Pages

Saturday, January 30, 2010

இந்தியா VS பாகிஸ்தான் கிரிக்கெட் - ஜன 29

அன்பு மிக்க நண்பர்களே !!


எல்லோரும் எப்படி இருக்கீங்க , நலமா ...



பெற்றோர்களையும் மனைவி மக்களையும் ஊரில் விட்டு வெளியூர் சென்று வேலைப்பார்பவர்களின் நிலை கஷ்டம். அதை விட வெளி நாட்டில் வேலை பார்க்கும் எங்களைப் போன்றவர்களின் நிலையைப் பற்றி சொல்ல தேவை இல்லை.


காலையில் எழுந்தோமா வேலைக்கு சென்றோமா மதியம் நமக்கு இஷ்டப்பட்டதை சமைத்து சாப்பிட்டோமா . மதியம் குட்டித்தூக்கம் போட்டோமா , நாலு மணிக்கு வேலைக்கு போனோமா நைட் வந்து எதாவது படத்தை பார்த்தோமா தூங்கினோமா என்று இயந்திரத்தனமாக வாழ்க்கை ஓடிவிடும்.

ஊருக்கு போன் செய்து பேசினால் அங்கு காலில் அடிப்பட்டதை கேட்டு இங்கு வலிக்கும். இப்படி ஒவ்வொரு நாளும் இயந்திரத்தனமாகவே கழிந்து கொன்டு இருக்கும் வாழ்வில் வெள்ளிக்கிழமை ஒரு நாள் காலை மட்டுமே லீவு இருக்கும். ஒரு மாறுதலுக்காக‌ நானும் ,அக்பரும் , உறவினர்களும் இன்னும் சில கேரளா நண்பர்கள் , உபி நண்பர்கள் சேர்ந்து காலையில் சிறிது நேரம் கிரிக்கெட் விளையாடுவோம் .


சில வாரங்களுக்கு முன்பு , பக்கத்தில் ஒரு கம்பெனியில் வேலைப்பார்க்கும் பாகிஸ்தானி நண்பர்கள் " வாரீங்களா நாம ஒரு மேட்ச் விளையாடுவோம் " என்று கேட்டார்கள். சரியென்று போன வெள்ளிக்கிழமை விளையாடச் சென்றோம் .


டாஸ்ஸில் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்தோம் . நாங்கள் 16 ஓவர் வைத்து விளையாண்டோம் . 16 ஓவருக்கு 66 ரன்கள் எடுத்தோம் . அதில் அக்பர் மட்டும் 19 ரன்கள் எடுத்தார் . நான் 5 ரன்கள் எடுத்தேன் . பின்னர் பாகிஸ்தானிகள் விளையாட ஆரம்பித்தனர் . முதலில் பந்து வீசிய உபி நண்பர் 3 விக்கெட்டுகளை சாய்த்தார் . நண்பர் அக்பரும் தன் பங்குக்கு 3 விக்கெட்டுகளை சாய்த்தார் . நான் ஒரு விக்கெட் எடுத்தேன் . ஆனாலும் பாகிஸ்தானிகளும் சுதாரித்து வெற்றி இலக்கை நோக்கி வந்தனர் .


கடைசி ஓவர் ஆட்டத்துக்கு திருப்புமுனையாக எங்களுக்கு அமைந்தது . கடைசி ஓவர் வீசிய கேரளா நண்பர் ஒரு விக்கெட்டை சாய்த்து 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வழி வகுத்தார் .


எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது .


அதே சந்தோசத்தில் , இந்த வாரம் இன்று நாங்கள் மறுபடியும் பாகிஸ்தானிகள் கூட விளையாட சென்றோம் .


இன்று டாஸ்ஸில் ஜெயித்து பேட்டிங்கை தேர்ந்தெடுத்தோம் . நாங்கள் 16 ஓவருக்கு 95 ரன்கள் எடுத்தோம் . பின்னர் களம் இறங்கிய பாகிஸ்தானிகள் எங்கள் பந்துவீச்சை துவைத்து எடுத்தனர் . ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி , வெற்றி இலக்கை அடைய போகும்போது , அக்பர் 1 விக்கெட் எடுத்து பின்னடைவை ஏற்படுத்தினார் .


அவர்கள் 12 ஓவரிலே வெற்றி பெற்றனர் . இதில் அக்பர் 1 விக்கெட் , ஒரு ரன் அவுட் கேரளா நண்பர் 1 விக்கெட் எடுத்தனர் .


காலையில் எழுந்தோமா வேலைக்கு சென்றோமா மதியம் நமக்கு இஷ்டப்பட்டதை சமைத்து சாப்பிட்டோமா . மதியம் குட்டித்தூக்கம் போட்டோமா , நாலு மணிக்கு வேலைக்கு போனோமா நைட் வந்து எதாவது படத்தை பார்த்தோமா தூங்கினோமா என்று தான் நாள் கழியும் .


வேறு எந்த பொழுதுபோக்கும் இல்லாத நாட்டில் இந்த கிரிக்கெட் எங்களுக்கு ஒரு மகிழ்ச்சியைத் தருகிறது . வேறு என்ன செய்வது ...


இப்படி ஒவ்வொரு வாரமும் கிரிக்கெட் விளையாடுவதால் மனதுக்கு ஒரு புத்துணர்ச்சியும் சுறுசுறுப்பும் எங்களை தொற்றிக் கொள்கிறது .


அடுத்த வாரத்தை நோக்கி ...


உங்கள் ஸ்டார்ஜன் .

Post Comment

16 comments:

  1. /எந்த டென்ஷனும் இல்லை/
    எல்லொருக்கும் அப்படி அமைவது இல்லை!கஸ்டப்பட்டு வேலை செய்தும் ஒழுங்காக சம்பளம் கிடைக்காத/ஊருக்கு 4,5வருடம் போக முடியாத நிறைய பேர் உண்டு.

    ReplyDelete
  2. உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று நினைக்கிறேன்.அதுதான் சந்தோஷமாக நாள் போகிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. ஊர்ல அடிபட்டா இங்க வலிக்கும்... யதார்த்தமான உண்மை...

    விளையாடும்போது ரெண்டு போட்டோ எடுத்து போட்டிருக்கலாம்...

    ஆளுக்கொன்னு ஜெயிச்சிருக்கீங்க! கலக்குங்க!

    பிரபாகர்.

    ReplyDelete
  4. இதை விட கொடுமை நாங்க இரண்டு பேர் வீட்டின் காம்பவுண்ட்க்குள் விளையாடுகிறோம்..நீங்க பரவாயில்லை..வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. ஹஹஹஹ... துபாய்ல பொழுதுபோக்குக்கு மட்டும் பஞ்சமே இல்லங்க... சும்மா வெளிய இறங்கி சுத்துனாலே நேரம்போயிரும்... சவுதில இந்த சுதந்திரம் இருக்காதுதான்.
    மற்ற பொழுது போக்குகள் அதிகங்கறதால கிரிக்கெட் விளையாடுறதே கிடையாது. பலவருஷங்கள் ஆச்சு...

    அப்ப அக்பர் ஒரு ஆல்ரவுண்டர்போலருக்கு...அவருக்கள்ள ஒரு கபில்தேவ் ஒளிஞ்சுட்டு இருக்கறது இப்பத்தான் தெரியும் :-)

    ReplyDelete
  6. வாங்க

    கல்ப் தமிழன்

    ஜெய்லானி

    நானும் திருமணமானவன் தான் . எல்லோருக்கும் இங்கே கஷ்டம் தான் . எப்போதும் குடும்பச்சூழலை நினைத்து கொண்டிருந்தால் மனது கஷ்டமா இருக்கும் . ஒரு சந்தோசத்துக்குக்காக தான் இந்த கிரிக்கெட் .

    நீங்கள் குறிப்பிட்டதால் சில வரிகளை மாற்றி விட்டேன் .

    ReplyDelete
  7. அட, சரிதான். இப்படி ஒரு பொழுதுபோக்கு தேவைதான். கவலைகள் ப்ரு புறம் இருக்கட்டும். இடையில் கிடைக்கும் சந்தோசத்தையும் நழுவ விடக்கூடாது. எஞ்சாய்.

    ReplyDelete
  8. நல்ல பகிர்வு தல‌

    துபாய்லே பொழுது போக்க நிறைய உண்டு, அதுலே கிரிக்கெட் நாங்களா தேர்ந்தெடுத்தது (உடலுக்கு ஆரோகியமும் கூட), வெள்ளிக்கிழமை பிரியாணி சாப்பிட்டுவிட்டு தூங்குவதற்கு இது எவ்வளவோ மேல். வெயில் காலத்தில் வியாழன் இரவிலும், குளிர் நேரத்தில் வெள்ளி பகலிலும் விளையாடுவோம்.

    மேட்ச் மட்டும் போகவே மாட்டோம், இதுலே ரெண்டு உண்டு, நிச்சயம் அம்பயர் சரியா செய்யாமல் சண்டை வரும்(நிறைய அனுபவம், போலீஸ் கேசெல்லாம் ஆஹிருக்கு), இரண்டு ஒவ்வொரு பக்கமும் 11 பேருக்கு அதிகமாக வருதல்.. யாரையும் ஏமாற்றவிரும்பவில்லை..

    இந்த விளையாட்டு மூலைக்கும்/மனதுக்கு நல்ல ஆறுதல்.....

    ReplyDelete
  9. இது போன்ற ஆராக்கியமான பொழுது போக்குகள் நிச்சயம் தேவை, தொடருங்கள்!!

    ReplyDelete
  10. வெளிநாட்டில் தனித்து வாழும் பேச்சுலர்களுக்கு கண்டிப்பாக பொழுது போக்கு தேவை தான். கல்ஃப் தமிழன் சொல்வது போல்
    ஊருக்கு 4, 5 வருடம் நிறைய பேர் இங்கும் உண்டு தான், அது பெரிய கொடுமை...

    ReplyDelete
  11. தங்களின் கமெண்டரி ரசிக்கும்படி இருந்தது.உங்கள் மூலமாவது இந்தியா-பாகிஸ்தான் உறவில் ஒரு திருப்புமுனை ஏற்படாதா.

    நட்புடன்

    ReplyDelete
  12. மக்களே ஸ்டார்ஜன்னும் நல்லா விளையாடுவாரு. இப்போ ஃபார்மில் இல்லை.

    வெளி நாட்டுல. அதுவும் சவுதியில இதை விட்டா வேற‌ வழி.

    //உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று நினைக்கிறேன்.அதுதான் சந்தோஷமாக நாள் போகிறது. வாழ்த்துக்கள்.//

    அண்ணே நீங்க வேற. அவரு புலம்புறது எனக்குத்தான் தெரியும். அதுவும் கல்யாணம் ஆகி ரென்டு மாசத்துல வந்தவர் இன்னும் ஊர் போகலை.

    ReplyDelete
  13. நல்ல பகிர்வு சேக்மைதீன். ஆல்ரவுண்டர் அக்பர் அசத்துறாரே, நாங்களும் வாரா வாரம் விளையாடுறோம், உங்க டீமைக் கூட்டிட்டு அப்கேக் வாங்க ஒரு மேட்ச் வச்சுக்கலாம்.

    ReplyDelete
  14. வாங்க

    பிரபாகர்
    நாடோடி
    நாஞ்சில் பிரதாப்
    S.A. நவாஸுதீன்
    அபுஅஃப்ஸர்
    SUFFIX
    Jaleela
    அபுல் பசர்
    அக்பர்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  15. //அண்ணே நீங்க வேற. அவரு புலம்புறது எனக்குத்தான் தெரியும். அதுவும் கல்யாணம் ஆகி ரென்டு மாசத்துல வந்தவர் இன்னும் ஊர் போகலை.//

    சீக்கிரமா வெக்கேஷன் கிளம்புங்க தல.

    ReplyDelete
  16. வாங்க சரவணக்குமார்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்