Pages

Friday, March 12, 2010

எனக்கு பிடித்த 10 பெண்கள்

எனது அன்பு நண்பர் சைவகொத்துப்பரோட்டா அவர்கள் எனக்கு பிடித்த 10 பெண்கள் தொடர்பதிவுக்கு அழைத்துள்ளார். அவர் அழைப்புக்கு இணங்க இந்த இடுகை.

நிபந்தனைகள் :-

உங்களின் சொந்தகாரர்களாக இருக்க கூடாது.,
வரிசை முக்கியம் இல்லை.,
ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு
பிடித்தவர்களாக இருக்கும்,
இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் பத்து
நபர்கள்...சரியா..?


1. அன்னை தெரசா

இந்த பெயரை உச்சரிக்காத இந்தியர்கள் யாரும் இருக்க முடியாது. அல்பேனியா நாட்டில் பிறந்து இந்தியர்களின் நலனுக்காக தன் சொத்துசுகம், சொந்தபந்தம் அனைத்தையும் தியாகம் செய்து இந்திய நாட்டுக்காக தன்னையே அர்பணித்தவர்.

2. இந்திரா காந்தி

இந்தியாவின் முதல் பெண் பிரதமர். இவர் நேருவின் மகள். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டவர்.

3. சோனியா காந்தி

இவர் இந்திரா காந்தியின் மருமகள். இப்போதைய காங்கிரஸ் தலைவர். ராஜீவ் காந்தியின் மறைவுக்கு பின் பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சி சிதறுண்டு போகும் நிலையில் இருந்தது. அப்போது இவர் தலைமையேற்று கட்சியை வலுப்படுத்தினார். இவரால் தான் இப்போதைய காங்கிரஸ் கட்சி நாட்டின் ஒரு பெரிய கட்சியாக விளங்குகிறது. இவரின் தன்னம்பிக்கை, நிர்வாகத் திறமை உழைப்பு இவர் வெற்றிக்கு அடையாளம்.

4. ஜெயலலிதா

இவர் இப்போதைய அ.இ.அ.தி.மு.க கட்சியின் பொது செயலாளர். திரு.எம்ஜிஆர் அவர்கள் ஆரம்பித்த அதிமுக கட்சி தமிழ்நாட்டின் பெரிய கட்சியாக‌ சிறந்து விளங்க‌ இவரே காரணம். எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் கட்சி சிதைந்து விடாமல் காப்பாற்றியவர். இவரின் தன்னம்பிக்கை, நிர்வாகத் திறமை உழைப்பு இவர் வெற்றிக்கு அடையாளம்.

5. ராமலட்சுமி

இவர் திருநெல்வேலியின் புகழ்பெற்ற கைராசி மிக்க டாக்டர். நெல்லையில் உள்ள இவரின் மருத்துவமனைக்கு செல்லாத பெண்களே இல்லை எனலாம். மகபேறு, குழந்தையின்மை, பெண்களின் பிரச்சனைகள் போன்றவற்றுக்கு இவர் மருத்துவமனைக்கு சென்றால் தீர்வு காணலாம். இப்போது இவரைப் போல இவர் மருமகள் மதுபாலாவும் சிறந்த டாக்டர். இருவரும் நெல்லை பெண்களுக்கு கைராசிமிக்க மருத்துவர்கள்.

6. சுதா நாராயணன்

இவர் இன்போஷிஸ் நிறுவனத்தின் நாராயணமூர்த்தியின் மனைவி. அந்த நிறுவனத்தை துவக்கவும், வளர்க்கவும், உறுதுணையாக இருந்து, இதற்காக அவருக்கு வந்த நல்ல வேலை வாய்ப்பினையும் விட்டு கொடுத்தவர், என இன்று வரை அவர் கணவரால் போற்றப்படும் பெண்மணி.

7. உமா மகேஸ்வரி

இவர் நெல்லையின் முன்னாள் மேயர். நெல்லையில் முதன்முதல் மாநகராட்சி முறை கொண்டு வந்தபோது நெல்லையின் முதல் பெண் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது நிர்வாகத்தில் நெல்லையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டது எனலாம்.

8. S.ஜானகி

இவர் பிரபல பிண்ணனி பாடகி. எல்லா விதமான பாடல்களையும் பாடி தமிழ்நாட்டு மக்களை ஈர்த்தவர். இனிமையான குரலுக்கு சொந்தக்காரர்.

9. ரேவதி

இவர் முன்னாள் நடிகை. தனது அற்புத நடிப்பால் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களை கொள்ளை கொண்டவர்.

10. வசந்த குமாரி

இவர் நாகர்கோவிலை சேர்ந்தவர். ( பெயர் சரியா.. ). இவர் தான் தமிழ்நாட்டு முதல் பெண் பேரூந்து ஓட்டுனர். எல்லோரும் கேலி செய்த நேரத்தில் தன் திறமையைக் கொண்டு முன்னேறிய‌வர்.


இந்த பெண்மணிகளை போன்று நம்நாட்டில் பலதுறைகளில் பெண்கள் முன்னேறி வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.

இந்த தொடரை தொடர இவர்களை அன்போடு அழைக்கிறேன்.

1. கோவி.கண்ணன்
2. ஜெகநாதன்
3. ஷங்கி


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

,

Post Comment

49 comments:

 1. வசந்த குமாரி - என்பதே அம்மணியின் பெயர்!

  ReplyDelete
 2. நீங்கள் எழுதிய அனைவரும் எனக்கும் பிடித்தமானவர்கள்.

  நல்ல தேர்வு ஸ்டார்ஜன்.

  ReplyDelete
 3. அருமையான பதிவு!

  ReplyDelete
 4. உண்மையிலேயே அருமையான பத்து பெண்"மணி"களைத் தான் தேர்வு செய்து எழுதியிருக்கிறீர்கள் அண்ணே! பாராட்டுக்கள்!!

  ReplyDelete
 5. அருமையான பெண்மணிகளை தேர்வு செய்துள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 6. நன்றி ஸ்டார்ஜன், சிலர் எனக்கு புதிய அறிமுகமாகவும் இருந்தது.

  ReplyDelete
 7. நல்ல தேர்வு ஸ்டார்ஜன்..

  ReplyDelete
 8. ரைட்டு..:)
  பிரபல பதிவர் ஆயிட்டீங்க போல ஸ்டார்ஜன்..:)

  ReplyDelete
 9. 33% இடஒதுக்கீடுக்கு நிகராக இந்த பதிவு, நல்லது

  ReplyDelete
 10. ஒருவரைத் தவிர மற்ற அனைவரின் மேல் உங்க கருத்தோடு உடன்படுகின்றேன் :)

  ReplyDelete
 11. அருமையான தேர்வுகள்!

  இதில் பலரையும் எனக்கும் பிடிக்கும்.

  மருத்துவத்துறையில்.. பிடிக்கும், தெரியும்:)!

  ReplyDelete
 12. திருநெல்வேலி டாக்டர்கள் பற்றி அறிந்து கொண்டேன்!!!

  ReplyDelete
 13. வாங்க நம்பிக்கைராமா

  நல்ல தகவல் கொடுத்தீங்க..

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 14. வாங்க அக்பர்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 15. வாங்க நிஜாமுதீன்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 16. வாங்க சேட்டைக்காரன்

  எல்லோருக்கும் பிடித்தமானவர்கள்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 17. வாங்க ராஜா

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 18. வாங்க கட்டபொம்மன்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 19. வாங்க சைவகொத்துப்பரோட்டா

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 20. வாங்க ஸ்டீபன்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 21. வாங்க சங்கர்

  உங்க வாக்கு பலிக்கட்டும்..

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 22. வாங்க அபு அஃப்ஸ்ர்

  நல்ல கருத்து சொல்லியிருக்கீங்க.. 33% இடஒதுக்கீடு கிடைச்சாச்சு..

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 23. வாங்க வெள்ளிநிலா சர்புதீன்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 24. வாங்க எம்.எம்.அப்துல்லா

  யாரதுன்னு சொல்லவே இல்லை?.

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 25. வாங்க ராமலட்சுமி மேடம்

  நன்றி மேடம்.

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 26. வாங்க தேவா சார்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 27. உங்கள் லிஸ்ட் அருமை சோனியா காந்தியை தவிர...

  ReplyDelete
 28. மிகவும் நல்ல பதிவு.பெண்களை பெருமைபடுத்துவோம்.
  என்னக்கு பிடித்த பத்துபேர்.
  1 .திருமதி .இந்திரா காந்தி
  ௨.பேராசிரயர் . Wangari மத்தாய் , கென்யா
  ௩.டாக்டர் . சாந்தா .சென்னை
  ௪.திருமதி .சந்திரிகா குமாரதுங்க ,ஸ்ரீ லங்கா
  ௪ .திருமதி.சரோஜா தேவி ,மூத்த திரை கலைஞர்
  ௬.மதர் .அம்ரிதனந்தமயி
  ௭.அருட்ச் சகோதரி .டாக்டர் .Jesme
  ௮.ஆங் சண் ஸூ கி , பர்மா
  ௯.2nd. Lt.மாலதி ,தமிழ் ஈழ விடுதலை புலிகள்
  ௧௦.வேலு நாச்சியார்


  உமா , திருவனந்தபுரம்

  ReplyDelete
 29. வாங்க ஜீவன்சிவம்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 30. வாங்க பால்துரை& உமா

  அருமையான லிஸ்ட் கொடுத்திருக்கீங்க; தகவல்கள் அறிந்து கொண்டேன், இதுபோன்று அடிக்கடி வாருங்கள். மிக்க நன்றி.

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 31. வாங்க ஸாதிகா

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 32. அட, அநேகமா எல்லாருமே எனக்கும் பிடித்தவர்கள்!!

  ராமலக்‌ஷ்மி டாக்டர், எளிமை, அன்பான கலகலப்பான பேச்சுன்னு எல்லாரையும் கவர்ந்திடுவாங்க. எங்க குடும்பத்துக்கே இவங்கதான் மருத்துவர். ரொம்ப நல்ல டைப்.

  உமா மகேஸ்வரி குறித்து ரொம்ப விவரம் தெரியல.

  ReplyDelete
 33. வாங்க ஹூசைனம்மா..

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 34. மாம்ஸ்டார்ஜன்..
  பின்றீங்களே.. தும்ப சன்னாகீதே!!
  எனக்குப் பிடித்த 10 பெண்கள்.. ம் நடத்துவோம். அழைப்பிற்கு நன்றி!

  ReplyDelete
 35. வாங்க மாப்ள ஜெகா!

  ஆரம்பிங்க ஆரம்பிங்க..

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 36. உமா மகேஸ்வரி ராமலெக்ஷ்மி வசந்த குமாரி என்று புதியவர்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் ஸ்டார்ஜன்

  ReplyDelete
 37. வாங்க தேனக்கா

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா.

  ReplyDelete
 38. உங்களின் இந்தப் பதிவிலிருந்து சில விவரங்கள் என் இந்தப் பதிவில் பயன்படுத்திக் கொண்டேன், ஆட்சேபிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்!!

  ReplyDelete
 39. வாங்க ஹூசைனம்மா

  நன்றி ஹூசைனம்மா, என் பதிவையும் இணைத்துக்கொண்டதுக்கு...

  ReplyDelete
 40. அன்பின் ஸ்டார்ஜன், உங்களுக்குப்
  பிடித்த பெண்களை அறிய முடிந்தது, நன்று.

  நானும் எழுதணுமா? அன்பர் அக்பரின் தொடரே இன்னும் எழுதவில்லை. ஹ்ம், பார்க்கலாம்!

  ReplyDelete
 41. வாங்க ஷங்கி

  நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 42. பத்து பெண்களின் தேர்வும் சூப்பர்

  ReplyDelete
 43. தம்பி,

  அழைப்புக்கு நன்றி, அலுவலில் கூடுதலாக ஆனி. நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்

  ReplyDelete
 44. வாங்க ஜலீலா

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 45. வாங்க கோவி அண்ணே!!

  நேரம் கிடைக்கும்போது எழுதுங்கண்ணே..

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்