Pages

Thursday, March 11, 2010

உன்னை தினம் தேடும் தலைவன் ...

அன்பே என் அன்பே

ஒவ்வொரு நாளும்

வித்யாசமாய் உணர்கிறேன்.

உந்தன் மொழியிலே..

இரவெல்லாம் இனிதே

உன் நினைவுகளோடு

அசைபோடும் மாடாய்!!

அருமை கனவுகள்

வந்துவந்து போகும்

உன்வரவை உறுதி செய்கிறதே!!

பூபூவாய் உன் வாசம்

என்னை தினமும்

இம்சிக்கிறதே !!

தேடுகிறேன் எங்கும்

காணாது வெறுமையாய்

பூக்களும் கவிபாடுதே

உன் அருகாமையை

எண்ணி எண்ணி..

புதுமலர் வீசும்

நாளும் என்னாளோ...

அது நான் வரும்

பொன் நாளோ ?..

ராஜகுமாரி வருவாள்

ராஜயோகம் தருவாள்

குறி சொன்னதும்

தப்பாமல் வந்தாய் நீயே!!

இல்லறம் இனிதே

தொடங்கும் முன்னே

மனையில் நீயும்

போர்க்களத்தில் நானும்

ஒவ்வொரு நாளும்

உப்பரிகையில் உன்

விழிகள் தேடுதே

என் வரவை...

மனதை தொலைத்துவிட்டு

நீயும் நானும்

ஆளுக்கொரு மூலையில்...

பிரிவின் வலியில்

துவளும் எங்களை

மீட்க மாட்டாயா

எங்கள் இறைவா..

ஆறும் மனமும்

தேடாத விழியும் எங்கேனும்

உண்டா?.. சொல்வீர்

நல்வாக்கு சொல்வீர்...

உங்கள் ஸ்டார்ஜன்.


,



Post Comment

37 comments:

  1. கவிதை அருமை.

    //மனையில் நீயும்
    போர்க்களத்தில் நானும்//

    இறைவன் அருள் விரைவில் கிடைக்கட்டும்.

    ReplyDelete
  2. ///உப்பரிகையில் உன்
    விழிகள் தேடுதே
    என் வரவை...
    மனதை தொலைத்துவிட்டு
    நீயும் நானும்
    ஆளுக்கொரு மூலையில்...
    பிரிவின் வலியில்
    துவளும் எங்களை
    மீட்க மாட்டாயா
    எங்கள் இறைவா..///நெகிழவைக்கும் கவிதை வரிகள்!

    ReplyDelete
  3. ஒவ்வொன்றும் வரிகள் அல்ல வலிகள்.

    பிரிவின் வலி யாரரிவார்

    பிரிந்திருப்பவரை விட.

    ரொம்ப நல்லாயிருக்கு ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  4. என்ன தலிவா, உங்க துணையோட நினைவு வாட்டுது போல.
    உங்களை ஒரு, தொடர்பதிவுக்கு அழைத்து உள்ளேன், நேரம்
    கிடைக்கும்போது எழுதுங்களேன்.

    ReplyDelete
  5. anne " maadellam " ithula use pannatheenga pls sariyaa ottaathathumaathiyaana feeling sorry to say that

    ReplyDelete
  6. பிரிவின் வலி.... நல்லா இருக்கு ஸ்டார்ஜன்.

    ReplyDelete
  7. ஹூம்! கவிதை பெருமூச்சு விட வைக்குது! அருமை!!

    ReplyDelete
  8. என்னாலே அரசவையில கொஞ்சம் நேரம் இருக்க முடியல.. அந்தப்புர நினைப்பாவே இருக்கு.. உங்கள் கவிதை, எனக்கு கொஞ்சம் ஆறுதல்..

    :-)))

    ReplyDelete
  9. புகைப்படம்தான் அழகான கவிதை
    உங்கள் புலம்பல்கள் அக்கவிதைக்கான முன்னுரை :)

    ReplyDelete
  10. வலிக்குது குரு...என்ன்பபண்ண???

    ReplyDelete
  11. //மனதை தொலைத்துவிட்டு

    நீயும் நானும்

    ஆளுக்கொரு மூலையில்...

    பிரிவின் வலியில்

    துவளும் எங்களை

    //

    செமி பேச்சிலரின்(கல்யாணம் முடிந்தும் பேச்சிலர் லைஃப்) பாடு இதுதாங்க, நல்லா சொல்லிருக்கீங்க‌

    ReplyDelete
  12. வசன நடையில் ரசிக்கும்படியான படைப்பு

    ReplyDelete
  13. வாங்க டிவிஆர் சார்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  14. வாங்க ராமலட்சுமி மேடம்

    கண்டிப்பாக இறைவன் அருள் கிடைக்கும்.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  15. வாங்க ஸாதிகா

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  16. வாங்க அக்பர்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  17. வாங்க நண்பா சைவகொத்துப்பரோட்டா

    அழைப்புக்கு மிக்க நன்றி; விரைவில் எழுதுகிறேன்.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  18. வாங்க பாலா

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  19. வாங்க ஸ்டீபன்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  20. வாங்க சேட்டைக்காரன்

    ஆமா சேட்டை, பெருமூச்சுதான் விடமுடியும்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  21. வாங்க கட்டபொம்மன்

    மன்னருக்கு குசும்பப்பாரு

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  22. வாங்க Monks

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  23. வாங்க பிரதாப்

    கஷ்டம்தான் சிஷ்யா..

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  24. வாங்க அபு அஃப்ஸர்

    சரியாச் சொன்னீங்க அபு அஃப்ஸர்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  25. வாங்க நீச்சல்காரன்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  26. நீயும் நானும்

    ஆளுக்கொரு மூலையில்...

    பிரிவின் வலியில்

    துவளும் எங்களை

    மீட்க மாட்டாயா

    எங்கள் இறைவா..//

    இதைப்படித்தபின் துயரம் அதிகமாகிவிட்டது ஸ்டார்ஜன்

    ReplyDelete
  27. பிரித்து வைத்து ஒரு காலம் ....இணைத்து வைக்கும் ஒரு காலம்.
    காலம் கனிந்து வர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  28. தங்கள் கவிதையின் ஒவ்வொரு வரிகலும், நெஞ்சை குத்துகிறது.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  29. //ஆறும் மனமும தேடாத விழியும் எங்கேனும உண்டா?.//
    கவிதை அருமை..

    ReplyDelete
  30. வாங்க தேனம்மை அக்கா

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  31. வாங்க நிலாமதி

    காலம் கனிந்து வரும் என்ற நம்பிக்கை.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  32. வாங்க punnagaimannan

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  33. வாங்க சே.குமார்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  34. நல்லாயிருக்குங்க.........
    கடவுளிடம்வேண்டுகின்றேன்...
    உங்களுக்காக

    வசதியிருந்தால் நம்ம பக்கமும் வரலாம்தானே..........

    ReplyDelete
  35. வாங்க விடிவெள்ளி

    இதோ வந்திடுதேன்...

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  36. //ஆறும் மனமும்

    தேடாத விழியும் எங்கேனும்

    உண்டா?.. சொல்வீர்//

    ????................!!!!.....????

    நோ கமெண்ட்ஸ்

    ReplyDelete

இது உங்கள் இடம்

தமிழில் எழுத‌

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் எழுத இங்கே சொடுக்கவும்