அன்புமிக்க நண்பர்களே !
தமிழக மக்கள் , கடந்த 4 நாட்களாக தமிழகத்தையே உலுக்கிய நித்யானந்தா - ரஞ்சிதா விவகாரத்தை மறந்து இப்போதுதான் இயல்புநிலைக்கு வந்திருக்கின்றனர் என்று நினைக்கிறேன்.
நான் நேற்று விண்ணைத்தாண்டி வருவாயா படம் பார்த்தேன். ஒரு இளைஞனின் வாழ்க்கையில் தென்றலாய் வரும் காதலால் அவனுக்கு ஏற்படும் விளைவுகளை, படத்தில் அழகாக சொல்லிருக்காங்க.
கார்த்திக் ஒரு இஞ்சினியரிங் படித்து சினிமாவில் வாய்ப்புத் தேடும் ஒரு இளைஞன். அவன் ஒருநாள், மாடியில் குடியிருக்கும் ஜெஸ்ஸியைப் பார்க்கிறான். அவள் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்கிறாள். கார்த்திக் அவளை பார்த்தவுடன் காதலிக்கிறான். அவளோ, தான் கிரிஸ்டியன் என்றும் ஒரு இந்து பையனை தன்குடும்பமும் சமுதாயமும் ஏற்றுக்கொள்ளாது அதனால் மறுக்கிறாள். கார்த்திக்கோ அவனுடைய காதலை அவளுக்குப் புரியவைத்து காதலிக்க வைக்கிறான். இதற்கிடையில் ஜெஸ்ஸிக்கும் கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. திருமணத்தின்போது, ஜெஸ்ஸி மனக்குழப்பத்தில் இருப்பதால் கல்யாணத்தை மறுத்து விடுகிறாள். இதனால் கார்த்திக் - ஜெஸ்ஸி காதல் விவகாரம் எல்லோருக்கும் தெரிந்து பிரச்சனை பெரிதாகிறது.
ஜெஸ்ஸி காதலனின் அன்பை பெறமுடியாமலும் வீட்டில் உள்ளவர்களின் எதிர்ப்பாலும் காதலை மறக்க நினைக்கிறாள். ஆனால், கார்த்திக் விடாமல் ஜெஸ்ஸியிடம் தன் காதலை அழுத்தமாக வெளிப்படுத்துகிறான். கடைசியில் கார்த்திக் - ஜெஸ்ஸி காதல் வெற்றி பெற்றதா.. ஜெஸ்ஸி காதலை ஏற்றுக்கொண்டாளா.. கார்த்திக் சினிமாவில் சாதித்தானா என்பதை படம் பாக்காதவங்க படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
சிம்பு, திரிஷா நடிப்பில் ஏ ஆர் ரகுமானின் இசையில் உருவான இந்த படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருக்கிறார்.
கையை கொடுங்க கவுதம் சார்... வாழ்த்துகள் வாழ்த்துகள்.
ஒரு யதார்த்தமான காதல் கதையை இருவருக்கும் இடையேயான மெல்லிய உணர்வுகளுடன் கதை சொல்லியிருக்கீங்க. கதை ஒருவரிதான் என்றாலும் அதை படமாக்கியிருக்கும் விதம் மிக அருமை. படத்தில் ஒவ்வொரு கணமும் கதை மாறாமல் எங்களையும் படத்தோடு பயணிக்க செய்திருக்கிறீர்கள். சினிமாத்தனம் இல்லாத யதார்த்தமான ஒரு காதலை அனுபவிக்க செய்திருக்கிறீர்கள். இந்த படத்துக்கு சிம்புவையும் திரிஷாவையும் பொருத்தமான ஜோடியாக தேர்வு செய்திருப்பது இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்.
சார், இதுபோன்று மேலும்மேலும் காதல் உணர்வுகளை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
இந்த படத்தை தன்நடிப்பால் தூக்கி நிறுத்தியிருப்பவர்கள் சிம்புவும் திரிஷாவும். சிம்பு ரொம்ப நாளைக்கு அப்புறம் தன் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இதுபோன்று அவர் நடித்ததில்லை, இது அவருக்கு முதல்படம் என்றும்கூட சொல்லலாம். முதன்முதலாய் திரிஷாவை பார்க்கும்போதும் அவரோடு காதலை வெளிப்படுத்தும் இடங்களாகட்டும் ஆலப்புழைக்கு சென்று காதலை சொல்லும்போதும் நடிப்பில் பின்னியிருக்கிறார்.
இந்த படத்தில் சிம்பு சிம்புவாக இல்லை; ஒவ்வொரு காட்சியிலும் எங்களுக்கு கார்த்திக்காகத்தான் தெரிகிறார். இயல்பான ஒரு இளைஞன் தன் காதலை காதலியிடம் சொல்வானோ அதுமாதிரியே இருந்தது. ஜெஸ்ஸியை நான் ஏன் காத்லிக்கிறேன்?. என்ற வசனம் ஒவ்வொரு காதலர்களின் மொழியாய் தெரிகிறது. சிம்பு காதல், கோபம், வேதனைகளை தன் முகத்தின் மூலம் அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
திரிஷா பக்கத்துவீட்டு பெண்ணைபோல வருகிறார். காதலை வெளிப்படுத்தும் இடங்களும் கோபம், காதல் மொழிகள் மிக ரசிக்கும்படியாக இருக்கிறது. ஒரு இயல்பான குடும்பத்துப் பெண் எப்படி இருப்பாளோ அப்படியே திரிஷாவும் நடித்திருக்கிறார். தன் குடும்பத்தையும் காதலனையும் மறக்க முடியாமல் தவிக்கும் இடங்கள் மிக அருமை.
ஆண்கள் எப்போதுமே தன் மனதில் உள்ளவற்றை உடனே வெளிப்படுத்திவிடுவார்கள்; ஆனால் பெண்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக காதலை வெளிப்படுத்த தயங்குவார்கள்.
சிம்புவின் நண்பராகவரும் கேமராமேன் கணேஷ்ம் டைரக்டராக வரும் கே எஸ் ரவிக்குமாரும் பொருத்தமான தேர்வு. சிம்புவின் பெற்றோரும் திரிஷாவின் பெற்றோரும் அளவாய் நடிப்பு.
இசை ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் தன்னுடைய இசையால் நம்மை படத்தோடு ஒன்றவைத்துவிடுகிறார். இசை சகாப்தம்
பாடல்கள் . மிக அருமையான இசை.
படத்தின் காட்சிகளும் ஒளிப்பதிவும் மிக அருமை.
மொத்தத்தில் இந்தபடம் ஒரு காதலர்களின் மொழியை உணரவைத்திருக்கிறது.
இந்த படம் மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துவோம்.
விண்ணைத்தாண்டி வருவாயா - என் மனதில் நீயே...
,
//மொத்தத்தில் இந்தபடம் ஒரு காதலர்களின் மொழியை உணரவைத்திருக்கிறது.//
ReplyDeleteநாங்கள் வேறொரு காதலர்களின் மொழியை நடு வீட்டில் உட்கார்ந்து ரசித்துக் கொண்டிருக்கிறோம்..,
//திரிஷா பக்கத்துவீட்டு பெண்ணைபோல வருகிறார்.//
ReplyDeleteவயதில் மூத்தவராமே..,
//சிம்பு ரொம்ப நாளைக்கு அப்புறம் தன் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்//
ReplyDeleteரொம்ப நாளைக்கு அப்புரமா ?இப்போ தாங்க !!!!
அண்ணே! படத்தை விடவும் உங்க அலசல் நல்லாயிருக்குண்ணே! :-))
ReplyDeleteபாடல்கள் நன்றாக வந்திருப்பது படத்திற்கு பலம் தான்.
ReplyDelete//நான் நேற்று விண்ணைத்தாண்டி வருவாயா படம் பார்த்தேன்.//
ReplyDeleteஒன்னாத்தானே பார்த்தோம்.
படம் அருமை இல்லையா.
உங்கள் விமர்சனமும் அழகாக காதலை சொல்லுது.
படம் பார்க்கும் போது ஏற்பட்ட அதே உணர்வு.
அருமையான, காதலோடு கூடியா விமர்சனம் ஸ்டார்ஜன்.
ரொம்ப ரசிச்சு பார்த்து இருக்கீங்க.....
ReplyDeleteசிம்பு நடிச்சு இருக்கார் - ஹாட்ஸ் ஆஃப் டு த டைரக்டர்.
ReplyDeleteசிம்பு இதில்தான் நடித்து இருக்கிறார். ஆமாம் உங்க பக்கத்துக்கு வீட்டு பெண் த்ரிஷா மாதிரி
ReplyDeleteஇருப்பாங்களா......ஹி.......ஹி......
தங்கள் விமர்சனம் மிக அருமை. jahir_j2000@yahoo.com
ReplyDeleteவிமர்சனம் மிக அருமை
ReplyDeleteஉங்கள் விமர்சனம் நல்ல அலசல்.. படம் பார்க்கல.. பார்க்கத் தூண்டுது உங்க விமர்சனம்
ReplyDeleteநல்ல விமர்சனம்
ReplyDeleteஉண்மையில் சிம்பு கலக்கி விட்டார்
நல்லா போட்டுருக்கீங்க ..
ReplyDeleteஅப்ப பார்த்துடலாம் ஸ்டார்ஜன்
வாங்க டாக்டர் தல,
ReplyDeleteஉங்க கமெண்ட் ரொம்ப ரொம்ப ரசிக்கும்படியா இருக்கிறது
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க ராஜ்குமார், நலமா..
ReplyDeleteரொம்ப நாளா ஆளையே காணோம்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க சேட்டைக்காரன்,
ReplyDeleteபுரோபைல் போட்டோ ரொம்ப நல்லாருக்கே
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க மின்னல்
ReplyDeleteஇசை ஏஆர் ரகுமான்; கேட்கவா வேண்டும்?..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க அக்பர்
ReplyDeleteபடம் நல்லாருந்தது
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க ஜெட்லி
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க ராகவன் சார்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க சைவகொத்துப்பரோட்டா
ReplyDeleteஆமா திரிஷா ரொம்ப கியூட்டா இருக்காங்கல்ல
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க ஜாஹிர்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க கட்டபொம்மன்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க ராஜா
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க சிவசங்கர்
ReplyDeleteசிம்பு அருமையான நடிப்பில் கலக்கியிருக்கிறார்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்க தேனம்மை அக்கா
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
விண்ணைத்தாண்டி வருவாயா .... இன்றையதேதிக்கு ....ஒரு காதல் காவியம்.... பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteவாங்க கருணாகரசு சார்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி