப்படித்தான் பாஸூ,

    மாத்திபுடுவாங்க.

    ReplyDelete
  3. மிகவும் எளிமையாய் அருமையாய் இருக்கிறது நண்பரே!

    பிரபாகர்.

    ReplyDelete
  4. ரொம்ப சீக்கிரமே வந்தாச்சுன்னு தகவல் வந்துச்சு

    இப்பத்தான் சொல்லுறீங்க ஸ்டார்ஜன்

    ReplyDelete
  5. இன்னும் பயமும் போகலை, காதலும் வரல

    ReplyDelete
  6. கவிதை நல்லா இருக்கு தல.ஆனா இந்த காதல் என்றால் என்னங்க அர்த்தம் :)

    புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. உன்னைக்கண்ட நாள் முதல் எல்லாம் எனக்கு எளிதானதே.......ஒரு வெற்றியின் பின் ஒருபெண்மணி இருப்பாள் என்பார்கள்.(தாய் ஆசிரியை .....சகோதரி .....தங்கை .....மனைவி )வெற்றியடைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. வாங்க அக்பர் , வருகைக்கு நன்றி

    ReplyDelete
  9. வாங்க பிரபாகர் , வருகைக்கு நன்றி

    ReplyDelete
  10. ///உன்னை கண்ட நாள் முதல்

    இதெல்லாம் எனக்கு எளிதானதே !

    இது தான் காதலின் ஆழமோ!

    நீ வரும் வழியெங்கும்

    பூக்களாய் பூத்திருக்க தோன்றுதே !///

    ஆகா!!!!. அக்பர் கூடவே இருக்கீங்க. பத்திரமா பார்த்துக்குங்க

    ReplyDelete
  11. வாங்க தேனம்மை அக்கா , காதல் வந்ததும் ...

    ReplyDelete
  12. வாங்க நசரேயன் , சீக்கிரம் வரும் ...

    ReplyDelete
  13. வாங்க பூங்குன்றன் , வருகைக்கு நன்றி

    ReplyDelete
  14. வாங்க டிவிஆர் சார் , வருகைக்கு நன்றி

    ReplyDelete
  15. வாங்க நிலாமதி , வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  16. வாங்க ராஜ்குமார் , வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  17. //உன்னை கண்ட நாள் முதல்

    இதெல்லாம் எனக்கு எளிதானதே ! //

    திருமணம் ஆகும் வரை அப்படித்தான் இருக்கும்

    ReplyDelete
  18. //ரயில்ப்பூச்சி கடிக்காது என்று தெரிந்தாலும்

    அதன் அருகே செல்ல பயம் !//

    கவி நாயகர் மனைவியைச் சொல்லுகிறாரா, காதலியைச் சொல்லுகிறாரா..,

    ReplyDelete
  19. ஐ கவிதை..கவிதை..
    தலைவா... இந்த கவிதை ஏதோ தமிழ்பாட்டோட உல்டா மாதிரி இருக்கே... அப்படியொண்ணுமில்லையே... :-)

    ReplyDelete
  20. வாங்க நவாஸ் ,

    அக்பர் நல்ல படியா பார்த்துக்கொள்வார் ( சொல்ல சொன்னார் ).

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  21. வாங்க தல ,

    காதலின் தீபம் ஒன்று ..

    ஏற்றினாளே என் நெஞ்சில் ...

    ReplyDelete
  22. வாங்க பிரதாப் ,

    இன்னுமுங்களுக்கு காதல் வரலியா..

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  23. வாங்க சரவணன் ,

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  24. ரயில்ப்பூச்சி கடிக்காது என்று தெரிந்தாலும்

    அதன் அருகே செல்ல பயம் !//

    நல்லா இருக்கு நண்பரே...:))

    ReplyDelete
  25. /// பலா பட்டறை said...

    ரயில்ப்பூச்சி கடிக்காது என்று தெரிந்தாலும்

    அதன் அருகே செல்ல பயம் !//

    நல்லா இருக்கு நண்பரே...:)) ///

    வருகைக்கு நன்றி பலா பட்டறை

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்