Pages

Friday, March 19, 2010

கையில பொருள், வாயிலே பொய்...


எக்ஸ்கியூஸ்மீ மேம் ! நாங்க புதுசா ஆரம்பிச்சிருக்கிற கம்பெனியில இருந்து வாரோம். எங்க கம்பெனி நல்ல தரமான வீட்டுஉபயோக பொருள்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. எங்க கம்பெனிக்கு இந்தியா முழுவதும் பிராஞ்சஸ், அப்புறம் உலகமுழுவதும் தன்னோட கிளைகளை பரப்பி தன்னகரில்லாத நிறுவனமாக விளங்குகிறது. நாங்க அதை எல்லா மக்களுக்கும் அறிமுகபடுத்திக்கொண்டிருக்கிறோம். இந்தாங்க இதை வாங்கிப் பாருங்க.

இல்லப்பா எங்க வீட்டுல எல்லா சாமானும் இருக்கிறது. அதனால வேண்டாம்பா.

இல்லமேடம் இது புதுசா வந்திருக்கு.. இது மார்க்கெட்டுல கிடைக்காது.

இல்லீங்க இதெல்லாம் எங்களுக்கு வேணாம்.. கிளம்புங்க..

அட என்ன மேடம்! சும்மா வாங்கிப் பாருங்க.. நீங்க பாக்கிறதுக்கு பணம் எதுவும் தரவேணாம். சும்மாதான் பாருங்களேன்.. பிடிச்சிருந்தா வாங்குங்க..

அட என்னப்பா.. உங்களப்பார்த்தா பாவமா இருக்கு. சரி கொடுங்க.. பாத்துட்டு தந்திருவேன் என்ன? சரியா..

இங்கப்பாருங்க மேடம்.. இதைப்பாருங்க மேடம்.. இதுல என்னன்ன பெசிலிட்டில்லாம் இருக்கு தெரியுமா. மார்க்கெட்டுல நல்லா மூவாகிக்கிட்டு இருக்கிற சாதனம். ரொம்ப அருமையா இருக்கும்..

அட அப்படியா தம்பி பரவாயில்லையே ரொம்ப நல்லாருக்கே!!..

ஆமாக்கா.. இதை பக்கத்துத் தெருவுல டாக்டர் மாலதி வீட்டுல வாங்கிருக்காங்க.. நாலுவீடு தள்ளி இருக்காங்களே... அவங்க பேரு என்ன... என்ன...

நம்ம லட்சுமிஅம்மாவா?..

அட ஆமா மேடம் அவங்களேதான்.. அவங்க 2 பீஸ் வாங்கினாங்க..

அப்படியா அவங்க எப்பவுமே இப்படித்தான், பெருசா பீத்திக்கிறதுக்குன்னே வாங்கிக்கிறாங்க.. ஏய் செண்பகம், பாத்திமா, மாரி, கணேஷம்மா.. எல்லோரும் இங்க கொஞ்சம் வாங்க.. நம்ம தம்பி எதோ நல்ல பொருள் கொண்டு வந்திருக்கு பாருங்க.

அட அப்படியா அக்கா..என்ன இது என்ன இது..

தம்பி! உங்க பேச்சுக்காக வேண்டி வாங்குறோம்.. நல்ல தம்பி, உங்க பேச்சு ரொம்ப அருமை..

எக்காவ் நீங்க எனக்கும் சேத்து பணம் கொடுத்திடுங்க.. எங்க வீட்டுக்காரர் வந்தப்பறம் தாரேன்..

மேடம் இங்க பாருங்க.. இதுதான் எங்க கம்பெனியோட அட்ரஸ்.. இந்தாங்க பில், என்ன கம்ப்ளைண்டா ஆனாலும் எங்க கம்பெனிக்கு வாங்க. உடனே மாத்திக்கிறலாம் என்ன சரியா.. ரொம்ப தாங்க்ஸ், அப்போ நான் போயிட்டு வாரோம் மேடம்.

இந்த மாதிரி சேல்ஸ்ரெப்கள் பேசியே வாங்க வைத்த பொருள் மறுநாளே பார்த்தா வேலை செய்யாமல் போய்விடும்போது மனதுக்கு ரொம்ப கஷ்டமாகிவிடும்.


கையில பொருள், வாயிலே பொய். இதுதான் சேல்ஸ்ரெப்களின் முகவரி. இந்தமாதிரி ஆள்களிடம் நாம ரொம்பவே உசாரா இருக்கணும். இல்லையென்றால் நம்முடைய நேரம், பொருள், பணம் இழக்க வேண்டிவரும்.

என்ன ஒரு சாமர்த்தியம்.இதுதான் இவங்களோட மூலதனமே. பொய்மேல பொய் பேசுவாங்க, நேர்மை இருக்காது, 2 நாள்ல ஒர்க்ஆகாத பொருளை தலையில கட்டிட்டு போயிருவாங்க. இல்லாத முகவரியைத்தான் கொடுப்பார்கள்.

நாம் அவர்கள் பேச்சில் மயங்கி ஏமாந்துவிடுகிறோம். டிப்டாப்பா வருவாங்க. ரொம்பவே நம்மளை கவர்ந்துவிடுவாங்க. இன்னும் சிலபேர் வீட்டை நோட்டமிட்டுவிட்டு செல்வார்கள். நம்மைபற்றி முழுவதும் வீக்னஸ் எதெல்லாம் என்று தெரிந்து கொண்டு திருட்டுக்கும்பலுக்கு தகவல் கொடுப்பாங்க.

இதுக்கெல்லாம் என்ன காரணமாக இருக்கும்.. நம்மிடையே விழிப்புணர்ச்சி இல்லாதது ரொம்ப வருத்தமாக இருக்கிறது.

அம்பு எய்தவன் இருக்க, அம்பை குறை சொல்லி என்ன பிரயோஜனம்.

சேல்ஸ்ரெப்கள் கொடுத்தவேலையை கச்சிதமாக செய்துமுடிக்க பணிக்கப்பட்டவர்கள்.

சேல்ஸ்ரெப்களுக்கு டிரைனிங் கொடுப்பவர்கள் இப்படித்தான் சொல்லிக் கொடுப்பார்கள். எப்படியெல்லாம் மக்களிடம் பேசவேண்டும், எந்தமாதிரி மக்களை கவர்ந்து அவர்களின் கவனத்தை திசைதிருப்பவேண்டும். நம்முடைய பொருளை எப்படியாவது வாங்கவைத்துவிடவேண்டும்.

பெண்களை கவர, பெண்களைப் பார்க்கும்போது கண்களைமட்டுமே பார்க்க வேண்டும். தலையைகுனியக்கூடாது, வேறுபக்கம் கவனம் சிதறக்கூடாது. பொறுமை ரொம்ப முக்கியம். நம்முடைய பணத்தின்மேல் கவனமாக இருக்கவேண்டும். எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதுபோல் காட்டிக் கொள்ள வேண்டும்.

இதுதான் சேல்ஸ்ரெப்களின் எழுதப்படாத விதி எனலாம். இந்த கம்பெனிகளின் முதலாளிகள் வெயிலில் கஷ்டப்பட்டு வேலைபார்க்கும் ஒழுங்காக சம்பளம் கொடுக்கமாட்டார்கள். அவர்களின் உழைப்பை உறிஞ்சி பணம் பார்க்கும் முதலாளிகளை உதைக்க வேண்டும். இதுதான் இன்றைய சேல்ஸ்ரெப்களின் நிலை.

இதிலும் சில சேல்ஸ்ரெப்கள் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை மயக்கி தனது வக்கிரபுத்தியால் பெண்களை வசப்படுத்தி விடுவார்கள். பின்னர் பிளாக்மெயில் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். பாவம் பெண்கள், கணவனிடமும் சொல்லமுடியாமல் மனதுக்குள்ளே தினமும் புழுங்கி ஒருநாள் தற்கொலை செய்துவிடுவதை நினைக்கும்போது மனம் ரொம்பவே கலங்குகிறது.

என்னஒரு கொடுமை! கணவனும் பிள்ளைகளும் அனாதைகளாக ஆகிவிடுகிறார்கள். இப்படி காரணம்தெரியாத தற்கொலைகள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.

நமக்கு விழிப்புணர்ச்சி அவசியமாக வேண்டி இருக்கிறது.

எனவே, அன்புள்ள சகோதரர்களே, சகோதரிகளே, நண்பர்களே, தாய்மார்களே, பெரியோர்களே, எல்லோரும் கவனமாக விழிப்புணர்வுடன் இருங்கள்.

யாரையும் வீட்டினுள் அனுமதிக்காதீர்கள். உங்கள் நலனில் அக்கறை கொள்ளுங்கள்... இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

,

Post Comment

42 comments:

 1. எல்லோரும் மோசம் என்று சொல்ல முடியாது ஆனால் இந்த விற்பனையில் நேர்மை மிக குறைவு.

  ரெண்டு வருடங்களுக்கு முன்பு சில பேர் கேஸ் பைப்கள் க்ளினர்கள் விற்றுக்கொண்டிருந்தார். சில நாட்கள் கழித்து பத்திரிகைகளில் வட மாவட்டகாரர்கள் தென் மாவட்டங்களில் விற்பனை பிரதிநிதிகளாக வேடமிட்டு மோசடின்னு செய்தி.

  சில நண்பர்கள் இந்த வேலையின் கஷ்டத்தை கூற கேட்டிருக்கிறேன். என்னத்த சொல்ல.

  ReplyDelete
 2. இது அனேகமாக அனைவரின் ஆதங்கம் என்பதோடு, அவ்வப்போது ஆத்திரத்தையும் உண்டு பண்ணுகிற வேலையும் ஆகும். அருமையா எழுதியிருக்கீங்க அண்ணே

  ReplyDelete
 3. தவறான சேல்ஸ் ரெப்.கள் செய்யும் அட்டூழியங்களை
  எல்லோருக்கும் எச்சரிக்கையாகத் தந்தீர்கள்.

  //எல்லோரும் மோசம் என்று சொல்ல முடியாது ஆனால் இந்த விற்பனையில் நேர்மை மிக குறைவு.
  // என்று ஆரம்பத்திலேயே குறிப்பிட்டு விட்டீர்கள்.

  மிக முக்கியமாக வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள்
  எச்சரிக்கையோடு இருந்திட வேண்டும்.
  வரும் முன் காப்போம்.

  ReplyDelete
 4. எனது மனசு தளத்தில் உங்கள் பற்றி எனது மனசின் பிரதிபலிப்பு.

  படிக்க இதை கிளிக்கவும். http://vayalaan.blogspot.com/2010/03/blog-post_19.html


  மனதில் உள்ளதை பின்னூட்டமாகவும் மனதை ஓட்டுக்களாகவும் அளிக்க மறக்காதீர்கள்.

  நட்புடன்,

  சே.குமார்.

  ReplyDelete
 5. அருமையான பகிர்வு ஸ்டார்ஜன். விழிப்புணர்வு ரொம்ப அவசியம் என்பதை அழகாக வெளிப்படுத்தி இருக்கீங்க.. நன்றி.

  ReplyDelete
 6. ரொம்பவே விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய காலமிது.
  நன்றி நண்பா.

  ReplyDelete
 7. சேல்ஸ்மேன்களின் தொல்லைகள் கொஞ்சம் அதிகம் தான்.. வீட்டில் தனியாக உள்ள பெண்கள் கவனிக்க வேண்டிய ஒன்று..

  ReplyDelete
 8. அண்ணே...

  உண்மைதான்.. இவர்களை வீட்டில் விட்டு வீட்டை நோட்டம் விட்டு பின்பு திருடியவர்கள் நிறைய உள்ளனர்..
  எங்க அக்கா வீட்டில் இது நடந்தது...

  ReplyDelete
 9. அருமையான கட்டுரை, யோசிங்க மக்களே!!.

  ReplyDelete
 10. வாங்க அக்பர்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நன்றி

  ReplyDelete
 11. வாங்க சேட்டைக்காரன்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நன்றி

  ReplyDelete
 12. ஸ்டார்ஜன் மிக அருமை வர வர ரொம்ப அருமையா எழுதிக் கொண்டு இருக்கீங்க நல்ல கருத்தாழமிக்க பதிவு வாழ்த்துக்கள் சமூக நோக்கில் பல கட்டுரைகள் எழுதுவதற்கு

  ReplyDelete
 13. நல்ல காத்திரமான தகவல்

  எல்லோரும் எல்லா விடயங்கைளிலும் விழிப்பாக இருக்க வேண்டி உள்ளது

  ReplyDelete
 14. சில நாட்கள் முன் நீயா நானா வில் எந்தத் தொழில் செய்பவர்களை சமூகம் கீழாக எண்ணுகிறது ?
  என்ற நிகழ்வில் விற்பனைப் பிரதிநிதிகள் மிகவும் வருத்தத்துடன் தங்கள் துன்பத்தைப் பகிர்ந்தனர்.
  ஆனால் உண்மையில் இவர்களை நம்ப முடியாது. காரணம் இவர்கள் எங்கிருந்து வருகிறார் என்றே தெரியாது

  ReplyDelete
 15. உங்களால பல பேர் சேல்ஸ் வேலை போச்சு!!

  ReplyDelete
 16. ஸ்டார்ஜன் நீங்கள் விழிப்புணர்வு பற்றிய சொல்லியது சரிதான். ஆனால் ஒட்டுமொத்தமாக எல்லாரையும் குற்றம் சொல்வது கூடாது. அந்த தொழிலில் இருப்பவர்கள் இதைப்படித்தால் விருத்தப்படுவார்கள். பையை தொங்கப்போட்டு வெயிலில் அலைந்த கஷ்டப்படுபவர்களும் இருக்கிறார்கள்.
  ஏமாற்றுவேலை எங்கேத்தான் இல்லை... நம்ம அரசியல்வாதிகளை விட இவர்கள் எவ்வளோ மேல்...என்பது என் கருத்து...

  ReplyDelete
 17. எல்லோரும் மோசம் என்று சொல்ல முடியாது என்பதுவே என் கருத்தும்.

  ReplyDelete
 18. உண்மைதான்.அநேகருக்கு இந்த அனுபவம் அடிக்கடி கிடைத்துக்கொண்டுதான் இருக்கும்.எல்லோரும் ஏமாற்றுபவர்களாக இருக்காவிட்டாலும் எப்பொழுதும் நாம் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்ற உண்மையை இந்த இடுகை சொல்லும் மெசேஜ் இல்லையா ஸ்டார்ஜன் சார்.

  ReplyDelete
 19. இது ஒரு நல்ல செய்திதான், இருந்தாலும் எல்லாரும் இப்படி இருக்கமாட்டாங்க,சில நல்லவங்களூம் இருக்காங்க.jahirjj

  ReplyDelete
 20. நல்ல அருமையான கட்டுரை; ஒருவர் செய்கிற தப்பால் எல்லாத்துக்கும் கெட்டபேர். இருந்தாலும் உசாரா இருக்க வேண்டியது நம்ம கடமை.

  ReplyDelete
 21. மெடிக்கல் ரெப், சேல்ஸ்மேன், சேல்ஸ்கேர்ள்ஸ் - இவங்களெல்லாம் பார்க்கும்போது பரிதாபமாத்தான் இருக்கும்; அந்த பரிதாப உணர்ச்சியே அவர்களுக்கு சாதகம். கவனமாகவும் இருக்க வேண்டும்.

  ReplyDelete
 22. வாங்க நிஜாமுதீன்

  அருமையான கருத்துக்கள்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 23. வாங்க குமார்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 24. வாங்க ராஜா

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 25. வாங்க சைவகொத்துப்பரோட்டா

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 26. வாங்க ஸ்டீபன்

  உங்க கருத்துக்கள் அருமை.

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 27. வாங்க சங்கவி

  கருத்துக்களை பகிர்ந்து கொண்டதுக்கு மிக்க நன்றி.

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 28. வாங்க கட்டபொம்மன்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 29. வாங்க தேனக்கா

  உங்கள் கருத்துக்களும் பாராட்டுகளும் எனக்கு வரம்.

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 30. வாங்க சிவசங்கர்

  அருமையான கருத்துக்கள்.

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 31. வாங்க நாளும் நலமே விளையட்டும்..

  அருமையான தகவல் சொல்லியிருக்கீங்க சார். கவனிக்கபடவேண்டிய விசயம் இது.

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 32. வாங்க ஷியாம் சார்.

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 33. வாங்க பிரதாப்

  கருத்துக்களை பகிர்ந்துகொண்டது என்றென்றும் நன்றிகள்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 34. வாங்க அருணா

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 35. வாங்க ஸாதிகா மேடம்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 36. வாங்க ஜாஹிர்பாய்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 37. வாங்க மின்மினி

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 38. வாங்க ஹூசைனம்மா

  கருத்துக்களை பகிர்ந்துகொண்டதுக்கு மிக்க நன்றி

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 39. வாங்க டிவிஆர் சார்.

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 40. அவசியமான கருத்துக்கள்... சொன்ன விதமும் அருமை..

  ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்