முதல் நாள் கல்லூரியில் நுழைந்தவுடனே என் மனம் அலையடிக்க தொடங்கி விட்டது. கல்லூரி வராந்தாவில் எதிர்ப்பட்ட அவள் என்மீது மோதப்போனாள். முதல் பார்வையே மனதில் அவளாகிவிட்டாள். பின்னர் எனக்கு ஏற்பட்ட சந்தோசம் அளவே இல்லாமல் போய்விட, அவள் என் வகுப்பில் நுழைந்ததுதான் காரணமாயிருக்கும்.
அப்புறம் ஒவ்வொருநாளும் என்பார்வை எப்போதும் அவள் வருகையைத்தான் நோக்கியது. அவள் இருக்கும் இடத்தைத்தான் கண்கள் தேடியது. அவள் அணிந்துவந்ததால் சுடிதாரையும் என் மனம் விரும்பியது. அவள் காதில் உள்ள வளையமும் கவிபாடியது. டேய் அவளா !! இஞ்சி தின்ன குரங்குமாதிரி இருக்கா அவளையா காதலிக்கிறாய் என்று நண்பர்கள் கேலி செயதபோதும் அவர்களிடம் 2 நாட்கள் என்னை பேசாமல் இருக்கவைத்தது. நான் காதல்வலையில் விழுந்ததை அறிந்து நண்பர்கள் எச்சரித்த போதும் அவளைத்தான் என் மனம் விரும்பியது. இரவெல்லாம் உறக்கமில்லாமலும் ஏதோஒரு சிந்தனையில் இருப்பதைக்கண்ட பெற்றோருக்கு எங்கே என்காதல் அறிய வாய்ப்பிருக்கிறது.
திடிரென அப்பாவுக்கு வேலையில்லாமல் போனதுவேற என்மனதை வேதனையாக்கியது. ஏதோ ஸ்காலர்ஷிப்பில் வரும் பணத்தைக் கொண்டும் பஸ்பாஸ் பயணத்தாலும் என்னால் படிக்கமுடிந்தது. ஆனால் அவள்மீதான காதல் நாளுக்குநாள் அதிகரிக்க அதிகரிக்க அது ஒரு சுகம்தான்.
காதலிக்காக என் படிப்பை மறந்தேன். டேய் +2வில் ஸ்கூல்பர்ஸ்ட் வந்தவனா நீ? என்று அப்பா திட்டியதும் வேதனையாகவில்லை. என்காதலை சொல்ல நல்லதருணமும் எதிர்பார்த்தேன். பின்னர் தைரியத்துடன் காதலை சொல்ல செல்கையில் அதோ அவள் !.
யாருடனோ சிரித்து பேசிக்கொண்டிருந்தாள். அருகே சென்று பார்த்தால் என் நண்பன் !!! கையில் ரோஜாவுடன். என் கையில் வைத்திருந்த ரோஜா காணாமல் போயிருந்தது. மனதில் என்காதல் சுக்குநூறானது அவளுக்கு தெரியவாய்ப்பில்லை. அவர்களுக்கு வாழ்த்துகள் சொல்லத்தான் வார்த்தைகள் வாயிலிருந்து வந்ததேதவிர ஐ லவ் யூ என்றல்ல....
இந்த நினைவுகளை இப்போதும் நினைக்க நினைக்க வேதனைத்தான். காதல் வாழ்வில் வரும் ஒரு வசந்தம். எனக்கோ அது ஒரு கனாக்காலம். என்றைக்கு அவள் என் நண்பனுக்கு சொந்தமானளோ ! இன்றுவரை அவளை நினைப்பதற்கு என்மனதில் இடமில்லாமல் நீயே ஆட்சி செய்கிறாய் என்னவளே!!
இப்படி மனைவியிடம் நினைவுகளை பகிர்ந்துகொண்டதுகூட மனதுக்கு இதமாக இருந்தது.
காலையில் நேரத்தோடு வேலைக்கு செல்லவேண்டி இருந்ததால் நான் ஆயத்தமானேன். நேற்று அவளை பார்த்ததில் இருந்து வேலையில் மனம் ஒட்டவில்லை. எங்கே என்மனம் சஞ்சலப்படுமோ என் மனைவி விட்டு மீண்டும் அவளை நாடுமோ?.. என்மனம் ஒரு நிலையில் இல்லை. இதே நினைப்பால் இருந்ததால் தலைவலியும் அதிகமானது. மேனேஜரிடம் சொல்லிட்டு வீட்டை நோக்கி என்கால்கள் வீறுநடை போட்டன.
வீட்டில் என்மனைவி இல்லாததுகண்டு கோபமாய் வந்தது. எங்கே போயிருப்பாள்?!! எங்காவது கடைவீதிக்கு சென்றிருப்பாள் !!!. சிறிதுநேரத்தில் அவள் வரவும் உறுதி செய்தது காய்கறி பையுடன் என் மனைவி.
என் மனைவி அன்றுமுழுவதும் என்னருகே இருந்து அக்கறையுடன் கவனித்து கொண்டாள். ஆனால் இரவில்மட்டும் காதலியின் நினைப்பு வரத் தவறுவதில்லை. என்ன செய்ய! மறக்க நினைக்கிறேன்; முடியவில்லை. இப்படி எத்தனை இரவுகள் நான் இருந்திருப்பேன் எனக்கே தெரியாது.....
வழக்கம்போல் அலுவலகத்தில் அவள் நினைப்பு வாட்ட, கால்கள் வீட்டை நோக்கி முன்னேறியது. இன்றும் வீடு பூட்டி இருந்தது. இன்று என் மனைவியின் நடவடிக்கையில் வித்யாசத்தை உணர்ந்தேன். என் மனைவி முன்புமாதிரி இல்லை. ஏதோ சிந்தனையில் இருக்கிறாள்; காலையில் காலையில் எங்கோ செல்கிறாள். மாற்றங்கள் நிறைய இருக்கின்றன. நான் என்காதலியை பார்த்ததிலிருந்து நினைவுகளை பகிர்ந்து கொண்டதிலிருந்து என் மனைவியிடம் மாற்றங்களை காண்கின்றேன்.
என்ன சோதனை இது !! மனைவியின் நடவடிக்கையை உற்றுநோக்குவது பெரிய கொடுமையல்லவா.. இருந்தாலும் என்மனம் கேட்கவில்லை. என் மனைவியை எவ்வளவு நேசிக்கிறேன்; ஏன் இப்படி நடக்கிறாள்...
மறுநாள் வேலை அதிகமாக இருந்ததால் அலுவலகத்துக்கு சீக்கிரமே கிளம்பினேன். வேலை விஷயமாக வெளியே செல்லவேண்டி இருந்ததால் கிளம்பினேன். ரோட்டில் ஏதேச்சையாக பார்த்தேன் என் மனைவியை. ஆனால் அவள் என்னை கவனிக்கவில்லை. என்கால்கள் மனைவி செல்லும் திசையை நோக்கி விரைந்தன.
ஆ !! அவள் செல்வது எனக்கு பரிச்சையமான இடம் போலல்லவா இருக்கிறது. ஆம் இதற்குமுன் இங்கே வந்திருக்கிறேனே... எங்கே ?.. ஆங்! இது என் மனைவியின் தோழி வீடல்லவா... சென்றதும் வீட்டின் கதவை சாத்திக்கொண்டாள். அவர்கள் என்னவோ பேசுகிறார்களே !!. ஒட்டு கேட்பது குற்றம்தான்... இந்த சூழ்நிலைக்கு ஒட்டு கேட்டே ஆகவேண்டும்.
என்னடி உன் கணவர் நடவடிக்கையில் ஏதாவது மாற்றம் தெரிந்ததா.. இல்லையா..
ஆமாண்டி ரொம்ப மாற்றம்தான். உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல... முதலில் பழைய காதலியை அவர் பார்த்ததிலிருந்து அவருக்குள் மனப்போராட்டம். அந்த காதலை மறைக்காமல் என்னிடம் எல்லாத்தையும் சொன்னதும் எவ்வளவு காதல் வலி இருந்திருக்கும் என்று அவர் சொல்லும்போதே தெரிந்தது, எந்த அளவுக்கு காதலித்திருப்பார் என்று. தினமும் அவர்படும் வேதனை தாளாமல் தான் உன்னிடம் ஐடியா கேட்டேன். ஒருவர் ஒன்றை மறக்க வேண்டுமெனில் அவரது கவனத்தை வேறுபக்கம் திருப்பினால் பழைய நினைப்புகள் அடியோடு காணாமல் போகும் என்று நீ சொன்ன இந்த ஐடியா ரொம்ப நல்லா ஒர்கவுட் ஆனது. எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கிறது .
நீ சொன்ன ஐடியாமூலம் என் நடவடிக்கையில் மாற்றம் கொண்டு வந்தேன். இப்போது என்கணவர் அவள் நினைப்பை சுத்தமாக மறந்து விட்டார். இப்போது என் நினைப்பாவே இருக்கிறார். இப்போதும்கூட அவர் என்னை பாலோபண்ணி வந்திருக்கிறார். என் கணவர் ரொம்ப நல்லவர். என்னை ரொம்ப நேசிக்கிறார். உன்னால்தான் அவரை திருத்த முடிந்தது. உனக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்.
இதுக்கெல்லாம் எதுக்கு தேங்க்ஸ் எல்லாம்; நீ சந்தோசமா இருந்தால் அதுவே எனக்கு போதும்.
சரிடி நான் போயிட்டு வருகிறேன் என்று என்மனைவி கதவை திறந்து வெளியே வந்ததும் கண்களில் கண்ணீருடன் அவளை கட்டி அணைத்தேன்.
ரோடு என்றுகூட பார்க்காமல் அவளை கட்டி அணைத்து முத்த மழை பொழிந்தேன்.
,
This comment has been removed by the author.
ReplyDeleteமனைவி என்றால் இப்படி இருக்க வேண்டும்.
ReplyDeleteகலக்கிட்டிங்க சேக்.
கதையும் அதை சொன்னவிதமும் அருமை. நான் அந்த திருப்பத்தை எதிர்பார்க்க வில்லை.
டொட்ட டொய்ங்..,
ReplyDeleteடொட்ட டொய்ங்..,
கலக்கிட்டிங்க starjan
ReplyDeleteகதை நல்லா இருக்கு ஸ்டார்ஜன்..
ReplyDeleteமனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்! :-))
ReplyDeleteஅருமை!! அருமை!!!
அருமையான மனதை நெகிழவைக்கும் கதை..
ReplyDeleteகாதலின் வலியை அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறது இந்த சிறுகதை..
உங்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு.
வாழ்த்துகள் ஸ்டார்ஜன்.
கதை ரொம்ப நல்லாருக்கு.
ReplyDeleteஅருமை சேக், உங்ககிட்ட இதைத்தான் எதிர்பார்த்தேன். இன்னும் நிறைய சிறுகதைகளை எழுதுங்கள் நண்பா.
ReplyDeleteவாங்க அக்பர்
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க தல
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
அருமையான கதை...
ReplyDelete-
DREAMER
வாங்க டிவிஆர் சார்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க ஸ்டீபன்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க சேட்டைக்காரன்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க ராஜா
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க கட்டபொம்மன்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க சரவணக்குமார்
ReplyDeleteநலமா எப்படி இருக்கீங்க..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
கலக்கல் நண்பரே, மிக அருமையாக இருக்கிறது கதை.
ReplyDeleteநெகிழ வைக்கும் சிறுகதை.பதிவுக்கு அடியில் இருக்கும் லேபிளைக்கவனிக்காமல் கொசுவத்தியா என்று நினைத்துவிட்டேன்.சகோ.ஸ்டார்ஜன் நீங்க நல்ல கதாசிரியர்தான்.வாழ்த்துக்கள்!
ReplyDeleteஒருவர் ஒன்றை மறக்க வேண்டுமெனில் அவரது கவனத்தை வேறுபக்கம் திருப்பினால் பழைய நினைப்புகள் அடியோடு காணாமல் போகும். நல்ல ஒரு கருத்து. கொன்னுட்டீங்க. வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாங்க DREAMER
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க சைவகொத்துப்பரோட்டா நண்பரே
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க ஸாதிகா
ReplyDeleteநல்லவேளை லேபிளை கவனிச்சிங்க.. பாராட்டுக்கு மிக்க நன்றி ஸாதிகா
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க ஜாஹிர் பாய்
ReplyDeleteவாழ்த்துகளுக்கு மிக்க நன்றி
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
ஒரு கணவனின் மன உணர்வுகளும் அதை மனைவி கையாண்ட விதமும் அருமை ஸ்டார்ஜன்
ReplyDeleteவாங்க தேனம்மை அக்கா
ReplyDeleteஉங்கள் கருத்து மிகமிக சரி.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தேனக்கா..